இனி டைப் செய்ய பேசினாலே போதும்: வாட்ஸ்ஆப் அசத்தல்.!
குறிப்பாக இந்த புதிய நுட்பத்தில் பாஸ்வேர்டு மற்றும் சில ரகசிய குறிகளை மட்டும் டைப் செய்ய முடியாது என்றும் வாட்ஸ்ஆப் நிறுவனம் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து புதிய அம்சங்களை சேர்த்த வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும், அந்தவகையில் வாட்ஸ்ஆப்பில் டைப் செய்து குறுந்தகவல் அனுப்புவது பலருக்கு சிரமமான விஷயமாக தான் இருக்கிறது, பின்பு இதற்கு அதிக நேரம் பிடிப்பதுடன், பிழைகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே தான் சிலர் வாட்ஸ்ஆப் மைக் மூலம் குரலை பதிவு செய்து மெசேஜாக அனுப்புவதை வாடிக்கையான கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கூகுளின் ஜி-போர்டு கீபோர்டு அப்ளிகேசனை பயன்படுத்தி பயனர் தங்களது பேச்சை டைப் செய்துவிட முடியும். இதுவரை வாட்ஸ்ஆப்பில் ஜிபோர்டு வசதி அறிமுகம் செய்யப்படவில்லை என்றாலும், தற்சமயம் ஜிபோர்டு வசதி வாட்ஸ்ஆப் செயிலியில் அறிமுகம் செய்யப்பட்டது.

டவுன்லோடு
வாட்ஸ்ஆப்பில் ஜிபோர்டு வசதி செயல்படுத்த முதலில் அப்டேட் செய்து கொள்ள வேண்டும், பின்பு ஜிபோர்டு செயலியை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து நிறுவிக் கொள்ள வேண்டும்.

மைக் அருகே
அதன்பின்பு டைப் செய்யும்போது வழக்கமான வாட்ஸ்ஆப் மைக் அருகே ஜிபோர்டின் மைகக் குறியீடு காணப்படும், அதை அழுத்திவிட்டு பேசினால், அது நமது பேச்சை எழுத்துகளாக டைப் செய்துவிடும்.

பாஸ்வேர்டு
குறிப்பாக இந்த புதிய நுட்பத்தில் பாஸ்வேர்டு மற்றும் சில ரகசிய குறிகளை மட்டும் டைப் செய்ய முடியாது என்றும் வாட்ஸ்ஆப் நிறுவனம் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிபோர்டு
குறுந்தவகலை எழுத்துக்களாக டைப் செய்யும் பணியினை ஜிபோர்டு பார்த்துக் கொள்ளும் என்றாலும் குறுந்தகவலை அனுப்பும் முன் பிழை இல்லாததை உறுதி செய்துகொள்ளவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications