இந்த தொழில்நுட்ப சாதனங்களுடன் 2020-ஐ தொடங்கினால் சிறப்பு!

|

பாப்அப்கள், டிங்டிங் சத்தம், ரிங்டோன் மற்றும் பிற எரிச்சலூட்டும் நோட்டிபிகேசன்கள் மூலம் நம்மை வேலையுடன் பிணைக்க டிஜிட்டல் கயிறாக மாறுவது தொழில்நுட்பத்திற்கு எளிதானது. ஆனால் கொஞ்சம் சிந்தனையும் திட்டமிடுதலும் இருந்தால், தொழில்நுட்பத்தை நமக்காக வேலை செய்யவைக்கவும், மேலும் பலவற்றை நாம் செய்யவும், அதிகமான வேலையில்லா நேரத்தை கொண்டிருப்பதற்கும், குறைந்த மன அழுத்தத்தை உணருவதற்கும் சாத்தியமாகும்.

2020 ஆம் ஆண்டு சிறப்பாக தொடங்குவதற்கான சிறந்த தொழில்நுட்ப பொருட்களின் சிறிய பட்டியல் இதோ. நிஜ உலக சூழ்நிலைகளில் இந்த பட்டியலில் உள்ள அனைத்தும் சோதனை செய்யப்பட்டுள்ளன. இங்கே இடம்பெறும் அனைத்தும் நாம் தினமும் பயன்படுத்த வேண்டிய மற்றும் நம்பியிருக்க கூடிய தொழில்நுட்பமாகும்.

20-பின் யூ.எஸ்.பி-சி மேக்னடிக் ப்ரேக்வே கனெக்ட்டர்

20-பின் யூ.எஸ்.பி-சி மேக்னடிக் ப்ரேக்வே கனெக்ட்டர்

இது நமது வாழ்க்கையையே புரட்சிகரமாக மாற்றக்கூடியது. பழைய மேக்புக் மேக்சேப் கனெக்டர்களும் அவ்வாறானவையே. இவை பழைய மேக்புக்-ஐ ரீப்பேர் செய்வது, புதிய மேக்புக் வாங்குவது போன்றவற்றிற்காக பல நூறு டாலர்கள் செலவளிப்பதில் இருந்து உங்களை காப்பாற்றும். எந்த பிரபல பிரண்டும் இல்லாமல், வெறும் 25 டாலர் என்ற மலிவான விலையில் கிடைக்கும் இது நிச்சயம் நம்மை ஆச்சர்யபடுத்துகிறது.

ஆனால் இவை நிச்சயமாக சிறப்பானது மற்றும்

அருமையானதும் கூட . இவை மேக்புக்ஸுக்கு மட்டுமல்ல, யூ.எஸ்.பி-சி போர்ட்டைக் கொண்ட எந்த கேஜெட்டிற்கும் சரியானவை. கனெக்டரின் இரண்டு பகுதிகளையும் பிடிப்பாக இணைக்க வைக்கும் அளவுக்கு காந்தம் வலுவாக உள்ளது. ஆனால் இணைக்கப்பட்ட சாதனத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தாதவாறு

கேபிள் கடினமாக இழுக்கப்பட்டால் இணைப்பு பிரிந்துவிடும்.

100W (20V / 5A) சார்ஜிங் வசதிகொண்ட இந்த அடாப்டர், அனைத்து மேக்புக்ஸ்கள் மற்றும் பிற மடிக்கணினிகள் மற்றும் யூ.எஸ்.பி-சி சாதனங்களுக்கும் சரியானதாக இருக்கும். மேலும் 10 ஜி.பி.பி.எஸ் தரவு பரிமாற்றம் மற்றும் 4 கே @ 60 ஹெர்ட்ஸ் வீடியோ வெளியீடு வசதியையும் வழங்குகிறது.

ஜென்டியூர் சூப்பர்டேங்க் யூஎஸ்பி-சி போர்டபிள் சார்ஜர்

ஜென்டியூர் சூப்பர்டேங்க் யூஎஸ்பி-சி போர்டபிள் சார்ஜர்

இது சிறியது அல்ல, 4.7×2.9×1.6 இன்ச் அளவுடையது. இது இலகுவானது அல்ல, 500கிராம் எடையுடையது. இது விலை மலிவானது அல்ல, 191.99 டாலர் மதிப்புடையது. ஆனால் நீங்கள் ஒரு மடிக்கணினியுடன் பயணம் செய்தால் அல்லது பல சாதனங்களை உங்களுடன் எடுத்துச் சென்றால், இது தான் சிறந்த போர்ட்டபிள் பவர் பேங்க்.

இது 27,000 எம்ஏஎச் திறன் கொண்டது மட்டுமல்லாமல் (99.9Wh - எனவே பெரும்பாலான விமான பயணத்திற்கு நல்லது), 100W வெளியீட்டைக் கொண்டுள்ளதால், இது 15 அங்குல மேக்புக் ப்ரோவை முழு வேகத்தில் சார்ஜ் செய்வதுடன், அதன் இயக்கநேரத்தில் அற்புதமான 8 மணிநேரத்தை சேர்க்கிறது.இதை மீண்டும் ரீசார்ஜ் செய்வதற்கு முன்பு ஐபோன் எக்ஸ்எஸ்-ஐ ஏழு முறை ரீசார்ஜ் செய்யலாம்.

