டிராய் டி.என்.டி. ஐ.ஓ.எஸ். ஆப் மூலம் ஸ்பேம் அழைப்புகளை பிளாக் செய்வது எப்படி?

தற்சமயம் டிராயின் டி.என்.டி. ஆப் ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது, அந்த வகையில் பயனர்கள் தங்களது ஐபோன்களில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

|

ஐ.ஓ.எஸ். சாதனங்களில் டிராயின் டி.என்.டி. செயலியை அனுமதிப்பது பற்றி இந்தியாவில் மத்திய டெலிகாம் ஒழுங்கமுறை ஆணையமான் டிராய் மற்றும் ஆப்பிள் நிறுவனத்திடையே நடைபெற்ற மோதல் அனைவரும் அறிந்ததே. பயனர்களின் தனியுரிமை பாதுகாப்பு கருதி ஆப்பிள் நிறுவனம் டிராயின் டி.என்.டி. செயலியை அனுமதிக்கக்கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தது. எனினும் ஸ்பேம் அழைப்புகளை களையெடுக்கும் நோக்கில் அரசாங்கம் இதில் தலையிட்டு கடும் நடவடிக்கைகள் எடுக்க காரணமாகிவிட்டது.

 டிராய் ஐ.ஓ.எஸ். ஆப் மூலம் ஸ்பேம் அழைப்புகளை பிளாக் செய்வது எப்படி?

தற்சமயம் டிராயின் டி.என்.டி. ஆப் ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது, அந்த வகையில் பயனர்கள் தங்களது ஐபோன்களில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலி ஸ்பேம் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறது. டி.என்.டி. செயலி கொண்டு என்னவெல்லாம் செய்ய முடியும் என்றும் அதன் அம்சங்கள் எவ்வாறு பயனளிக்கும் என்பதை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

வழிமுறை 1 - டி.என்.டி. சேவைக்கு பதிவு செய்வது
டிராயின் தேசிய டு நாட் கால் முகமையில் நீங்கள் ஏற்கனவே பதிவு செய்திருந்தால், இந்த வழிமுறையை நீங்கள் பின்பற்ற வேண்டாம். இதனை டிராய் செயலியில் இருந்தபடி மேற்கொள்ளலாம். இதற்கு 1909 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். ஒன்றை அனுப்ப வேண்டும். இந்த செயலி உங்களுக்கான டி.என்.டி. பரிந்துரைகளை வழங்கி எஸ்.எம்.எஸ். அனுப்ப தயார்ப்படுத்தும். தேசிய டு நாட் கால் முகமையில் பதிவு செய்ய சில நாட்கள் ஆகும்.

வழிமுறை 2 - எக்ஸ்டென்ஷன் செயல்படுத்த வேண்டும்
பதிவு செய்வது உடனே நடைபெறாது என்றாலும், செயலியின் மற்ற அம்சங்களை நீங்கள் ஆக்டிவேட் செய்யலாம். அம்சங்களை பயன்படுத்த, உங்களது ஐபோனின் செட்டிங்களை செயல்படுத்த வேண்டும். இதை செய்ய ஐபோனின் செட்டிங்ஸ் -- போன் -- எஸ்.எம்.எஸ். / கால் ரிப்போட்டிங் உள்ளிட்ட ஆப்ஷன்களை தேர்வு செய்து டிராயின் டி.என்.டி. ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது செயலி உங்களுக்கு வரும் அழைப்புகள் பற்றிய விவரங்களை பெற்றுக் கொள்ளும். இது தனியுரிமை பாதுகாப்பிற்கு எதிரானதாக இருந்தாலும், இதை கொண்டு மட்டுமே சேவையை ஆக்டிவேட் செய்ய முடியும்.

வழிமுறை 3 - ஸ்பேம் ரிப்போட்
முந்தைய வழிமுறைகளை செயல்படுத்தியதும், ஆப்பிள் ஐபோனில் இருந்தபடி ஸ்பேம் அழைப்புகளை தெரிவிக்க முடியும். இதை செய்ய ரீசென்ட் கால்ஸ் ஆப்ஷனில் இருந்து குறிப்பிட்ட மொபைல் நம்பரில் இருந்தபடி இடதுபுறமாக ஸ்வைப் செய்து பின் ரிப்போட் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு ஸ்பேம் அழைப்புகளை ரிப்போட் செய்யலாம்.

இதே வழிமுறையை பின்பற்றி ஸ்பேம் எஸ்.எம்.எஸ்.களையும் தெரிவிக்க முடியும். இதற்கு ரிப்போட் மெசேஜ் எனும் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த ஆப்ஷன் உங்களது கான்டாக்ட்களில் இல்லாதவர் மூலம் உங்களுக்கு வரும் மெசேஜ்களில் தானாக செயல்படுத்தப்பட்டிருக்கும். எனினும், இதனை பயன்படுத்த தேசிய டு நாட் கால் முகமையில் பதிவு செய்திருக்க வேண்டும்.

 டிராய் ஐ.ஓ.எஸ். ஆப் மூலம் ஸ்பேம் அழைப்புகளை பிளாக் செய்வது எப்படி?

ரிப்போட் செய்ய 1909 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். இந்த எஸ்.எம்.எஸ்.களுக்கு எவ்வித கட்டணமும் கிடையாது, இதனால் பயனர்கள் எவ்வித கவலையும் இன்றி மெசேஜ் அனுப்பலாம்.

இந்த செயலி நேரடியாக ஸ்பேம் அழைப்புகளை பிளாக் செய்யாது என்றாலும், ரிப்போட் செய்யப்படும் நம்பர்கள் டிராய் முகமையில் பதிவு செய்யப்பட்டு விடும். இந்த நம்பர்கள் விளம்பர நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு விடும் என்பதால், அவர்கள் உங்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ள மாட்டார்கள்.

Best Mobiles in India

English summary
How to use TRAI DND iOS app to block spam calls : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X