உங்க ஸ்மார்ட்போனில் இந்த 4 ஆப்ஸ் இருந்தால், சரியான கேடி தான் நீங்க.!

|

சந்தேகம் என்று வந்துவிட்டால் மனிதர்களை விட மிககேவலாமான பிறவியொன்று இருக்கவே முடியாது. அதுவொன்றும் அவ்வளவு பெரிய தேசவிரோத குற்றமும் அல்ல, இயல்புதான்.!

உங்க ஸ்மார்ட்போனில் இந்த 4 ஆப்ஸ் இருந்தால், சரியான கேடி தான் நீங்க.!

முன்பெல்லாம் நாம் உளவு பார்ப்பதற்கும், நம்மை ஏமாற்றுபவர்களுக்கு எதிரான சாட்சிகளை திரட்டுவதற்கு மின்னஞ்சல்கள், மெசேஜ்கள் அல்லது ப்ரவுசிங் ஹிஸ்டரி போன்றவைகள் நோண்டுவோம். அதன் வழியாக நம்மை ஏமாற்றுபவரை நாம் எளிதாக கண்டறிந்து (காதலாக இருந்தால்) காதல் முறிவு முதல் (கல்யாணமாகி இருந்தால்) கை-கால் முறிவு வரை நிகழ்த்துவோம்.!

மிகவும் நுட்பமானவர்களாக இருக்கிறார்கள்.!

மிகவும் நுட்பமானவர்களாக இருக்கிறார்கள்.!

ஆனால், இன்றைய தலைமுறை ஏமாற்றுவதில் பிஎச்டி பட்டம் வாங்குய அளவிற்கு மிக நூதனமாக ஏமாற்றுகிறார்கள். மெஸேஜ், இமெயில் போன்ற வெளிப்படையான தடங்களையெல்லாம் கசிய விடமால் மிகவும் நுட்பமானவர்களாக இருக்கிறார்கள்.

குறிப்பிட்ட ஆப்ஸ்கள்.!

குறிப்பிட்ட ஆப்ஸ்கள்.!

அப்படியான ஏமாற்றுக்காரர்களை - அவர்களின் போக்கிலேயே சென்று - கண்டறிய சில பிரதான வழிகள் இருக்கிறது. அதில் ஒன்றுதான் அவர்கள் பயன்படுத்தும் சில குறிப்பிட்ட ஆப்ஸ்கள்.

குற்றங்கள் மற்றும் துரோகங்கள்.!

குற்றங்கள் மற்றும் துரோகங்கள்.!

குற்றங்கள் மற்றும் துரோகங்களை மறைக்க உதவும், பெரிய எண்ணைக்கையிலான பயன்பாடுகள் ப்ளே ஸ்டோர்களில் கிடைக்கின்றன. அதில் சில ஆப்ஸ்கள் மிகவும் பிரபலம். அப்படியான ஆப்ஸ்கள் உங்கள் பார்ட்னரின் ஸ்மார்ட்போனில் இருந்தால் "ஒருவேளை" அவர் உங்களை ஏமாற்றலாம் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டியது தான்.!

பிரைவேட் போட்டோ (Private Photo)

பிரைவேட் போட்டோ (Private Photo)

ஒருவேளை உங்கள் பார்ட்னர் உங்களை ஏமாற்றுவதற்கான அறிகுறிகளை நீங்கள் கண்டால், அவரின் ஸ்மார்ட்போனை எடுத்து நேராக கால்குலேட்டரை திறக்கவும். ஏனெனில் இந்த ஆப்பின் லோகோ ஆனது கால்குலேட்டர் போல காட்சியளிக்கும்.

இரகசிய புகைப்படங்கள்.!

இரகசிய புகைப்படங்கள்.!

கால்குலேட்டர் வடிவத்தில் வெளியில் இருந்தே தன்னை மறைத்துக்கொள்ளும் இந்த பிரைவேட் போட்டோ ஆப் ஆனது உள்நுழைய பாஸ்வேர்ட் ஒன்றையும் கேட்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் சரியான கடவுச்சொல்லை உள்ளிட்டால், அது தானாகவே குறிப்பிட்ட ஃஸ்மார்ட்போனில் உள்ள ஒரு பிரதான புகைப்பட ஆல்பத்தை அடைந்து அங்கு இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை வெளிப்படுத்தும்.