ஸ்மார்ட்வாட்ச்கள், புளூடூத் இயர்போன்கள் மற்றும் ஃபிட்னெஸ் பேண்டுகள் போன்ற குறைந்த சக்தி சாதனங்களை ரீசார்ஜ் செய்வதற்கான குறைந்த சக்தி பயன்முறையையும் இந்த பவர் பேங்க் கொண்டுள்ளது (மின்சுமை மிகக் குறைவாக இருந்தால் பல மலிவான பவர் பேங்க்-கள் அணைந்துவிடும்)

இரண்டு யூ.எஸ்.பி-சி போர்ட்கள் மற்றும் இரண்டு யூ.எஸ்.பி-ஏ போர்ட்களை கொண்டுள்ள இந்த ஜென்டியூர் சூப்பர் டேங்க், பல சாதனங்களுக்கு சிறந்த சார்ஜிங் மையமாகும்.

சவுண்ட்கோர் லிபர்ட்டி 2 புரோ

சவுண்ட்கோர் லிபர்ட்டி 2 புரோ

எல்லோரும் உடற்பயிற்சிகளுக்கான மலிவான இயர்பட்களை பயன்படுத்தும் வேளையில், ​​ ஓய்வெடுக்கும்போது உயர்தர ஆடியோ தயாரிப்புகளை அனுபவிப்பர். கடந்த சில வாரங்களாக நிறைய புதிய விஷயங்களைச் சோதிப்பதில் மும்முரமாக இருந்தாலும், சவுண்ட்கோர் லிபர்ட்டி 2 ப்ரோ மிகவும் பிடித்தமான ஒன்று.

இதை பிடிக்க காரணம், ஆடியோ தரம் மட்டுமல்லாது காதுகளுக்கு இதமானதும் இருப்பதும் ஆகும். இது சவுகரியமாக இருப்பதுடன் நீண்ட பேட்டரி ஆயுளையும் கொண்டுள்ளன. ( 8 மணிநேர பேட்டரி ஆயுள் உள்ள நிலையில், சார்ஜ் செய்ய 32 மணிநேரம் வரை ஆகும். மேலும் இதை யூ.எஸ்.பி-சி அல்லது க்யூ-சான்றளிக்கப்பட்ட சார்ஜரைப் பயன்படுத்தி ரீசார்ஜ் செய்யலாம்). மேலும் இவை வேகமாக சார்ஜ் ஆகும் அம்சத்தையும் கொண்டுள்ளன ( 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 2 மணிநேரம் பயன்படுத்தலாம்).

டைல் ப்ரோ மற்றும் டைல் ஸ்லிம்

டைல் ப்ரோ மற்றும் டைல் ஸ்லிம்

நம் சாவி மற்றும் வாலெட் -ஐ எங்காவது வைத்துவிட்டு கண்டுபிடிப்பது தான் மிக சிரமமான ஒன்று. தற்போது தொழில்நுட்பத்தின் மூலம் அது சாத்தியமாகியுள்ளது. டைல் ப்ரோ-ஐ சாவியிலும், டைல் ஸ்டிக்கர்களை பேக்பேக் மற்றும் லக்கேஜ்களிலும், டைல் ஸ்லிம்-ஐ வாலெட்களிலும் பயன்படுத்தி, அவற்றை எளிதாக கண்டறியலாம்.

இதைப் பயன்படுத்தி தொலைந்துபோன ஐபோனை கூட கண்டுபிடிக்க முடியும்.

யூஎஸ்பி சார்ஜ் வசதியுள்ள ஏஏ மற்றும் ஏஏஏ பேட்டரிகள்

ஆம், நாம் கிட்டத்தட்ட 2020ஆம் ஆண்டில் நுழைந்துவிட்டோம். ஆனாலும் நமக்கு இன்னும் AA மற்றும் AAA பேட்டரிகள் தேவை!

இவற்றை பயன்படுத்தி முடித்ததும், சார்ஜ் செய்ய முடிந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும். தற்போது இது சாத்தியம் தான். ஆனால் இதற்காக தனி சார்ஜர் எல்லாம் தேவையில்லை. இந்த யூஎஸ்பி சார்ஜர் மூலம் எளிதாக சார்ஜ் செய்து மீண்டும் பயன்படுத்த முடியும்.திறன் நன்றாக இருப்பதுடன் அவை நீடித்து நிலைக்கின்றன. இது AA அல்லது AAA பேட்டரி தேவைப்படும் சாதனங்களுக்கு சரியான தீர்வாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
Start your year right with these superb, super-useful tech gadgets that will boost your productivity, and reduce your day-to-day tech stress levels.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X