வாட்ஸ்அப் குரூப்பை அப்படியே புதிய பொலிவுடன் சிக்னல் ஆப்ஸிற்கு ஈஸியா மாற்றலாம்.. எப்படி தெரியுமா?

|

வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களை அதன் புதிய ஒப்புதல் விதிகளுக்குக் கட்டாயம் ஒப்புதல் வழங்கியாக வேண்டும் என்று வற்புறுத்தியதன் காரணமாக, உலகளவில் உள்ள பல வாட்ஸ்அப் பயனர்கள் இப்போது வாட்ஸ்அப் பயன்பாட்டை நிராகரித்து சிக்னல் மற்றும் டெலிக்ராம் போன்ற பிற மெசேஜ்ஜிங் ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்து வருகின்றனர். இப்போது இது தான் உலகம் முழுக்க பேசப்படும் ஹாட்டான டாபிக்.

வாட்ஸ்அப் குரூப் நண்பர்களை இலக்கபோகிறோம் என்ற கவலையா?

வாட்ஸ்அப் குரூப் நண்பர்களை இலக்கபோகிறோம் என்ற கவலையா?

இப்படி ஒட்டுமொத்தமாக வாட்ஸ்அப் சாட்டை ஒதுக்கிவிட்டு , வேறு ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த மனம் சற்று தயங்கினாலும், இறுதியில் அதையே அனைவரும் செய்து வருகின்றனர். இன்னும் சிலருக்கு வாட்ஸ்அப் பயன்பாட்டில் உள்ள குரூப் பயனர்களை எல்லாம் நாம் இளக்கப்போகிறோம் என்று வருத்தமாக இருக்கிறார்கள்.

சிக்னல் (Signal) ஆப்ஸ் தளத்தில் மாற்ற ஒரு வழி இருக்கு

சிக்னல் (Signal) ஆப்ஸ் தளத்தில் மாற்ற ஒரு வழி இருக்கு

கவலைப் படாதீர்கள், உங்கள் வாட்ஸ்அப் குரூப் இல் உள்ள பயனர்களை அப்படியே சிக்னல் பயன்பாட்டிற்கு நீங்கள் மாற்றம் செய்ய ஒரு வழி உள்ளது. வாட்ஸ்அப் குரூப் சாட்டில் உள்ள பயனர்கள் எப்படி எளிதாக சிக்னல் (Signal) ஆப்ஸ் இடத்திற்கு மாற்றம் செய்வது என்பதை விளக்கமாகப் பார்க்கலாம்.

BSNL அறிமுகம் செய்த ரூ. 398 பேக்கில் இவ்வளவு அன்லிமிடெட் நன்மையா? புதிய டேட்டா & வாய்ஸ் கால் திட்டம்..

உடனே கீழே குறிப்பிட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றுங்கள்

உடனே கீழே குறிப்பிட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றுங்கள்

வாட்ஸ்ஆப் குரூப் நண்பர்களை இழக்க விரும்பவில்லை என்றால், நீங்கள் உடனே கீழே குறிப்பிட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி உடனே சிக்னல் தளத்தில் உங்கள் வாட்ஸ்அப் குரூப் நண்பர்கள் மாற்றம் செய்துகொள்ளுங்கள்.

முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் சிக்னல் மெஸ்சேன்ஜர் என்ற ஆப்ஸை பதிவிறக்கம் செய்யுங்கள்.

மொபைல் எண் மட்டும் கட்டாயம்

மொபைல் எண் மட்டும் கட்டாயம்

  • சிக்னல் ஆப்ஸை, உங்களின் வாட்ஸ்அப் போலப் பயன்படுத்த உங்களின் மொபைல் எண்ணைப் பதிவிடுங்கள்.
  • சிக்னல் ஆப்பிற்குள் உள்நுழைந்து, மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளி ஐகானை கிளிக் செய்யுங்கள்.
  • இப்போது, அதில் உள்ள Action மெனுவைத் தேர்வு செய்து, பின்னர் New group என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

வல்லவனுக்கு வல்லவன்: வாட்ஸ்அப்-க்கு எதிராக சிக்னல் சேவை- இதை பயன்படுத்துங்க எலான் மஸ்க்கே சொல்லிட்டாரு!

Group setting
  • இப்போது, சிக்னலில் ஒரு புதிய குரூப்பை உருவாக்குங்கள்.
  • நீங்கள் உருவாக்கிய குரூப்பின் மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளி ஐகானை கிளிக் செய்யுங்கள்.
  • பின்னர் ‘Group settings' என்பதை கிளிக் செய்து, அதில் உள்ள Group link என்கிற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
  • அடுத்தபடியாக, Group link செய்வதற்கான Toggle ஆன் பட்டனை கிளிக் செய்யவும்.
Link-ஐ காப்பி செய்யுங்கள்
  • அதனைத் தொடர்ந்து Share என்ற விருப்பத்தை கிளிக் செய்து, டிஸ்பிளேவில் கட்டப்படும் Link-ஐ காப்பி செய்யுங்கள்.
  • இப்போது, உங்கள் வாட்ஸ்அப் குரூப்பிற்கு சென்று அந்த லிங்க்-ஐ பேஸ்ட் செய்யுங்கள்.
  • இதன் வழி, லிங்க்-ஐ கிளிக் செய்யும் நண்பர்கள் நேரடியாக உங்களின் புதிய சிக்னல் ஆப் குரூப்பிற்கு வந்து சேர்வார்கள்.
இந்த வழிமுறை உங்களுக்குப் பெரிதும் உதவும்

இந்த வழிமுறை உங்களுக்குப் பெரிதும் உதவும்

உங்களின் பழைய வாட்ஸ்அப் சாட்களை மீட்டெடுக்க முடியாது என்ற போதிலும், உங்கள் வாட்ஸ்அப் குரூப்பில் உள்ள நண்பர்கள் யாரையும் இழக்காமல் பாதுகாத்துக்கொள்ள இந்த வழிமுறை உங்களுக்குப் பெரிதும் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். கூடுதல் டெக் தொடர்பான செய்திகளுக்கு கிஸ்பாட் உடன் இணைந்திருங்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
How to create new group link in the Singal Messenger app and share it on WhatsApp : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X