Whatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப் பயன்படுத்துவது எப்படி?

|

வாட்ஸ்அப் நிறுவனம் அண்மையில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான டார்க் மோடு அம்சத்தை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து வாட்ஸ்அப் தனது டார்க் மோடு அம்சத்தை விரைவில் கணினிகளுக்கான வாட்ஸ்அப் வெப் பயன்பாட்டிலும் வெளியிடத் தயாராகி வருகிறது. அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத இந்த அம்சத்தை தற்பொழுது உங்கள் வாட்ஸ்அப் வெப் பயன்பாட்டில் ஆக்டிவேட் செய்ய ஒரு எளிய வழியைக் கண்டுபிடித்துள்ளோம். அது எப்படி என்று பார்க்கலாம்.

இதை முதலில் கண்டுபிடித்தது யார்?

இதை முதலில் கண்டுபிடித்தது யார்?

வாட்ஸ்அப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன்னரே இந்த அம்சத்தைப் பயனர்கள் வாட்ஸ்அப் வெப் மூலம் அணுக ஒரு வழி உள்ளது என்பதை வாப்பீட்டாஇன்போ டிஸ்கார்ட் சர்வர் கம்யூனிட்டியை சேர்ந்த தேல்ஸ் என்பவர் கண்டுபிடித்துள்ளார். இன்னும் இந்த வாட்ஸ்அப் வெப் டார்க் மோடு அம்சத்தை வாட்ஸ்அப் நிறுவனம் சோதனை செய்து தான் வருகிறது. புதிய டார்க் தீம் அம்சம் இன்னும் யாருக்கும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்அப் வெப் டார்க் தீம்

வாட்ஸ்அப் வெப் டார்க் தீம்

வாட்ஸ்அப் பயனர்களுக்குப் பிழை இல்லாத சிறந்த அனுபவத்தை உறுதி செய்வதற்காக, வாட்ஸ்அப் சமீபத்திய சில புதுப்பிப்புகளை இந்த அம்சத்தில் செயல்படுத்தி வருகிறது. டார்க் தீம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது, எனவே இது உங்கள் வாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் அப்டேட்டில் இன்னும் வந்திருக்காது. அதிகாரப்பூர்வ வெளியீட்டு வரை காத்திருக்க முடியாது என்பவர்கள் இந்த முறையைப் பின்பற்றி டார்க் தீம் அம்சத்தை இப்பொழுதே ஆக்டிவேட் செய்துகொள்ளலாம்.

Jio அட்டகாச திட்டம்: 84 நாட்களுக்கு தினசரி 3 ஜிபி., விலை இவ்வளவு தானா?Jio அட்டகாச திட்டம்: 84 நாட்களுக்கு தினசரி 3 ஜிபி., விலை இவ்வளவு தானா?

டார்க் தீம் ட்ரிக்

டார்க் தீம் ட்ரிக்

உங்களிடம் நல்ல கணினி திறன்கள் இல்லாவிட்டாலும் கூட இந்த முறையை எளிதாக நீங்கள் பயன்படுத்தலாம். இந்த டார்க் தீம் ட்ரிக்கை கூகிள் குரோம் பிரௌசர் மூலம் ஆக்டிவேட் செய்துள்ளனர். அதேபோல், இந்த செயல்முறை மற்ற பிரௌசர்களிலும் கச்சிதமாகச் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் அதிகாரப்பூர்வ பக்கத்திலிருந்து வாட்ஸ்அப் வெப் பயன்பாட்டைத் திறக்கவும். பின்பு கீழ் வரும் செயல்முறையைச் சரியாய் பின்பற்றுங்கள்.

