Home
Apps

Whatsapp சாட்களை மறைப்பது எப்படி? உங்கள் ரகசிய சாட்களை இனி யாரும் பார்க்க வேண்டாம்.!

பிரபலமான இன்ஸ்டன்ட் மெசேஜ்ஜிங் தளமான வாட்ஸ்அப் தளத்தில், சிலரால் மட்டுமே அறியப்பட்ட ஒரு அம்சம் உள்ளது, இந்த அம்சம் உங்கள் சாட் மெசேஜ்களை நீக்காமல் ஹைடு செய்ய அதாவது, மறைக்க ஒரு விருப்பத்தை வழங்குகிறது. இந்த அம்சம் உங்கள் சாட் மெசேஜ்களை ஹைடு செய்து வைத்து பின்னர் உங்கள் தேவைக்கேற்ப அன்-ஹைடு செய்து பயன்படுத்த முடியும். இதை எப்படிச் செய்யலாம் என்று பார்க்கலாம்.

வாட்ஸ்அப் மெசேஜ்களை ஹைடு செய்யலாம்

வாட்ஸ்அப் மெசேஜ்களை ஹைடு செய்யலாம்

நாம் அனைவரும் நமது நண்பர்கள், குடும்பத்தினர், அன்பானவர்கள் மற்றும் பிற முக்கிய தொடர்புகளுடன் அரட்டை அடிக்க வாட்ஸ்அப் பயன்பாட்டைப் பயன்படுத்தி வருகிறோம், இருப்பினும், சில வாட்ஸ்அப் அரட்டைகளை மற்றவர்கள் அணுக விரும்பாத நேரங்களும் உள்ளன, ஏனெனில் அவை தனிப்பட்ட மெசேஜ் சாட்டாக இருக்கலாம். இப்படி உங்கள் சாட் மெசேஜ்ஜை வைக்க வாட்ஸ்அப் Archive என்ற காப்பாகச் சேவையை தன் வசம் வைத்துள்ளது.

மூன்றாம் தரப்பு பயன்பாடு எதுவும் தேவையில்லை

மூன்றாம் தரப்பு பயன்பாடு எதுவும் தேவையில்லை

இந்த அம்சத்தின் மூலம் வாட்ஸ்அப்பில் அரட்டைகளை எவ்வாறு மறைப்பது என்பதை நீங்கள் கற்றுக் கொள்ளலாம் அல்லது எவ்வாறு உங்கள் அரட்டைகளைத் தனியாக காப்பகப்படுத்தலாம் என்பதைப் பார்க்கலாம். இதைச் செய்ய, மூன்றாம் தரப்பு பயன்பாடு எதுவும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்அப் இன் சொந்த அம்சத்தைப் பாதுகாப்புடன் பயன்படுத்தலாம். ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு என இரண்டு தளங்களிலும் இந்த சேவை உங்களுக்குக் கிடைக்கிறது.

சாட் மெசேஜ்களை மறைக்க உதவும் Archive

சாட் மெசேஜ்களை மறைக்க உதவும் Archive

Archive என்றழைக்கப்படும் இந்த அம்சம் உங்கள் சாட் மெசேஜ்களை மறைக்க உதவுகிறது. வாட்ஸ்அப் ஆர்ச்சிவ் சாட் உங்கள் சாட் ஸ்கிரீனில் உள்ள சாட் மெசேஜ்களை மறைக்க அனுமதிப்பதுடன் அவற்றைத் தேவைப்பட்டால் பின்னர் அணுகவும் அனுமதிக்கிறது. குரூப் சாட் அல்லது தனிப்பட்ட சாட்களை நீங்கள் இந்த அம்சத்தின்படி காப்பகப்படுத்தலாம். ஆர்ச்சிவ் சாட்ஸ் பயன்படுத்துவது உங்கள் சாட்டை நீக்காது அல்லது உங்கள் SD கார்டில் காப்புப் பிரதி எடுக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை மறக்காமல் நினைவில் கொள்க

இதை மறக்காமல் நினைவில் கொள்க

ஆர்ச்சிவ் சாட்ஸ் மூலம் காப்பகப்படுத்தப்பட்ட சாட்கள் வாட்ஸ்அப் பயன்பாட்டில் ஒரு தனி போல்டரில் பாதுகாப்பாக மறைக்கப்படும். நீங்கள் செலக்ட் செய்து ஆர்ச்சிவ் சாட்ஸ் மூலம் மறைத்த அந்த சாட்டிலிருந்து புதிய மெசேஜ் எதுவும் வந்தால் காப்பகப்படுத்தப்பட்ட சாட்கள் மீண்டும் உங்கள் சாட் பாக்சில் தோன்றும் என்பதை நினைவில் கொள்க. இந்த ஆர்ச்சிவ் முறைப்படி எப்படி சாட்களை ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போனில் மறைக்கலாம் என்று பார்க்கலாம்.

