Whatsapp உடன் இனைந்து ICICI புதிய வாட்ஸ்அப் பேங்கிங் சேவை அறிமுகம்! எல்லோரும் யூஸ் பண்ணலாம்!
இந்தியாவின் தனியார் வங்கி நிறுவனமான ஐசிஐசிஐ வங்கி தற்பொழுது வாட்ஸ்அப் நிறுவனத்தின் இணைந்து புதிய வாட்ஸ்அப் பேங்கிங் (WhatsApp Banking) என்ற புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.

புதிய வாட்ஸ்அப் பேங்கிங் சேவை
நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணத்தினால் வங்கிகளும் முடக்கப்பட்டிருக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையைச் சரி செய்யும் நோக்கத்தில் தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய வாட்ஸ்அப் பேங்கிங் என்ற சேவையை ஐசிஐசிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது. ஆன்லைன் வங்கி செவியிற் போல் இந்த வாட்ஸ்அப் பேங்கிங் சேவையும் பயன்படும் என்று ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.

அக்கவுண்ட் பேலன்ஸ் முதல் கடன் சலுகை வரை
வாட்ஸ்அப் பேங்கிங் சேவையின் மூலமாக ஐசிஐசிஐ வாடிக்கையாளர்கள் அவர்களின் ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்அப் அம்சத்தை பயன்படுத்தி அவர்களின் அக்கவுண்ட் பேலன்ஸ், கடைசி மூன்று பரிவர்த்தனை விபரங்கள், அருகில் உள்ள வங்கி கிளைகள் மற்றும் ஏடிஎம்களைக் கண்டறிதல், கடன் சலுகை விபரங்கள், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைத் பிளாக் செய்வது போன்ற அடிப்படை வங்கி சேவைகளை வாட்ஸ்அப் வழியாக அணுகலாம்.

இரண்டு மொழிகளில் வாட்ஸ்அப் பேங்கிங் சேவை
இந்த வாட்ஸ்அப் பேங்கிங் சேவை ஆங்கிலம் மற்றும் ஹிந்தி என்று இரண்டு மொழிகளில் செயல்படுகிறது. இதற்கான பிரத்தியேக தொலைப்பேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சேவை பயனர்களுக்குத் தேவைப்படும் எந்தவிதமான வங்கி சேவையையும் நீங்கள் "டைப்" செய்து அறிந்துகொள்ளலாம். இந்தியில் சேவையைப் பயன்படுத்த விரும்புவோருக்குத் தனி தொலைப்பேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது.

24 மணி நேர சேவை
புதிய வாட்ஸ்அப் பேங்கிங்கை சேவை 24 மணி நேர சேவையாகச் செயல்படும் என்று ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது. இதில் கவனிக்கப்படவேண்டிய சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்த வாட்ஸ்அப் வங்கி சேவை ஐசிஐசிஐ பயனர்கள் மட்டுமின்றி மற்ற வங்கி பயனர்கள் கூட பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த வாட்ஸ்அப் சேவையைப் பயன்படுத்தி அருகிலுள்ள வங்கி கிளைகளையும், வங்கி ஏடிஎம்களையும் கண்டறிந்துகொள்ளலாம்.

ஐசிஐசிஐ வங்கியின் வாட்ஸ்அப் பேங்கிங் சேவையைப் பயன்படுத்துவது எப்படி?
- உங்கள் ஸ்மார்ட்போன் காண்டாக்ட்டில் முதலில் இந்த ஐசிஐசிஐ வங்கி வாட்ஸ்அப் பேங்கிங் சேவைக்கான தொலைப்பேசி எண்களை சேவ் செய்யவேண்டும்.
- ஆங்கிலத்தில் சேவையைப் பயன்படுத்த +91 93249 53001 என்ற எண்ணை சேவ் செய்யுங்கள்.
- ஹிந்தியில் இச்சேவையைப் பயன்படுத்த +91 9324953010 என்ற எண்ணை சேவ் செய்யுங்கள்.
- பின்னர் உங்கள் வாட்ஸ்அப் காண்டாக்ட் ஓபன் செய்து இந்த எண்ணிற்கு 'Hi' என்று மெசேஜ் செய்யுங்கள்.
- இப்போது உங்களுக்கு ஆட்டோமேட்டட் ரிப்ளை அனுப்பப்படும். அதில் உங்களுக்குத் தேவைப்படும் வங்கி சேவைகளுக்கான Keywords பட்டியல் கொடுக்கப்படும்.
- இப்போது, உங்களுக்குத் தேவைப்படும் சேவைக்கான குறிப்பிட்ட கீவேர்ட் சொற்களை டைப் செய்து ரிப்ளை செய்ய வேண்டும்.

குறிப்பிட்ட கீவேர்ட் டைப் செய்யுங்கள்

சதேகமுடையர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு
அக்கவுண்ட் பேலன்ஸ் விபரங்களை அறிய 'Balance,' 'Bal,' 'ac bal, போன்ற கீவோர்டுகளை நீங்கள் டைப் செய்து அனுப்பலாம். உங்களுடைய கடைசி மூன்று பரிவர்த்தனை விபரங்களை அறிந்துகொள்ள 'stmt,' 'History' 'Statement' போன்ற கீவோர்டுகளை நீங்கள் டைப் செய்து அனுப்பலாம். இந்த சேவை மக்களைச் சென்றடைய ஐசிஐசிஐ வங்கி முயற்சி செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications