வாட்ஸ்அப் வழியாக இப்படியும் சுதந்திர தின வாழ்த்துக்கள் சொல்லலாமா?
வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த சிறப்பு தினத்தை பிரியப்பட்டவர்களுக்கு போட்டோ மெசேஜ் அனுப்புவது, கால் செய்து வாழ்த்துக்கள் கூறுவது, வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை அனுப்புவது போன்றவற்றின் மூலம் கொண்டாட வேண்டும். அதாவது இந்த கோவிட்-19 சூழலில் இந்த சிறப்பு தினத்தை இப்படியும் கொண்டலாம்.

மேலும் இப்போது வாட்ஸ்அப் வழியே வாழ்த்துக்கள் கூறுவதை மக்கள் அதிகம் விரும்புகின்றனர் என்றுதான் கூறவேண்டும். அதன்படிஇந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தின வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை எங்கே பதிவிறக்கம் செய்யலாம் என்பதை சற்று விரிவாகப் பார்ப்போம்.

உங்களது ஸ்மார்ட்போனில் இருக்கும் கூகுள் பிளே ஸ்டோரில் உள்நுழைய வேண்டும். அடுத்து அங்கே Search-இல் Independence Day WhatsApp stickers என டைப் செய்து தேடவேண்டும். அதன்பின்பு உங்களுக்கு நிறைய ஸ்டிக்கர் பேக் காண்பிக்கப்படும், அதில் உங்களுக்கு பிடித்ததை தேர்வு செய்து டவுன்லோடு செய்யவும்.

குறிப்பாக நீங்கள் தேர்வுசெய்த ஸ்டிக்கர் டவுன்லோடு செய்யப்பட்டதும் அதை ‘Add to WhatsApp' என்கிற பட்டனை அல்லது ‘+' ஐகானை கிளிக் செய்யவும். இப்போது உங்களது வாட்ஸ்அப் திறக்கவும், அதில் நீங்கள் யாருக்கு வாழ்த்துக்கள் அனுப்ப வேண்டுமோ அவரின் சாட் விண்டோவை திறந்து அதில் உங்களுக்கு விருப்பமான ஸ்டிக்கரை தேர்வு செய்து அனுப்பலாம்.

மேலும் சமீபத்தில் கொரோனா கொரோனா தடுப்பூசி செலுத்துக் கொண்டவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் சான்றிதழ் வழங்கும் வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது..கோவிட் -19 தடுப்பூசியின் ஒரு டோஸ் அல்லது இரண்டு டோஸ் நீங்கள் எடுத்திருத்தால், உங்களால் சான்றிதழை பதிவிறக்கம் செய்ய முடியும். அதேபோல் இந்த சான்றிதழ் இருந்தால் தான் பல்வேறு நாடுகள், மாநிலங்கள் மற்றும் சுற்றுலா தளங்களில்
அனுமதி வழங்கப்படுகிறது.

அதாவது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள +91 9013151515-மொபைல் எண்ணை பதிவு செய்து, அதன்பின்பு வாட்ஸ்அப்பில் 'COVID CERTIFICATE' என்று அனுப்பினால் ஓடிபி எண் அடிப்படையில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கிடைக்கும். குறிப்பாக இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பகிர்ந்துள்ளார்.

தடுப்பூசி சான்றிதழை கோவின் ஆப் அல்லது ஆரோக்ய சேது செயலியில் இருந்து கூட பதிவிறக்கம் செய்யலாம். குறிப்பாக நீங்கள் ஒரு டோஸ் மட்டுமே பெற்றிருந்தால் கூட அதற்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்ய முடியும். வாட்ஸ்அப் செயலியில் தடுப்பூசி சான்றிதழ் பதிவிறக்கம் செய்யும் வசதியை அதிக மக்கள் பயன்படுத்துவார்கள் எனஎதிர்பார்க்கப்படுகிடுறது.


Click it and Unblock the Notifications