வாட்ஸ்அப் இல் 'குக் வித் கோமாளி ஸ்டிக்கர்' பேக் வேண்டுமா? அப்போ உடனே இதை செய்யுங்கள்..

|

தமிழ்நாட்டில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் ஒளிபரப்பாகும் ஒரு மிகப் பெரிய ஹிட் ஷோ தான் ''குக் வித் கோமாளி'' நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு முதல் சீசனிலேயே மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனை தொடர்ந்து முதல் சீசனிற்கு பிறகு அடுத்து ஒரு சீசன் என்று கோமாளிகளின் கொண்டாட்டம் தொடர்ந்துகொண்டே இருந்தது. அல்டிமேட் கலாய், நிமிடத்திற்கு நிமிடம் சிரிப்பு, முழுநேர பொழுதுபோக்கு என்று பலவிதமான அனுபவங்களுடன் இந்த நிகழ்ச்சி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. சீசன் 3 எப்போது என்ற கேள்வியே இப்போது அனைவரின் கேள்வியாக உள்ளது.

'குக் வித் கோமாளி நிகழ்ச்சி' யின் வாட்ஸ்அப் ஸ்டிக்கர் பேக்

'குக் வித் கோமாளி நிகழ்ச்சி' யின் வாட்ஸ்அப் ஸ்டிக்கர் பேக்

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சமூக வலைத்தளங்களில் புதிய-புதிய டெம்ப்லேட்கள் உருவெடுக்கத் தொடங்கின, இது இப்போது வாட்ஸ்அப் ஸ்டிக்கர் வரை சென்றுவிட்டது. ஆம், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வாட்ஸ்அப் ஸ்டிக்கர்கள் இப்போது பயன்பாட்டிற்குக் கிடைக்கின்றது. இதை எப்படி டவுன்லோட் செய்து, உங்கள் வாட்ஸ்அப் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

வாட்ஸ்அப் இல் ட்ரெட்னிங் ஆகும் கோமாளி ஸ்டிக்கர்கள்

வாட்ஸ்அப் இல் ட்ரெட்னிங் ஆகும் கோமாளி ஸ்டிக்கர்கள்

வாட்ஸ்அப் பயன்படுத்தும் பலருக்கும் இப்படி ஒரு ஸ்டிக்கர் பேக் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது என்பதே தெரியாமல் இருக்கிறார்கள். கடந்த ஆண்டில் தான் வாட்ஸ்அப் நிறுவனம் ஸ்டிக்கர் பேக் அம்சத்தை அதிகாரப்பூர்வமாக அனைவருக்கும் கிடைக்கும் படி வெளியிட்டது. அதற்குப் பின்னர் இந்தியாவில் வாட்ஸ்அப் ஸ்டிக்கர் பயன்படுத்தாமல் எந்த ஒரு சாட்டும் நிறைவடையாது என்பது போல வாட்ஸ்அப் ஸ்டிக்கர் கலாச்சாரம் மாறிவிட்டது.

செவ்வாயில் பாம்பு போன்ற 'ப்ளூ டூன்ஸ்' உருவம்: என்ன அது? நாசா பரபரப்பு தகவல்.!செவ்வாயில் பாம்பு போன்ற 'ப்ளூ டூன்ஸ்' உருவம்: என்ன அது? நாசா பரபரப்பு தகவல்.!

ரசிகர் உருவாக்கிய குக் வித் கோமாளி ஸ்டிக்கர் பேக்

ரசிகர் உருவாக்கிய குக் வித் கோமாளி ஸ்டிக்கர் பேக்

ஒவ்வொரு பயனரும் அவர்களுக்குப் பிடித்த ஸ்டிக்கர் பேக்களை பயன்படுத்திக்கொள்ளலாம். இன்னும் சரியாகச் சொன்னால் உங்களுக்கு பிடித்தமான ஸ்டிக்கர் பேக்களை நீங்களே உருவாக்கிக்கொள்ளலாம். அப்படி அந்த வரிசையில் ஒரு தீவிரமான ரசிகர் உருவாக்கிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஸ்டிக்கர் பேக் இப்போது வைரல் ஆகி வருகிறது.

எப்படி இதை பயன்படுத்துவது?

எப்படி இதை பயன்படுத்துவது?

