Home
Apps

கூகிள் பே ஆப்ஸ் இன் UPI PIN-ஐ எப்படி மாற்றுவது? பாதுகாப்பிற்கான ஈஸி டிப்ஸ்!

கூகிள் நிறுவனத்தின் கூகிள் பே என்பது ஒரு ஆன்லைன் கட்டண முறையாகும், இது பயனர்களைப் பணத்தை அனுப்பவும் பெறவும் அனுமதிக்கிறது. அதேபோல் மின்சார கட்டணம் செலுத்த, ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய, டிக்கெட் புக்கிங் மற்றும் பல ஆன்லைன் பரிவர்த்தனை சேவைகளை செய்ய கூகிள் பே அனுமதிக்கிறது. உலகளவில் பல மில்லியன் பயனர்கள் இந்த பயன்பாட்டை பயன்படுத்தி வருகின்றனர்.

கூகிள் பே

கூகிள் பே

கூகிள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகள் அனைத்தும் பாதுகாப்பானது, குறிப்பாக நீங்கள் செய்யும் எந்த பரிவர்த்தனைக்குக் கூடுதல் கட்டணம் இல்லை. இதில் பயனர்களுக்குக் கூடுதல் சலுகையும், பரிசுகளும் வழங்கப்படுகிறது. கூகிள் பே மூலம் நீங்கள் ஆன்லைன் ஷாப்பிங் செய்வதற்குக் கூகிள் பே கணக்கை உங்களின் வங்கிக் கணக்குடன் இணைந்திருந்தால் மட்டும் போதுமானது.

யுபிஐ(UPI) பின் பாதுகாப்பு

யுபிஐ(UPI) பின் பாதுகாப்பு

Google pay அல்லது GPay மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகள் அனைத்தும் யுபிஐ(UPI) பின் மூலம் பாதுகாக்கப்படுகின்றது. யுபிஐ பின் என்பது 4-6 இலக்க பாதுகாப்பு பின் எண்ணாகும், இது புதிய கட்டணம் செலுத்த வேண்டிய போதெல்லாம் உள்ளிட வேண்டும் என்பது கட்டாயம். பயனர் முதலில் வங்கிக் கணக்கைச் சேர்க்கும்போது UPI PIN அமைக்கப்படுகிறது. இருப்பினும், இப்போது உங்கள் UPI PIN ஐ மாற்றக் கூகிள் அனுமதி வழங்குகிறது.

UPI PIN ஐ எப்படி மாற்ற வேண்டும்?

UPI PIN ஐ எப்படி மாற்ற வேண்டும்?

Google Pay பயன்பாட்டை பயன்படுத்தி உங்கள் UPI PIN ஐ எப்படி மாற்ற வேண்டும் என்பதை பார்க்கலாம். இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றி உங்களுடைய யுபிஐ(UPI) பின் எண்ணை மாற்றிக்கொள்ளுங்கள்.

வழிமுறை

வழிமுறை

  • முதலில், உங்கள் சாதனத்தில் Google Pay பயன்பாட்டைத் திறக்கவும்.
  • அடுத்து, உங்கள் புத்தகத்தைப்படத்தை கிளிக் செய்யவும்.
  • புதிய திரையில், காணப்படும் Bank account ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • இப்போது, நீங்கள் மாற்றம் செய்ய வேண்டிய bank account விபரத்தை கிளிக் செய்யவும்.
  •  புதிய UPI PIN உருவாக்க

    புதிய UPI PIN உருவாக்க

    • புதிய திரையில் காணப்படும் More (மூன்று புள்ளிகளை) கிளிக் செய்யவும்.
    • கொடுக்கப்பட்ட விருப்பங்களிலிருந்து UPI PIN கிளிக் செய்யுங்கள்.
    • இப்போது, புதிய UPI PIN ஐ உருவாக்குங்கள்.
    • மீண்டும் அதே UPI PIN ஐ உள்ளிடவும்.
    • முக்கிய குறிப்பு

      முக்கிய குறிப்பு

      அவ்வளவுதான்! Google Pay ஐப் பயன்படுத்தி உங்கள் UPI PIN ஐ வெற்றிகரமாக மாற்றியுள்ளீர்கள். குறிப்பு: நீங்கள் தவறான UPI PIN ஐ 3 முறைக்கு மேல் உள்ளிட்டால், உங்கள் UPI PIN ஐ 24 மணி நேரம் மாற்றவோ அல்லது மீட்டமைக்கவோ முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இத்துடன் இந்த நேரத்தில் நீங்கள் எந்தவிதமான பரிவர்த்தனையும் மேற்கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
How to change your UPI PIN using Google Pay : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X