Instagram வழியாக எப்படி 50 நபர் வீடியோ கால்லிங் செய்வது? மெசஞ்சர் ரூம்ஸ் இன்ஸ்டாவில் அறிமுகம்!

|

இன்ஸ்டாகிராம் வழியாக மெசஞ்சர் ரூம்ஸ் அம்சத்தைப் பயன்படுத்தி எப்படி 50 நபர்கள் வரை ஒரே குரூப் வீடியோ கால்லிங் இல் பேசலாம் என்பதை நீங்கள் இந்த பதிவின் மூலம் கற்றுக்கொள்ளலாம். பேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் மெசஞ்சர் ரூம்ஸ் என்ற புதிய குரூப் வீடியோ கால்லிங் அழைப்பு கருவியை அறிமுகப்படுத்தியது, இந்த புதிய அம்சத்தின் மூலம் பயனர்கள் ஒரு நேரத்தில் 50 பேருடன் வீடியோ அழைப்பை மேற்கொள்ள முடியும்.

இன்ஸ்டாகிராம் இல் இருந்து 50 நபர் வீடியோ அழைப்பு செய்யலாம்

இன்ஸ்டாகிராம் இல் இருந்து 50 நபர் வீடியோ அழைப்பு செய்யலாம்

பேஸ்புக் நிறுவனம் இந்த புதிய மெசஞ்சர் ரூம்ஸ் அம்சத்தை, ஜூம் மற்றும் குரூப் ஃபேஸ்டைம் பயன்பாட்டிற்குப் போட்டியாக அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப் தளத்திலும் இந்த 50 நபர் வீடியோ அழைப்பு மெசஞ்சர் ரூம்ஸ் அம்சத்தை நிறுவனம் அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது நிறுவனத்திற்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் தளத்திலும் மெசஞ்சர் ரூம்ஸ் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராமில் மெசஞ்சர் ரூம்ஸ்

இன்ஸ்டாகிராமில் மெசஞ்சர் ரூம்ஸ்

இப்போது, ​​பேஸ்புக்கிற்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் மெசஞ்சர் ரூம்ஸ் குரூப் வீடியோ அரட்டை அம்சத்திற்கான ஆதரவைப் பெற நிறுவனத்தின் சமீபத்திய அப்டேட்டிற்கு மேம்படுத்த வேண்டும். இன்ஸ்டாகிராம் மூலம் மெசஞ்சர் ரூம்ஸ் குரூப் வீடியோ அழைப்பைத் தொடங்க இந்த அம்சம் ஆதரவை வழங்குகிறது. ஆனால், உங்களுடைய உண்மையான வீடியோ அழைப்பிற்கு நீங்கள் பயன்பாட்டை விட்டுவிட்டு மெசஞ்சருக்குச் செல்ல வைக்கிறது.

4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல!4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல!

எப்படி 50 நபர்களுக்கு இன்ஸ்டாகிராமில் வீடியோ காலிங் செய்வது?

எப்படி 50 நபர்களுக்கு இன்ஸ்டாகிராமில் வீடியோ காலிங் செய்வது?

இன்ஸ்டாகிராம் பயன்பாட்டிலிருந்து மெசஞ்சர் ரூம்ஸ் குழு வீடியோ அரட்டையை நீங்கள் எவ்வாறு தொடங்கலாம் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

  • Instagram பயன்பாட்டை ஓபன் செய்து, வலது மேல் மூலையில் உள்ள Direct கிளிக் செய்யவும்.
  • இப்போது, ​​மேல் வலது மூலையில் உள்ள வீடியோ ஐகானைத் கிளிக் செய்யுங்கள்.
  • அடுத்தபடியாக, Create a Room விருப்பத்தை கிளிக் செய்யுங்கள்.
  • விருப்பமானவர்களை தேர்வு செய்யுங்கள்

    விருப்பமானவர்களை தேர்வு செய்யுங்கள்

    • பின்னர், 'Create Room as' என்ற விருப்பத்தை கிளிக் செய்து சாட்டிங் ரூம் உருவாக்குங்கள்.
    • உங்கள் காண்டக்ட்டில் பெயர்களைத் தேர்வு செய்து, குரூப் வீடியோ அழைப்பில் யாரை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
    • உங்களால் 49 நண்பர்களைத் தேர்வுசெய்ய முடியும், தேர்வு செய்த பின் Send கிளிக் செய்யுங்கள்.
    • அதன் பிறகு, நீங்கள் உருவாக்கிய வீடியோ அரட்டைக்குச் செல்ல 'Join Room' என்பதை கிளிக் செய்யுங்கள்.
    • இந்தியாவில் 32-இன்ச், 43-இன்ச் ரியல்மி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.! விலை இவ்வளவு தான்!இந்தியாவில் 32-இன்ச், 43-இன்ச் ரியல்மி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.! விலை இவ்வளவு தான்!

      முக்கிய குறிப்பு

      முக்கிய குறிப்பு

      குரூப் வீடியோ கால் அழைப்பில் யார் சேரலாம் என்பதை மட்டுப்படுத்த விரும்பினால் பயனர்கள் மெசஞ்சர் அறையை லாக் செய்யும் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மெசஞ்சர் ரூம்ஸ் குரூப் வீடியோ அழைப்புகள், குரூப் ஃபேஸ்டைம் அல்லது வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு போன்ற என்கிரிப்ட்க்ஷன் செய்யப்படவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
How To Start Messenger Room Group Video Chat Via Instagram On Smartphone : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X