ட்விட்டர் போன்று செயல்படும் ஒரு தரமான செயலி இந்தியாவில் அறிமுகம்.!

|

உலகளவில் ட்விட்டர் தளத்தை அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக இந்த தளத்தில் பல்வேறு புதிய புதிய அம்சங்கள வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் ட்விட்டர் போன்று செயல்படும் Koo என்ற செயலி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த செயலி இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது.

மேட் இன் இந்தியா

மேட் இன் இந்தியா தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை ஊக்குவிக்கத் தொடங்கியதிலிருந்து, ஏராளமான இந்திய பயன்பாடுகள் வெளவந்துள்ளன.இது போன்ற நிறைய இந்திய செயலிகள் வெளிவந்தால் மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும்.

இந்தியப் பாதிப்பை

இந்த Koo என்ற செயலி அப்ரமேயா ராதாகிருஷ்ணா மற்றும் மாயங்க் பிடாவட்கா ஆகியோர் உருவாக்கியுள்ளனர். மேலும் இது பயனர்கள் தங்கள் கருத்துக்களையும் எண்ணங்களையும் வெளிப்படுத்த ஏற்ற ஒரு தளமாகும். இது ட்விட்டரின் இந்தியப் பாதிப்பை போலவே இருக்கிறது.

242 மில்லியன் ஆண்டுகள் பழமையான 20 அடி நீட்ட 'டானிஸ்ட்ரோபியஸ்' மர்மம் அவிழ்க்கப்பட்டது!

 கன்னடம், தெலுங்கு, பெங்காலி,

குறிப்பாக தமில், கன்னடம், தெலுங்கு, பெங்காலி, இந்தி, மலையாளம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, ஒரியா மற்றும் அஸ்ஸாமி போன்ற பிற மொழிகளிலும் இந்த Koo செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுருக்கமாக பயனர்கள் தாங்கள் விரும்பும் மொழியில் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த இது அனுமதிக்கிறது.

பயன்பாட்டில் பல பிரபல

இந்த செயலியில் பயனர்களைப் பின்தொடரவும், ஆடியோ, வீடியோ, உரை மற்றும் பட வடிவமைப்பில் இடுகைகளைப் பகிரவும் அனுமதிக்கிறது. பின்பு பயனர்கள் மற்றவர்களுடன் அரட்டை அடித்து வாக்கெடுப்புகளையும் நடத்தலாம். இது தவிர, பயனர்கள் புதுப்புது தகவல்களைத் தெரிந்துக்கொள்ள முடியும் மற்றும் உலகம் முழுவதும் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

கூடுதலாக இந்த பயன்பாட்டில் பல பிரபலங்கள், செய்தி சேனல்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பலவற்றைப் பின்தொடர உங்களை அனுமதிக்கிறது. மேலும் இதில் குறிப்பிடத்தக்க பல ஆளுமைகள் உள்ளனர்.

உறுப்பினர்களாக உள்ளனர்.

குறிப்பாக இந்த செயலியின் தற்போது உறுப்பினர்களாக மத்திய தகவல் தொழில்நுட்ப மற்றும் சட்டம் மற்றும் நீதி அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், கர்நாடக துணை முதலமைச்சர், துணை போலீஸ் கமிஷனர் அனில் கும்ப்ளே, ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். மேலும் இந்தப் பயன்பாடு சமீபத்தில் நடந்த பிரதமர் மோடியின் ஆத்மநிர்பர் ஆப் சேலஞ்சிலும் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செயலி ஆண்ட்ராய்டு மற்றும்

தற்சமயம் இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களிலும் கிடைக்கும்.தற்போது பிளே ஸ்டோரில் இந்த செயலி 500,000 க்கும் மேற்பட்ட பதிவிறக்கங்களைக் கொண்டுள்ளது எனத் தகவல் வெளிவந்துள்ளது, உறுதியாக தெரியவில்லை. மேலும் இதை பதிவிறக்கம் செய்யவது எப்படி என்று பார்ப்போம்.

அல்லது ஐஒஎஸ் சாதனங்களின்

ஆண்ட்ராய்டு அல்லது ஐஒஎஸ் சாதனங்களின் முறையே Google Play Store அல்லது App Storeக்குச் செல்லவும்

அடுத்து தேடல் பிரிவில் Koo App என்று தேடுங்கள்

பின்னர் இந்த செயலி சிக்கியதும், அதைக் கிளிக் செய்து, அதைப் பெற Install விருப்பத்தை அழுத்தவும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
How to Install Indian Twitter Alternative Koo App: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X