வாட்ஸ்அப் வீடீயோ காலில் 8 பேரை எவ்வாறு சேர்ப்பது? எந்த பதிப்புகளில் கிடைக்கும்?

|

வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை சேர்த்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் குறுந்தகவல் செயலியாக மட்டுமின்றி க்ரூப் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் என பல்வேறு அட்டகாச அம்சங்களை வழங்கி வருகிறது.

 கலந்து கொள்ள

அதன்படி இந்த வாட்ஸ்அப் நிறுவனம் இதுவரை வாய்ஸ் மற்றும் வீடியோ கால் மேற்கொள்ள அதிகபட்சம் நான்கு பேர் மட்டுமேகலந்து கொள்ள முடியும என்ற நிலை நிலவியது, தற்சமயம் இந்த எண்ணிக்கையை வாட்ஸ்அப் அதிபடுத்திஉள்ளது.

க்ரூப் வீடியோ கால்

இப்போது உள்ள காலக்கட்டத்தில் க்ரூப் வீடியோ கால் சேவைக்கான தட்டுப்பாடு அதிகரித்து இருக்கு நிலையில் வாட்ஸ் க்ரூப் கால்அம்சத்தில் மாற்றம் செய்து இருக்கிறது. இந்த தளம் இப்போது எட்டு பேர் வரை ஒருவருக்கொருவர் இணைக்க அனுமதிக்கிறது. முன்னதாக, ஒரு வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் நான்கு பேர் வரை மட்டுமே இணைந்திருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்அப் பீட்டா

இந்த அம்சம் வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் கிடைக்கிறது, ஆனால் வாட்ஸ்அப் பயன்படுத்தும் அனைவருக்கும் இந்த சலுகை வழங்கப்படவில்லை, தற்போது இது ஆண்ட்ராய்டில் பதிப்பு 2.20.133 மற்றும் iOS இல் பதிப்பு 2.20.50.25 இல் கிடைக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டிய பில்கேட்ஸ்.! காரணம் இதுதான்!.பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டிய பில்கேட்ஸ்.! காரணம் இதுதான்!.

ழைப்புகளில்

குறிப்பாக வீடியோ அழைப்புகளில் பங்கேற்பாளர்கள் அனைவரும் வாட்ஸ்அப்பின் மேலே குறிப்பிட்ட பதிப்புகளை இயக்க வேண்டும்.

-வாட்ஸ்அப்-ல் வீடியோ அழைப்பை இரண்டு வழிகளில் தொடங்கலாம்.


-சிலருக்கு அழைப்பு விடுத்து வீடியோ காலில் சேர்க்கலாம்.


-அல்லது நீங்கள் ஒரு குழுவுக்குச் சென்று வீடியோ அழைப்பைத் தொடங்கலாம், அழைப்புக்கு முன்பு குழுவில் உள்ள உறுப்பினர்களை
தேர்ந்தெடுக்க வாட்ஸ்அப் கேட்கும். அதாவது 8 பங்கேற்பாளர்களைக் காட்டிலும் குறைவாகவோ அல்லது சரிசமமாகவோ நீங்கள்
தேர்ந்தெடுக்கலாம்.


-ஆனால் அனைத்து பயனர்களுக்கும் இந்த அம்சம் எப்போது கிடைக்கும் என்று வாட்ஸ்அப் இன்னும் அறிவிக்கவில்லை, இருப்பினும்
விரைவில் இந்த அம்சத்தை எதிர்பார்க்கலாம்.

காலத்தில் நாம் அனைவரும்

மேலும் கொரோனா காலத்தில் நாம் அனைவரும் வீட்டில் அடைந்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் Together at home' என்னும் புதிய ஸ்டிக்கர் பேக்கை அறிமுகம் செய்துள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்

 இந்த ஸ்டிக்கர் பேக்கை

வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது கொரோனா காலத்தில் நாம் அனைவரும் வீட்டில் அடைந்திருக்கும் சூழ்நிலையில் Together at home என்னும் ஸ்டிக்கர் பேக்கை அறிமுகம் செய்துள்ளது. அதாவது வீட்டில் இருக்கும் வேளையில் நேர்மறையான எண்ணங்களுடன் இருக்கவும் இப்பேரிடர் காலத்திலிருந்து சீக்கிரம் மீண்டு வருவோம் என்ற உலக சுகாதார அமைப்புடன் இணைந்து இந்த ஸ்டிக்கர் பேக்கை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம்.

பேக்கில் சமூக விலகலை

குறிப்பாக இந்த ஸ்டிக்கர் பேக்கில் சமூக விலகலை ஊக்குவிக்கும் வண்ணம் ஹைஃபை, ஒகே,கை கழுவுதல், வீட்டில் இருத்தல்,வீட்டில் இருந்தே பணி புரிதல் போன்ற பல்வேறு அருமையான ஸ்டிக்கர் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ப்டேட் செய்த உடன் சேட்

மேலும் இந்த புதிய ஸ்டிக்கர் பேக் ஆனது வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்டில் இடம்பெற்றுள்ளது, அப்டேட் செய்த உடன் சேட் பாக்ஸில் உள்ள ஸ்டிக்கர் ஆப்ஷன் சென்று `Together at home' என்னும் இந்த பேக்கை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
How to Get Up to 8 People on a WhatsApp Video Call: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X