Whatsapp இல் 50 நபர் வீடியோ கால் அழைப்பு செய்வது எப்படி? புதிய மெசஞ்சர் ரூம்ஸ் அம்சம்!

|

பேஸ்புக் நிறுவனம், கடந்த மாதம் பேஸ்புக் மெசஞ்சர் பயன்பாட்டிற்கான புதிய மெசஞ்சர் ரூம்ஸ் என்ற அம்சத்தை அறிமுகம் செய்தது. இந்த புதிய அம்சம் ஒரே நேரத்தில் சுமார் 50 நபர்களுடன் வீடியோ அழைப்பை மேற்கொள்ள அனுமதிக்கிறது. அதுவும் பயனர்கள் அந்தந்த பயன்பாடுகளை விட்டு வெளியேறாமல் நேரடியாக வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்களுடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது.

புதிய மெசஞ்சர் ரூம்ஸ் அம்சம்

புதிய மெசஞ்சர் ரூம்ஸ் அம்சம்

இந்த புதிய மெசஞ்சர் ரூம்ஸ் அம்சம் வாட்ஸ்அப்பின் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான பீட்டா பதிப்பில் தற்பொழுது வெளியாகி பயன்பாட்டிற்குக் கிடைக்கிறது. இப்போது, ​​வாட்ஸ்அப் அண்ட்ராய்டு பயனர்கள் இந்த அம்சத்தை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதை வாட்ஸ்அப் நிறுவனம் அதன் கேள்வி மற்றும் பதில் பிரிவில் விளக்கமாக விளக்கியுள்ளது. மெசஞ்சர் ரூம் இல் எப்படி சாட்டிங் அறையை உருவாக்குவது, அதில் எப்படி உங்கள் நண்பர்களை இணைப்பது என்று பார்க்கலாம்.

வாட்ஸ்அப் இல் 50 நபருக்கான வீடியோ கால் அழைப்பு வசதி

வாட்ஸ்அப் இல் 50 நபருக்கான வீடியோ கால் அழைப்பு வசதி

WABetaInfo இன் அறிக்கையின்படி, பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் பீட்டா 2.20.163 வெர்ஷனில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான மெசஞ்சர் ரூம்ஸ் அம்சத்தை வாட்ஸ்அப் தளத்தில் ஒருங்கிணைத்துள்ளது. இந்த புதிய அப்டேட் சாட் மெனுவில் உள்ள ஷேர் ஆப்ஷனுக்குள் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய "மெசஞ்சர் ரூம்ஸ்" விருப்பம் கேலரி மற்றும் டாக்குமெண்ட் ஆப்ஷன்களுக்கு மத்தியில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

விலை ரூ.11,700: 43-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.! சியோமி மீண்டும் அதிரடி.!விலை ரூ.11,700: 43-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.! சியோமி மீண்டும் அதிரடி.!

50 நபர்களுடன் ஒரே சாட் ரூம்

50 நபர்களுடன் ஒரே சாட் ரூம்

மெசஞ்சர் ரூம்ஸ் அம்சம் ஒரே நேரத்தில் 50 நபர்களுடன் குரூப் வீடியோ அழைப்பைப் பயன்படுத்த ஒரு சாட் ரூம் அறையை உருவாக்க மெசஞ்சருக்கு உங்களை வழிநடத்துகிறது. இதுமட்டுமின்றி, மெசஞ்சர் ரூம்ஸ் அறையை உருவாக்குவதற்கான ஷார்ட்கட் ஆப்ஷன்கள், கால்ஸ் டேப் போன்ற வாட்ஸ்அப்பின் பிற பகுதிகளிலும் காணப்படுவதை WABetaInfo அதன் அதிகாரப்பூர்வ பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

கேமரா விருப்பத்தை மாற்றி மெசஞ்சர் ரூம்ஸ் அம்சம்

கேமரா விருப்பத்தை மாற்றி மெசஞ்சர் ரூம்ஸ் அம்சம்

புதிய மெசஞ்சர் ரூம்ஸ் அம்சம் இப்பொழுது உங்கள் வாட்ஸ்அப் சாட் ஷேர் ஆப்ஷனிற்குள் இருக்கும் கேமரா விருப்பத்தை மாற்றி அமைத்துள்ளது. கேமரா விருப்பம் எப்பொழுதும் போல உங்கள் சாட் பாக்ஸ் கீழ் இடத்தில் காணப்படுகிறது. நீங்கள் மெசஞ்சர் ரூம்ஸ் விருப்பத்தை கிளிக் செய்தால், இந்த அம்சம் என்ன என்பதை விளக்கும் அறிமுகத்தை வாட்ஸ்அப் வழங்குகிறது.