ஐபோனில் வாட்ஸ்அப் அரட்டைகளை மறைக்கும் முறை

ஐபோனில் வாட்ஸ்அப் அரட்டைகளை மறைக்கும் முறை

  • உங்களிடம் ஐபோன் இருந்தால், உங்கள் சாதனத்தில் வாட்ஸ்அப் ஓபன் செய்து, நீங்கள் மறைக்க விரும்பும் சாட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
  • நீங்கள் ஹைடு செய்ய விரும்பும் சாட்டில் இடதுபுறமாக ஸ்வைப் செய்து அதன் கூடுதல் விருப்பங்களுக்குச் செல்லவும்.
  • இங்கிருந்து, வாட்ஸ்அப் காப்பகங்களுக்கு நகர்த்த "Archive" விருப்பத்தைத் தட்டவும்.
  • இதேபோல் நீங்கள் பல சாட்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை ஒரே நேரத்தில் ஆர்ச்சிவ் போல்டருக்கு நகர்த்தலாம்.
  • இந்த மறைக்கப்பட்ட சாட்களை மீண்டும் அணுகுவது எப்படி?

    இந்த மறைக்கப்பட்ட சாட்களை மீண்டும் அணுகுவது எப்படி?

    • உங்கள் வாட்ஸ்அப் சாட்டை மீண்டும் ஓபன் செய்யுங்கள்.
    • இப்பொழுது, மேலே சர்ச் பாக்ஸ் அருகில் உள்ள காப்பகப்படுத்தப்பட்ட அரட்டைகள் விருப்பத்தை நீங்கள் காணலாம்.
    • மறைக்கப்பட்ட உரையாடல்களைக் காண Archive சாட்ஸ் விருப்பத்தை கிளிக் செய்யவும்.
    • இப்பொழுது சாட்டை லெப்ட் ஸ்வைப் செய்து, உங்கள் வாட்ஸ்அப் சாட் பாக்சில் தெரியும் வகையில் "Unarchive" கிளிக் செய்யவும். மறைக்கப்பட்ட சாட் மீண்டும் உங்களுக்குக் காண்பிக்கப்படும்.
    • ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் சாட்களை எப்படி மறைப்பது?

      ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் சாட்களை எப்படி மறைப்பது?

      • உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் ஓபன் செய்யவும்.
      • நீங்கள் மறைக்க விரும்பும் சாட்டை லாங் பிரஸ் செய்து செலக்ட் செய்யுங்கள்.
      • மறைக்க விரும்பும் விருப்பத்திற்காக Archive ஐகானை நீங்கள் வலது மேல் மூலையில் காணலாம்.
      • ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனிலும் நீங்கள் பல தனிப்பட்ட சாட் அல்லது குழு சாட்களை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
      • தேவையான தேர்வுகளைச் செய்தவுடன், திரையின் மேல் வலது மூலையில் உள்ள Archive ஐகானைத் தட்டவும். இதன் மூலம் உங்கள் சாட் மறைக்கப்பட்டுவிடும்.
      • ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் மறைக்கப்பட்ட சாட்களை மீண்டும் அணுகுவது எப்படி?

        ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் மறைக்கப்பட்ட சாட்களை மீண்டும் அணுகுவது எப்படி?

        • உங்கள் வாட்ஸ்அப் சாட்டை மீண்டும் ஓபன் செய்யுங்கள்.
        • நீங்கள் மறைத்து வாய்த்த உரையாடல்களைத் மீண்டும் அணுகுவதற்கும், மீண்டும் ஆர்ச்சிவ் செய்யப்பட்ட சாட்டை வாட்ஸ்அப் சாட் பாக்சிற்கும் நகர்த்த, இந்த விஷயங்களை செய்யுங்கள்.
        • சாட் பாக்ஸ் ஓபன் செய்து, மேல கொடுக்கப்பட்டுள்ள சர்ச் டாப் கிளிக் செய்யுங்கள்.
        • சர்ச் டாப் கிளிக் செய்யுங்கள்

          சர்ச் டாப் கிளிக் செய்யுங்கள்

          • சாட் பாக்ஸ் ஓபன் செய்து, மேல கொடுக்கப்பட்டுள்ள சர்ச் டாப் கிளிக் செய்யுங்கள்.
          • இப்பொழுது நீங்கள் மறைத்த சாட்டின் காண்டாக்ட் பெயரை டைப் செய்யுங்கள்.
          • உடனே அவர்களின் பெயருடன் Archive டேக் இருப்பது உங்களுக்குக் காண்பிக்கப்படும்.
          • இப்பொழுது அனாதை சாட்டை லாங் பிரெஸ் செய்து "Unarchive" செய்யுங்கள்.
          • சாட்களை எளிதாக மறைத்து வைக்க முடியும்

            சாட்களை எளிதாக மறைத்து வைக்க முடியும்

            இந்த வழிமுறைப்படி ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் உங்கள் சாட்களை எளிதாக மறைத்து வைக்க முடியும். அதேபோல் உங்களுக்குத் தேவையான நேரத்தில் அதை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மீட்டெடுக்கவும் முடியும். முக்கிய குறிப்பு மறைக்கப்பட்ட சாட்டிலிருந்து புதிய மெசேஜ் வந்தால் மீண்டும் இது உங்கள் சாட் பாக்சில் தோன்றும் என்பதை நினைவில் கொள்க.

Best Mobiles in India

English summary
How To Hide Your WhatsApp Chats On iPhone And Android Phone : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X