Home
Apps

Twitter பிடிக்கலையா? BlueSky பயன்படுத்துங்க! எப்படி பெறுவது?

ட்விட்டரில் (Twitter) எலான் மஸ்க் (Elon Musk) பண்ணும் சேட்டைகள் தாங்க முடியாமல், "ட்விட்டர் மாதிரியே வேற ஆப்ஸ் இருந்த மாறிடலாமே" என்று திட்டம் போட்டவங்களுக்கு, இருக்கவே இருக்கு புளூஸ்கை (BlueSky) ஆப். இந்த புளூஸ்கை ட்விட்டர் மாதிரி எளிதாக கிடைக்காது. இருப்பினும், எப்படி பெறுவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க், வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொண்டார் என்றே சொல்ல வேண்டும். இந்த நிறுவனம் அவர் கைக்கு வருவதற்கு முன்பு, பொருளாதார நெருக்கடியை சந்தித்துவந்தது. இந்த நேரத்திலேயே எலான் மஸ்க், தனது ட்விட்டர் பக்கத்தில் பிரபலங்களை கிண்டல் செய்வது, சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பது என்று செய்துவந்தார்.

Twitter பிடிக்கலையா? BlueSky பயன்படுத்துங்க! எப்படி பெறுவது?

இதன் காரணமாக, ட்விட்டர் நிறுவனம் அவரது ட்வீட்களை நீக்கும் நடவடிக்கையை எடுத்தது. இதனால் ஆத்திரமடைந்த எலான் மஸ்க், ட்விட்டரில் கருந்து சுதந்திரத்துக்கு இடமில்லை. இந்த நிறுவனம் என்னிடம் இருந்தால், அதை வழங்குவேன் என்று தெரிவித்திருந்தார். அதோடு ட்விட்டரின் சில பங்குகளை வாங்கி குவித்தார்.

இதைத்தொடர்ந்து 2022ஆம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை பல லட்சம் கோடி ரூபாய் செலவு செய்து மொத்தமாக வாங்கிவிட்டார். இவ்வளவு செலவு செய்து வாங்கிய ட்விட்டரில், எதிர்பார்த்த லாபம் எலான் மஸ்க்கு கிடைக்கவில்லை என்பதே உண்மை. இதனால், ட்விட்டரில் பல்வேறு மாற்றங்களை அதிரடியாக கொண்டுவந்தார்.

அதிக ஃபாலோயர்களை கொண்ட பிரபலங்களுக்கு வழங்கப்படும் ப்ளூ டிக்கிற்கு கட்டணத்தை உயர்த்தினார். இந்த ப்ளூ டிக்கை போலவே கோல்டன், கிரே போன்ற கலர்களில் வெரிஃபைட் டிக் அம்சங்களை அறிமுகப்படுத்தினார். பல லட்சக்கணக்கான ஃபாலோயர்களை கொண்ட அரசியல்வாதிகள், நடிகர்கள் உள்ளிட்டோர் மாதாந்திர சந்தா கட்டாவில்லை என்று கூறி அவர்களின் ப்ளூ டிக்கை பறித்தார்.

அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், தனுஷ், சிம்பு, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பிரபலங்களின் ப்ளூ டிக் பறிக்கப்பட்டு, பின்னர் மீண்டும் கொடுக்கப்பட்டது. இதே கதைதான் உலகம் முழுவதும் நடந்து வருகிறது. இதனால் ட்விட்டர் பயனர்கள் நொந்துபோய் விட்டனர்.

ட்விட்டர் போல வேறு ஆப் கிடைக்காதா என்று ட்விட்டரிலேயே கேட்க தொடங்கிவிட்டனர். இவர்களுக்கென புளூஸ்கை (BlueSky) என்னும் ஆப் இருக்கிறது. இந்த ஆப் வேறு யாரோ ஒருவருடையது அல்ல, எலான் மஸ்க் கைக்கு ட்விட்டர் போவதற்கு முன்பு, அதில் தலைமை செயல் அதிகாரியாக இருந்த ஜாக் டோர்ஸியின் (Jack Dorsey) உடையதுதான்.

இந்த ஆப் 2021ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் அதன் பயனர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்துவந்த நிலையில் இப்போது அதிகரித்து வருகிறது. இந்த ஆப்பை அவ்வளவு எளிதாக யாரும் டவுன்லோட் செய்து பயன்படுத்திவிட முடியாது. ஏனென்றால், இதில் கருத்து சுதந்திரத்துக்கு முழு உரிமை அளிக்கப்பட்டுள்ளது.

இதில் நீங்கள் பதிவிடும் கருத்துகளை நிறுவனமே நினைத்தாலும் அழிக்க முடியாது. அதேபோல உங்களது கணக்கை நிறுவனம் தடை செய்யவும் முடியாது. இப்படி பல அம்சங்கள் கொண்டிருப்பதால், அதை பெறுவோர் தவறாக பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்காக யாருக்கும் எளிதாக கிடைக்காத வகையில் பிளோ ஸ்டோரில் இருக்கவில்லை.

புளூஸ்கை ஆப்பை எப்படி பெறுவது ?: இந்த புளூஸ்கை ஆப் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஆப்பை ஏற்கனவே பயன்படுத்திவருவோர், உங்களுக்கு இன்வைட் லிங்க் அனுப்பினால் மட்டுமே நீங்கள் பயன்படுத்த முடியும். இருப்பினும், ப்ளூஸ்கையின் (https://blueskyweb.xyz/) இணையதளத்துக்கு சென்று ஆப்பை பெற விண்ணப்பிக்கலாம்.

முதலில் அந்த இணையப்பக்கத்துக்கு சென்று Bluesky private beta என்னும் லிங்கை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின் ஜாய்ன் வெயிட்லிஸ்ட் (Join Waitlist) டேப் தோன்றும். அதில், உங்களது மெயில் ஐடியை டைப் செய்தால் விண்ணப்பம் பெறப்பட்டுவிடும். இதையடுத்து ஆப்புக்கான லிங்க் வரும்வரை காத்திருக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to use Twitter Alternative Bluesky App Here is Full Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X