Google Maps-ன் 15ம் ஆண்டு தின கொண்டாட்டத்தை சுந்தர் பிச்சை கொண்டாடியது இப்படித்தான்!
உங்கள் ஸ்மார்ட்போன் மெனுவில் இன்று நீங்கள் நிச்சயம் ஒரு புதிய மாற்றத்தைக் காண முடியும். ஆம், உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள கூகிள் மேப்ஸ் பயன்பாட்டின் லோகோ புதிய தோற்றத்தில் மாற்றப்பட்டிருக்கும். இதற்கான காரணம் கூகிள் மேப்ஸ் பயன்பாட்டு செயலி அறிமுகம் செய்யப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிவிட்டது.

15வது பிறந்தநாளைக் கொண்டாடும் கூகிள் மேப்ஸ்
கூகிள் நிறுவனம் அறிமுகம் செய்த சில முக்கிய ஆப்ஸ்களில், கூகிள் மேப்ஸ் மிகவும் முக்கியமானது. உலகத்தில் பல பில்லியன் பயனர்கள் இந்த பயன்பாட்டை பயன்படுத்தி வருகின்றனர். கூகிள் மேப்ஸ்-ன் 15வது பிறந்தநாளைக் கொண்டாட, ஆல்பாபெட் மற்றும் கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, புது விதமாகக் கொண்டாட்டத்தைக் கொண்டாடியுள்ளார்.

வெஜ் பர்ரிட்டோ ஷேர் செய்த சுந்தர் பிச்சை
கூகிள் மேப்பிங் சேவையைப் பயன்படுத்தி உலகெங்கிலும் உள்ள தனக்குப் பிடித்த வெஜ் பர்ரிட்டோ உணவகங்களின் பட்டியலை மக்களுடன் பகிர்ந்துள்ளனர். 47 வயதான சுந்தர் பிச்சை, மும்பை, நியூயார்க், லண்டன், ஹெல்சின்கி, பாரிஸ், டப்ளின் மற்றும் பல நகரங்களில் உள்ள உணவகங்களை உள்ளடக்கிய விரிவான பட்டியலைப் பகிர்ந்துள்ளார்.

சுந்தர் பிச்சையின் இன்ஸ்டாகிராம் பதிவு
"நான் உலகம் முழுவதிலுமிருந்து எனக்குப் பிடித்த ருசியான வெஜ் பர்ரிட்டோ கிடைக்கும் இடங்களின் பட்டியலைத் தொகுத்தேன். நான் பயணிக்கும் போது எனக்கு ஆறுதல் தரும் ஒரே உணவு இந்த வெஜ் பர்ரிட்டோ உணவாகும், நல்ல பர்ரிட்டோவை கண்டதும் நான் மிகவும் உற்சாகமாக இருப்பேன்" என்று கூறி அவர் சேகரித்து வைத்த பட்டியலை இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் வெளியிட்டுள்ளார்.

புதிய 5 அம்சங்கள்
கூகிள் மேப்ஸிற்கான புதிய பயன்பாட்டில் ஐந்து டேப்களைக் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன்பு கூகிள் மேப்ஸ் இல் வழங்கப்பட்டிருந்த எக்ஸ்ப்ளோர் மற்றும் கம்யூட் சேவைகளுடன் சேர்த்து புதிதாக எக்ஸ்ப்ளோர், கம்யூட், காண்ட்ரிபியூட், சேவ்டு மற்றும் அப்டேட்ஸ் போன்று மொத்தம் ஐந்து சேவைகளைக் கூகிள் அறிமுகம் செய்துள்ளது.

எக்ஸ்ப்ளோர் டேப்
எக்ஸ்ப்ளோர் டேப் பயனர்களுக்கு, ஒரு உணவகம் அல்லது அவர்கள் பார்வையிட விரும்பும் வேறு இடத்தையும் தேட அனுமதிக்கிறது. அந்த இடத்திற்கான மதிப்பீடுகள், மதிப்புரைகள் மற்றும் குறிப்பிட்ட இடத்தைப் பற்றி எது சிறந்தது என்பது உட்படப் பல தகவல்கள் இந்த எக்ஸ்ப்ளோர் டேப் கீழ் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் முக்கியமான இடங்கள் உட்பட 200 மில்லியன் இடங்களைப் பற்றிய தகவல்களை இது கொண்டுள்ளது.

கம்யூட் டேப்
கம்யூட் டேப், நீங்கள் கார் அல்லது பஸ் அல்லது ஆட்டோ போன்ற பொது போக்குவரத்து மூலம் ஒரு இடத்திற்குப் பயணிக்கிறீர்கள் என்றால், போக்குவரத்து நெரிசல் இல்லாத மிகவும் வசதியான பாதையை உங்களுக்கான தேர்வு செய்து வழங்குகிறது. கம்யூட் சேவையைப் பயன்படுத்த நீங்கள் தினமும் பயணிக்கும் ரூட்டை சேவ் செய்ய வேண்டும். இதன் மூலம் லைவ் டிராபிக் விபரகங்ளை அணுக முடியும்.

சேவ் டேப்
சேவ் டேப், உங்களுக்கு பிடித்த இடங்களின் விபரங்களை சேவ் செய்துகொள்ள உதவுகிறது. நீங்கள் சேவ் செய்து வைத்துள்ள பகுதிகளுக்கு அருகில் உள்ள மற்ற இடங்கள் மற்றும் சேவ் செய்த இடத்தை தழுவிய வேறு சில இடங்களையும் உங்களுக்கு இந்த டேப் காட்டுகிறது.

காண்ட்ரிபியூட் சேவை
காண்ட்ரிபியூட் சேவை, ஒரு இடத்தை பற்றிய தகவலை அங்குச் சென்ற பயனர்கள் மற்ற பயனர்களுடன் ஷேர் செய்துகொள்ள அனுமதிக்கிறது. மக்களுக்கான கூடுதல் தகவல்களைப் பயனர்களின் கருது மூலம் இங்கு நீங்கள் தெரிந்துகொள்ளலாம். அப்டேட்ஸ் டேப் பயனரை நேரடியாக அருகில் உள்ள வணிகர்களுடன் உரையாட அனுமதிக்கிறது.


Click it and Unblock the Notifications