Google Pay பரிவர்த்தனை வரலாற்றை நீக்குவது எப்படி? உடனே தெரிஞ்சுக்கோங்க..

|

வாட்ஸ்அப் சமீபத்தில் தனது கட்டண பயன்பாட்டை நாட்டில் அறிமுகப்படுத்தியது. புதிதாகத் தொடங்கப்பட்ட கட்டண பயன்பாடு பணத்தை அனுப்பவும் பெறவும் உங்களை அனுமதிக்கிறது. இதேபோல், கூகிள் பே பயன்பாடும் சமீபத்திய காலத்தில் பணத்தை அனுப்பவும் பெறவும் உங்களை அனுமதிக்கிறது. இப்படி நீங்கள் பணம் அனுப்பியவர்களின் விபரங்கள் உங்கள் கூகிள் பே-வில் பட்டியல் இடப்பட்டிருக்கும். இதை எப்படி நீக்கலாம் என்று பார்க்கலாம்.

கூகிள் பே பயன்பாட்டை மக்கள் விரும்ப காரணம் என்ன?

கூகிள் பே பயன்பாட்டை மக்கள் விரும்ப காரணம் என்ன?

கூகிள் பே பயன்பாட்டை மக்கள் விரும்பி அதிகம் பயன்படுத்தக் காரணம், பரிவர்த்தனைகளைச் செய்தபின் பயனர்களுக்குப் பல பரிசுகள் ஸ்க்ராட்ச் கார்டு மூலம் வழங்கப்படுகிறது. அதில் உங்களுக்குக் கிடைக்கும் பணப் பரிசுகள் உங்கள் வங்கிக் கணக்கிற்குச் செல்லும். பரிவர்த்தனை விவரங்களை நீக்கக் கூகிள் பே உங்களை அனுமதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கூகிள் பே சாட்டை நீக்க மட்டுமே உங்களுக்கு அனுமதி உண்டு.

டெலீட் செய்யும் வழிமுறைகள்

டெலீட் செய்யும் வழிமுறைகள்

இருப்பினும் கூகிள் பே பரிவர்த்தனை விபரங்களை நீங்கள் அகற்ற விரும்பினால், கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் தேவையை நிறைவேற்றிக்கொள்ளுங்கள்.

இதைச் சரியாகச் செய்ய நீங்கள் முதலில் Google Chrome பயன்பாட்டை ஓபன் செய்ய வேண்டும்.

Google Pay ஆப்ஸ்

Google Pay ஆப்ஸ்

பின்னர் நீங்கள் my.account.google.com என்று டைப் செய்து சர்ச் செய்ய வேண்டும். அதன் பிறகு, இது உங்களை Google Pay செயல்பாட்டை நோக்கித் திருப்பிவிடும். பின்னர், நீங்கள் personalization தரவை கிளிக் செய்ய வேண்டும்.

மை ஆக்டிவிட்டி ஆப்ஷன்

மை ஆக்டிவிட்டி ஆப்ஷன்

பின்னர், நீங்கள் 'My Activity' ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு, ஒரு புதிய திரை தோன்றும், இது தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு மற்றும் டெலீட் செய்ய வேண்டிய தயாரிப்பு ஆகியவற்றைத் தேர்வு செய்யுமாறு கேட்கும்.

டெலீட் செய்யும் விருப்பம்

டெலீட் செய்யும் விருப்பம்

இது நிறைவடைந்ததும், தேதி அடிப்படையில் டெலீட் செய்வதற்கான விருப்பத்தை உங்களுக்கு வழங்கும். இதில் ஏழு நாட்கள் பரிவர்த்தனையா அல்லது கடைசி 30 நாட்கள் பரிவர்த்தனை அல்லது முழுமையாக அனைத்து பரிவர்த்தனை விபரங்களும் டெலீட் செய்யப்பட வேண்டுமா என்று உங்களுக்குத் தேர்வு செய்யும் வாய்ப்பு வழங்கப்படும்.

12 மணி நேரம் என்பதை மறக்க வேண்டாம்

12 மணி நேரம் என்பதை மறக்க வேண்டாம்

அடுத்து நீங்கள் Google Pay விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். பின்னர், டெலீட் கிளிக் செய்து OK கிளிக் செய்ய வேண்டும். இதைச் செய்தது ஒரு அறிவிப்பு உங்கள் டிஸ்பிளேவில் தோன்றும், அதில் உங்கள் அனைத்து ஆக்ட்டிவிட்டிகளையும் நீக்க மற்றும் டெலீட் விருப்பத்தை கிளிக் செய்ய கேட்கும். நீங்கள் டெலீட் செய்யும் தகவல்கள் 12 மணி நேரத்திற்குப் பின்பு தான் மறையும் என்பதை மறக்க வேண்டாம்.

Best Mobiles in India

English summary
How To Delete Google Pay Transaction History Easily : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X