பலரும் இந்த புதிய ஸ்டிக்கர் பேக்கை பதிவு செய்து தங்களின் நண்பர்களுடன் பகிர்ந்து வருகிறார்கள். நீங்களும் இதை டவுன்லோட் செய்து பயன்படுத்த விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்முறையைப் பின்பற்றுங்கள். இறுதியில் உள்ள முக்கிய குறிப்பை படிக்க தவற வேண்டாம்.

குக் வித் கோமாளி ஸ்டிக்கர் பேக்கை எப்படி டவுன்லோடு செய்வது?

குக் வித் கோமாளி ஸ்டிக்கர் பேக்கை எப்படி டவுன்லோடு செய்வது?

 • முதலில் இந்த குக் வித் கோமாளி வாட்ஸ்அப் ஸ்டிக்கரை நீங்கள் டவுன் லோட் செய்வதற்கு இங்கே கொடுக்கப்பட்டுள்ள இணையப்பக்கத்தின் முகவரியை கிளிக் செய்யவும்.
 • https://m.apkpure.com/cook-with-comali-stickers-wa-tamil-stickers கிளிக் செய்யுங்கள்.
 • அல்லது, Cook with Comali Stickers - WA Tamil Stickers என்று நீங்கள் கூகிளில் சர்ச் செய்யலாம்.
 • ட்ரை செய்து பார்க்கலாம் வாங்க

  ட்ரை செய்து பார்க்கலாம் வாங்க

  • APKPURE என்ற வலைப்பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட குக் வித் கோமாளி ஸ்டிக்கர் பேக்கை மட்டுமே சோதனை செய்து பார்த்துளோம்.
  • அதனால், அதையே நீங்களும் ட்ரை செய்து பார்க்கலாம். விருப்பம் உங்களுடையது.
  • இந்த பயன்பாட்டை எவ்வாறு பயன்படுத்துவது?

   இந்த பயன்பாட்டை எவ்வாறு பயன்படுத்துவது?

   • பயன்பாட்டைப் பதிவிறக்கி இன்ஸ்டால் செய்தவுடன் ஆப்ஸை திறக்கவும்.
   • ஸ்டிக்கர் பேக்கில் கிளிக் செய்யவும்.
   • 'ADD TO WHATSAPP' என்ற விருப்பத்தை கிளிக் செய்யுங்கள்.
   • உங்கள் செயலை உறுதிப்படுத்த Confirm பட்டனை அழுத்தவும்.
   • ஈமோஜி ஐகான்

    ஈமோஜி ஐகான்

    • உங்களின் வாட்ஸ்அப் ஆப்ஸை திறந்து ஏதேனும் ஒரு சாட்டிற்கு செல்லுங்கள்.
    • உங்கள் வாட்ஸ்அப் சாட் லே- அவுட் இல் இருக்கும் ஈமோஜி ஐகானைத் கிளிக் செய்யவும்.
    • இப்போது கீழே ஒரு புதிய ஸ்டிக்கர் ஐகானைக் காண்பீர்கள்.
    • அதில் காணப்படும் குக் வித் கோமாளிகள் ஸ்டிக்கர் பேக்கைப் கிளிக் செய்து நீங்கள் பயன்படுத்தலாம்.
    • முக்கிய குறிப்பு

     முக்கிய குறிப்பு

     இது வாட்ஸ்அப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஸ்டிக்கர் பேக் இல்லை என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். மூன்றாம் நபரால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால், இது அனைவரின் ஸ்மார்ட்போனிலும் ஒரே மாதிரியாக வேலை செய்யாது. இந்த ஸ்டிக்கர்களை பதிவிறக்கம் செய்த பிறகு வாட்ஸ்அப்பில் இந்த ஸ்டிக்கர் பேக்கை காணவில்லை என்றால்,

     சிக்கலை சரி செய்ய இதை செய்யுங்கள்

     சிக்கலை சரி செய்ய இதை செய்யுங்கள்

     நீங்கள் உங்களின் செட்டிங்ஸ் இல் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். சில போன்கள் மட்டும் இந்த பயன்பாட்டை பின்னணியில் இயக்க அனுமதிக்காது. அப்போது, உங்கள் போனில் உள்ள Settings-->Battery-->Battery Optimization சென்று StickerHut செலக்ட் செய்து 'Don't Optimize' கிளிக் செய்யுங்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
How To Download And Send Cook with Comali WhatsApp Stickers in Tamil : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X