வாட்ஸ்அப் வெப் சாட் பாக்ஸ் - ஒரு ரைட் கிளிக்

வாட்ஸ்அப் வெப் சாட் பாக்ஸ் - ஒரு ரைட் கிளிக்

QR ஸ்கேன் குறியீட்டு முறையைப் பயன்படுத்தி உங்கள் வாட்ஸ்அப் கணக்கை லாகின் செய்யுங்கள். வாட்ஸ்அப் வெப் பயன்படுத்தத் தயாராகியதும் நம்முடைய ட்ரிக்கை பயன்படுத்தத் தொடங்கலாம்: வாட்ஸ்அப் வெப் சாட் பாக்சிற்கு வெளியே உள்ள இடத்தில் உங்கள் மவுசு கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்யுங்கள். தற்பொழுது காண்பிக்கப்படும் ஆப்ஷனில் Inspect என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.

மீண்டும் டபுள் டேட்டா சலுகையை அறிவித்த ஏர்டெல் நிறுவனம்.!மீண்டும் டபுள் டேட்டா சலுகையை அறிவித்த ஏர்டெல் நிறுவனம்.!

கிளாஸ் 'Web' என்பது என்ன?

கிளாஸ் 'Web' என்பது என்ன?

இந்த இன்ஸ்பெக்ட் ஆப்ஷனை ஓபன் செய்ய நீங்கள் Ctrl + Shift + I பட்டன்களையும் பயன்படுத்தலாம். தற்பொழுது உங்களுக்கு பிரௌசர் பக்கத்தின் கன்சோல் மற்றும் வாட்ஸ்அப் வெப் பக்கத்தின் குறியீட்டைக் காணிப்பீர்கள். இப்போது நீங்கள் 'body class = "web"' என்ற கோடிங் இருக்கும் இடத்தை அடைய மேலே இருந்து கீழ் நோக்கி ஸ்க்ரோல் செய்யுங்கள். இதில் 'Web' என்பது வாட்ஸ்அப்பின் இயல்பான தீம் அம்சத்தைக் குறிக்கிறது.

பாடி கிளாஸ் 'web dark' எதற்கு தெரியுமா?

பாடி கிளாஸ் 'web dark' எதற்கு தெரியுமா?

தற்பொழுது நீங்கள் கண்டுபிடித்துள்ள 'body class = "web"' என்ற கோடிங்கில் "web" உள்ள இடத்தில் டார்க் தீம் விருப்பத்திற்குத் தேவையான 'web dark' என்ற கோடிங் வோர்டை மாற்றவும். நீங்கள் இப்பொழுது கோடிங் வார்த்தைகளை மாற்றியதும், நீங்கள் செய்த மாற்றத்தை உறுதிப்படுத்திக்கொள்ள ஒருமுறை ENTER கிளிக் செய்யவும். இப்பொழுது உங்கள் வாட்ஸ்அப் வெப் மொத்தமாக டார்க் தீம் அம்சத்திற்கு மாறிவிட்டதை நீங்கள் பார்க்கலாம்.

Oneplus 8 ப்ரோ கேமரா ஆடைகள் மற்றும் திடப்பொருட்களின் உள் ஊடுருவி படம் எடுக்கிறதா?Oneplus 8 ப்ரோ கேமரா ஆடைகள் மற்றும் திடப்பொருட்களின் உள் ஊடுருவி படம் எடுக்கிறதா?

டார்க் தீம் ஆக்டிவேட்

டார்க் தீம் ஆக்டிவேட்

ஒவ்வொரு முறையும் நீங்கள் வாட்ஸ்அப் வெப் பக்கத்தைப் புதுப்பிக்கும்போதோ அல்லது வேறொரு இடத்திலிருந்து வாட்ஸ்அப் வெப் பயன்பாட்டை திறக்கும்போதோ இந்த நடைமுறையை நீங்கள் மீண்டும் செய்ய வேண்டியதிருக்கும். இந்த எளிமையான ட்ரிக்கை பயன்படுத்தி நீங்களும் உங்கள் வாட்ஸ்அப் வெப் பயன்பாட்டில் டார்க் தீம் அம்சத்தைப் பயன்படுத்தலாம்.

Best Mobiles in India

English summary
How To Enable Dark Theme On WhatsApp Web : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X