வாட்ஸ்அப் இல் சாட்களை பின் செய்வது எப்படி? இது தெரியாம போச்சே!

|

உலகெங்கிலும் மிகவும் பிரபலமான மெசேஜ்ஜிங் பயன்பாடுகளில் ஒன்றாக வாட்ஸ்அப் படிப்படியாக உருவெடுத்துள்ளது. பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த வாட்ஸ்அப் செயலியை சுமார் 1.5 பில்லியினுக்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆண்ட்ராய்டு மற்றும் iOS அப்டேட்

ஆண்ட்ராய்டு மற்றும் iOS அப்டேட்

நண்பர்கள், தொழில் வல்லுநர்களுடன் தொடர்புகொள்வதற்கும், ஒருவருக்கொருவர் மீடியா பைல்களை மாற்றி அனுப்புவதற்கும் சாட் செய்வதற்கும் இந்த பயன்பாட்டுச் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். சமீபகாலமா வாட்ஸ்அப் நிறுவனம் பல புதிய மாற்றங்களை ஆண்ட்ராய்டு மற்றும் iOS என இரண்டு வாட்ஸ்அப் தலத்திலும் மாற்றம் செய்து வருகிறது.

புதிய அம்சம்

புதிய அம்சம்

தற்பொழுது வாட்ஸ்அப் நிறுவனம், சாட்டிங் செய்பவர்களுக்கென்று புத்தம் புதிய அம்சத்தைக் களமிறக்கியுள்ளது. பின்னுடு சாட்(Pinned Chat) என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சத்தைப் பயன்படுத்தி பயனருக்குத் தேவையான முக்கியமான சாட்டைகளை, சாட் பாக்சில் பாக்சில் பின் செய்துகொள்ளலாம்.

இனி கட்டணம் இல்லை: தமிழக மக்களுக்கு ஜியோவின் நற்செய்தி- வைபை கிடைத்தாலே கால் செய்யலாம்இனி கட்டணம் இல்லை: தமிழக மக்களுக்கு ஜியோவின் நற்செய்தி- வைபை கிடைத்தாலே கால் செய்யலாம்

'பின் செய்யப்பட்ட சாட்'

'பின் செய்யப்பட்ட சாட்'

'பின் செய்யப்பட்ட சாட்' அம்சம் மேலே உள்ள மிக முக்கியமான மற்றும் விரைவாக அணுகக்கூடிய சாட்களை சாட் பாக்சில் பின் செய்கிறது. இதனால் நீங்கள் தேடல் பட்டியில் உள்ள உங்கள் சாட்டை தேடுவது அல்லது உங்கள் சாட் பட்டியலில் உள்ள ஏராளமான அரட்டைகளை ஸ்க்ரோலிங் செய்வது போன்ற கடுப்பான வலிகளை இனி நீங்கள் அனுபவிக்க வேண்டியதில்லை.

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு இல் சாட்களை பின் செய்வது எப்படி?

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு இல் சாட்களை பின் செய்வது எப்படி?

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு, நீங்கள் பின் செய்ய விரும்பும் சாட்டை நீண்ட நேரம் அழுத்தி, அதைச் கிளிக் செய்தவுடன், பயன்பாட்டின் மேல் பட்டியில் பின் ஐகான் வெளிப்படும். அதைத் தட்டவும், பிற பின் செய்யப்படாத சாட்கள் அனைத்தும் பெறப்பட்ட செய்திகளைப் பொருட்படுத்தாமல் சாட் பட்டியலில், பின் செய்யப்பட்ட சாட்களுக்கு பின்னால் மட்டுமே வைக்கப்படும்.

வாட்ஸ்அப் iOS இல் சாட்களை பின் செய்வது எப்படி?

வாட்ஸ்அப் iOS இல் சாட்களை பின் செய்வது எப்படி?

ஐபோன் பயனர்களுக்கு, சாட்டை நீண்ட நேரம் அழுத்து வேண்டிய அவசியமில்லை. நீங்கள் பின் செய்ய விரும்பும் சாட்டை வலது ஸ்வைப் செய்ய வேண்டும். பின் செய்வதற்கான ஆப்ஷன் ஐகான் Mark as unread விருப்பத்திற்கு அருகில் இருக்கும். ஆப்ஷனில் காணப்படும் பின் ஐகானைத் தட்டுவதன் மூலம் உங்கள் சாட்டை நீங்கள் பின் செய்ய முடியும்.

ஜனவரி 10: 2020-ம் ஆண்டில் முதல் சந்திர கிரகணம்: எங்கெங்கு தெரியும்?ஜனவரி 10: 2020-ம் ஆண்டில் முதல் சந்திர கிரகணம்: எங்கெங்கு தெரியும்?

பின் செய்யப்பட்ட சாட்டை எப்படி அன்-பின்(unpin) செய்வது?

பின் செய்யப்பட்ட சாட்டை எப்படி அன்-பின்(unpin) செய்வது?

சாட்டை எப்படிப் பின் செய்தீர்களோ அதே முறையே Android மற்றும் iPhone பயனர்கள் பின்பற்றி பின் செய்யப்பட்ட சாட்டை நீண்ட நேரம் அழுத்தியோ அல்லது வலதுபுறமாக ஸ்வைப் செய்யும் முறையைப் பின்பற்றியோ பின் செய்யப்பட்ட சாட்டை அன்-பின் செய்துகொள்ளலாம்.

 கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்பு

கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்பு

இங்கே கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்பு என்னவென்றால், வாட்ஸ்அப் ஒரு நேரத்தில் மூன்று சாட்களை மட்டுமே பின் செய்ய அனுமதி வழங்குகிறது. மூன்று சாட்களுக்கு மேல் பயனர்களால் சாட்டை பின் செய்ய முடியாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பின் செய்யப்படும் சாட்கள் தனிப்பட்ட சாட்டாகவோ அல்லது குரூப் சாட்டாகவோ இருக்கலாம்.

Best Mobiles in India

English summary
How To Pin WhatsApp Chats On Top : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X