டைகர் டெக்ஸ்ட் (Tiger Text)

டைகர் டெக்ஸ்ட் (Tiger Text)

இது ஒரு அதிகாரப்பூர்வமாக ஏமாற்றும் பயன்பாடாக இல்லாவிட்டாலும் கூட, இது பயனர்கள் தங்கள் மெஸேஜ்களை மறைக்க அனுமதிக்கின்றது.அதுமட்டுமினிற் குறிப்பிட்ட நபர் அழைக்கும் போது "அவுட் ஆப் சர்வீஸ் ரிங்டோன்" ஒன்றையும் ஒலிக்கச்செய்ய இந்த ஆப் உதவுகிறது.

உஷார்.. உஷார்.!

உஷார்.. உஷார்.!

இது மிகவும் வணிகத்தன்மை நோக்கம் கொண்டு உருவாக்கம் பெற்றகாக கூறப்பட்டாலும் தற்போது ஏமாற்றுக்காரர்களுக்கு மிகவும் பொருத்தமான ஒரு பயன்பாடாக உருமாறிவிட்டது. ஒருவேளை உங்கள் பார்ட்னர் இந்த ஆப்பை கொண்டிருந்தால் சற்று உஷாராகி கொள்ளுங்கள்.!

நொசி ட்ராப் (Nosy Trap)

நொசி ட்ராப் (Nosy Trap)

உங்கள் பார்ட்னர் எதையோ மறைக்க விரும்புகிறார், அதே சமயம் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சமும் கொண்டுள்ளார் என்றால், அவர் நொசி ட்ராப் பயன்பாட்டை நிறுவி இருக்கலாம். ஏனெனில் இந்த ஆப் ஆனது கண்காணிப்போர்களை சுட்டிக்காட்டும். அதாவது சந்தேகப்படும் உங்களை போட்டுக்கொடுக்கும்.

நீங்கள் மாட்டிக்கொள்வீர்கள்.!

நீங்கள் மாட்டிக்கொள்வீர்கள்.!

அதாவது உங்கள் பார்ட்னரின் தொலைபேசியை அவர் இல்லாத சமயத்தில் எடுத்து நீங்கள் சோதனை செய்யும் பட்சத்தில் இந்த பயன்பாடு இயங்கும். யார் ஸ்மார்ட்போனை எடுக்கிறார்கள் என்பதை செல்பீ கேமரா கொண்டு புகைப்படம் எடுக்கும். அவ்வளவு தான் நீங்கள் மாட்டிக்கொள்வீர்கள்.!

பாக்ஸ் பிரைவேட் மெஸேஜ் (Fox Private Message)

பாக்ஸ் பிரைவேட் மெஸேஜ் (Fox Private Message)

உங்கள் பார்ட்னர் உங்களை பார்த்த உடனேயே அவரின் ஸ்மார்ட்போனை ஒரு குலுக்கு குலுக்குகிறார் என்றால் உடனே உஷாராகி கொள்ளுங்கள். ஏனெனில் பாக்ஸ் பிரைவேட் மெஸேஜ் ஆப் ஆனது குலுக்குகையில் ஸ்மார்ட்பபோனில் உள்ள மெஸேஜ்களை டெலிட் செய்யும் அம்சத்தினை கொண்டுள்ளது.

நேரடியாக பயன்பாட்டிற்குள்.!

நேரடியாக பயன்பாட்டிற்குள்.!

மேலும் இந்த ஆப் கண்டறிய முடியாத ஒரு மாறுவேடத்தில் மறைந்திருக்கும். இந்த பயன்பாட்டில் சேமிக்கப்படும் தனிப்பட்ட எண்களில் இருந்து மெஸேஜ்கள் நேரடியாக பயன்பாட்டிற்குள் செல்லும். அவைகள் வழக்கமான மெஸேஜ் இன்பாக்ஸில் காணப்படாது.

Best Mobiles in India

English summary
If your partner have any of these apps in their phone, they are probably cheating on you. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X