Home
Apps

வாட்ஸ்அப் செயலியில் லைவ் லொகேஷன் ஷேர் செய்ய சிம்பிள் டிப்ஸ்.!

வாட்ஸ்அப் நிறுவனம் பல அற்புதமான அம்சங்களைக் கடந்த ஆண்டு கொண்டுவந்தது. அதேபோல் இந்த ஆண்டு கூட பல அசத்தலான அம்சங்களை கொண்டுவர உள்ளது வாட்ஸ்அப் நிறுவனம். அதாவது விரைவில் இந்நிறுவனம் பல புதிய அம்சங்களை வழங்கத் திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.அதேபோல் வாட்ஸ்அப் செயலியில் ஒரு வசதி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். அதாவது வாட்ஸ்அப் மூலம் பிறருக்கு உங்கள் லைவ் லொகேஷன் குறித்த தகவலை ஷேர் செய்யும் வசதி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இப்போது இந்த லைவ் லொகேஷன் வசதியை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து சற்று விரிவாகப் பார்ப்போம்.

வாட்ஸ்அப் செயலியில் லைவ் லொகேஷன் ஷேர் செய்ய சிம்பிள் டிப்ஸ்.!

வழிமுறை-1

முதலில் உங்களது ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் செயலியை ஓபன் செய்யவும்.

வழிமுறை-2

அடுத்து வாட்ஸ்அப் செயலியில் இப்போது நீங்கள் யாருக்கு லைவ் லொகேஷன் ஷேர் செய்ய வேண்டுமோ அவர்களின் சேட் பக்கத்திற்குச் செல்லவும். அங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Attach எனும் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

வழிமுறை-3

நீங்கள் Attach என்ற விருப்பத்தைத் தேர்வு செய்தபின்பு Location என்ற ஆப்ஷன் இருக்கும், அதை கிளிக் செய்து Share live location என்பதை கொடுக்கவும்.

வழிமுறை-4

குறிப்பாக எவ்வளவு நேரம் லோகேஷன் பகிர வேண்டும் என்பதை செலக்ட் செய்து ஓகே கொடுக்கவும்.

வழிமுறை-5

இப்போது உங்களது லோகேஷன் எளிமையாகப் பகிரப்படும். மேலும் இதில் டெக்ஸ்ட் டைப் செய்து அனுப்பவும் முடியும்.

வழிமுறை-6

ஒருவேளை லொகேஷன் ஷேர் செய்வதை நிறுத்த வேண்டும் என்றால், சாட் பக்கத்திற்கு சென்று Stop sharing live location என்று கொடுத்து பின்னர் STOP கொடுக்கவும். இப்போது உங்கள் லொகேஷன் ஷேர் செய்வது நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்அப் செயலியில் லைவ் லொகேஷன் ஷேர் செய்ய சிம்பிள் டிப்ஸ்.!

அதேபோல் சமீபத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் அசத்தலான அம்சத்தை வெளியிட்டுள்ளது. அதாவது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் இதுவரை புகைப்படங்கள், வீடியோக்கள், டெக்ஸ்ட்கள் மட்டுமே வைக்கும் வசதி இருந்த நிலையில், இனி உங்கள் குரலை வைத்து வாய்ஸ் நோட்ஸ்ஸையும் ஸ்டேட்டஸாக வைக்கும் வசதியும் கொண்டுவரப்பட்டுள்ளது.

தற்போது வெளிவந்த தகவலின்படி ஆண்ட்ராய்டு 2.23.2.8 க்கான சமீபத்திய வாட்ஸ்அப் பீட்டா பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த புதிய வசதி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பயனர்களுக்கு இந்த புதிய வசதி கிடைக்கும் என்று WABetaInfo தளம் தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த புதிய வசதியை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்றால், டைப் செய்யும் கீபோர்டு அருகே இருக்கும் மைக்கை டேப் செய்து, குரல் பதிவுகளை ரெக்கார்டு செய்ய வேண்டும். பின்பு நீங்கள் ரெக்கார்டு செய்ததை எடுத்து ஸ்டேட்டஸாக பகிர்ந்து கொள்ளலாம்.

30 வினாடிகள்

அதேபோல் ஆரம்பத்தில் குரல் பதிவிற்கான அதிகபட்ச பதிவு நேரம் 30 வினாடிகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ள நிலையில், வரும் காலங்களில் குரல் பதிவிற்கான நேரம் அதிகப்படுத்தப்படும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பகிரப்படும் படங்கள் மற்றும் வீடியோக்களைப் போலவே, குரல் பதிவுகளும் 24 மணி நேரத்திற்குப் பிறகு மறைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த புதிய அம்சம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம்.

வாட்ஸ்அப் செயலியில் லைவ் லொகேஷன் ஷேர் செய்ய சிம்பிள் டிப்ஸ்.!

குறிப்பாக டெலிகிராம் செயலிக்கு போட்டியாக வாட்ஸ்அப் நிறுவனம் இதுபோன்ற புதிய புதிய அம்சங்களை வெளியிட்டு கொண்டே இருக்கிறது. அதேசமயம் டெலிகிராம் நிறுவமுனம் சில புதிய அம்சங்களைக் கொண்டு வந்த வண்ணம் உள்ளன. ஆனாலும் டெலிகிராம் செயலியை விட வாட்ஸ்அப் செயலி சிறந்த பாதுகாப்பு வசதியையும் கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to Use Live Location Feature on WhatsApp: Full Details!: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X