புதிய வீடியோ காலிங் அறையை எப்படி உருவாக்கலாம்?

புதிய வீடியோ காலிங் அறையை எப்படி உருவாக்கலாம்?

வாட்ஸ்அப் பயன்பாட்டில், 50 நபர்களுக்கான குரூப் வீடியோ காலிங் அம்சத்தைத் தடையின்றி பயன்படுத்த விரும்பும் பயனர்கள் மெசஞ்சர் ரூம்ஸ் அம்சத்தை எப்படிச் சரியாகப் பயன்படுத்தலாம் என்று இப்பொழுது பார்க்கலாம். புதிய வீடியோ காலிங் அறையை உருவாக்க விரும்பும் பயனர்கள் கீழே குறிப்பிட்டுள்ள முறையைப் பின்பற்றுங்கள்.

ஒரு வினாடியில் 1000 திரைப்படம் டவுன்லோட் செய்யலாம் - புதிய அதிவேக இன்டர்நெட்!ஒரு வினாடியில் 1000 திரைப்படம் டவுன்லோட் செய்யலாம் - புதிய அதிவேக இன்டர்நெட்!

இதை செய்யுங்கள்

இதை செய்யுங்கள்

  • முதலில் வாட்ஸ்அப் ஓபன் செய்து பின்னர் கால்ஸ் என்ற அழைப்பு டேப் பிரிவிற்குச் செல்லுங்கள்.
  • கால் டேப் இல் உள்ள Create a Room விருப்பத்தை ஒரு முறை கிளிக் செய்தால் உங்களுக்கான சாட் ரூம் உருவாக்கப்படும்.
  • அல்லது தனிப்பட்ட காண்டாக்ட் நபரின் சாட் டேப் சென்றும் புதிய மெசஞ்சர் ரூம் உருவாக்கலாம்.
  • தனிப்பட்ட நபரின் சாட் பாக்சில் கீழ் மூலையில் உள்ள பேப்பர் கிளிப் பட்டனை அழுத்தி> மெசஞ்சர் ரூம்ஸ் ஐகானை தட்டவும்.
  • பாப் அப் விருப்பம்

    பாப் அப் விருப்பம்

    • பாப் அப் விருப்பத்தில் Continue in Messenger விருப்பத்தை கிளிக் செய்யவும். பிறகு Try It கிளிக் செய்யுங்கள்.
    • இப்போது சாட் ரூம்ஸ் அறையை உருவாக்க Create Room As என்று ஆப்ஷனை கிளிக் செய்து அறையின் பெயரைப் பதிவிடுங்கள்.
    • அடுத்து, Send Link on WhatsApp அளிக்கச் செய்யவும்.
    • சாட்டிங் ரூம் லிங்க்

      சாட்டிங் ரூம் லிங்க்

      • இப்போது அறை லிங்கை பகிரத் தொடர்புகள் அல்லது குரூப் சாட்களைத் தேர்ந்தெடுக்கவும், பின்னர் திரையில் உள்ள அம்புக்குறியைத் தட்டவும்.
      • Send என்ற பட்டனை அழுத்தி உங்கள் வீடியோ அழைப்பிற்கான லிங்கை அனைவருக்கும் அனுப்பலாம்.
      • விரைவில் அனைத்து பயனர்களுக்கும்

        விரைவில் அனைத்து பயனர்களுக்கும்

        வாட்ஸ்அப் நிறுவனம் அதன் முக்கிய பயன்பாட்டில் இந்த அம்சத்தை இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அம்சம் தற்பொழுது பீட்டா வாட்ஸ்அப் பயன்பாட்டில் மட்டும் பயனர்களின் செயல்பாட்டிற்குக் கிடைக்கிறது. இந்த புதிய மெசஞ்சர் ரூம்ஸ் அம்சம் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
How To Use New WhatsApp Messenger Rooms In Android Smartphone : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X