வாட்ஸ் அப் டேட்டாக்களை பேஸ்புக்கில் பகிராமல் தடுப்பது எப்படி?

நீங்கள் வாட்ஸ் அப் விளம்பரங்களை பார்க்க முடியாது, ஆனால் நீங்கள் கண்டிப்பாக வாட்ஸ் அப் இல் இருந்து உங்கள் தரவு அடிப்படையில் பேஸ்புக் நண்பர் பரிந்துரைகள் மற்றும் விளம்பரங்கள் பார்த்து தொடங்க முடியும்.

|

வாட்ஸ் அப் விரைவில் உங்களுடைய சில டேட்டாக்களை பேஸ்புக்கில் பகிரவுள்ளது. இது உங்களுக்கு பேஸ்புக் மூலம் அதிக விளம்பரங்களை தரும் ஒரு பகுதியாகும். நீங்கள் வாட்ஸ் அப் விளம்பரங்களை பார்க்க முடியாது, ஆனால் நீங்கள் கண்டிப்பாக வாட்ஸ் அப் இல் இருந்து உங்கள் தரவு அடிப்படையில் பேஸ்புக் நண்பர் பரிந்துரைகள் மற்றும் விளம்பரங்கள் பார்த்து தொடங்க முடியும். இந்த புதிய முறை உங்களுக்கு அசெளகரியாக தெரிந்தால் நீங்கள் இதை டிஸேபில் செய்து கொள்ளலாம்.

வாட்ஸ் அப் டேட்டாக்களை பேஸ்புக்கில் பகிராமல் தடுப்பது எப்படி?

இதை செட்டிங்ஸ் மூலம் எப்படி டிஸேபிள் செய்வது என்பதை தற்போது பார்ப்போம், இந்த வசதியை நீங்கள் டிசேபிள் செய்ய முயற்சிக்கும்போது உங்களுக்கு இதில் சம்மதம் தானா என்ற உறுதிமொழியை கேட்கும். இதற்கு நீங்கள் சம்மதித்தால் அடுத்த கட்ட வழிமுறைகள் ஆரம்பமாகும்.

பேஸ்புக்:

பேஸ்புக்:

1. முதலில் ரீட் என்பதை சொடுக்க வேண்டும்
2. பின்னர் பேஸ்புக்கில் என்னுடைய வாட்ஸ் அப் டேட்டாக்களை பகிர வேண்டாம் என்பதை குறிப்பிடும் வகையில் உள்ள பட்டனை அழுத்துங்கள்.

வாட்ஸ் அப்:

வாட்ஸ் அப்:

இதற்கு இன்னொரு முறையும் உள்ளது. அந்த இரண்டாவது வழி என்னவெனில் இந்த நடவடிக்கைக்கு நீங்கள் சம்மதம் தெரிவித்தவுடன், பின்வருபவற்றைப் பின்பற்றுவதன் மூலம், பேஸ்புக்கில் உங்கள் விவரங்களை பகிர்ந்து கொள்ளாமலிருந்தால், நீங்கள் இன்னும் வாட்ஸ் அப்-ஐ நிறுத்தலாம்:

 ஐபோனுக்கு என்ன செய்ய வேண்டும்?

ஐபோனுக்கு என்ன செய்ய வேண்டும்?

1. செட்டிங் சென்று அங்குள்ள அக்கவுண்ட் என்ற பட்டனை அழுத்தவு
2. பின்னர் அன்செக் ஷேர் மை அக்கவுண்ட் இன்பர்மேசன் என்பதை அழுத்திவிட்டால் போதுமானது.

 ஆண்ட்ராய்ட் போனுக்கு என்ன செய்ய வேண்டும்?

ஆண்ட்ராய்ட் போனுக்கு என்ன செய்ய வேண்டும்?

1. வலது மேல்பக்கம் உள்ள மூன்று கோடுகளை அழுத்த வேண்டும்
2. செட்டிங் பின்னர் அக்கவுண்டு என்பதை அழுத்த வேண்டும்
3. பின்னர் அன்செக் ஷேர் மை அக்கவுண்ட் இன்பர்மேசன் என்பதை அழுத்த வேண்டும்

How to check PF Balance in online (TAMIL)
விதிமுறை:

விதிமுறை:

இது பேஸ்புக் மூலம் உங்கள் டேட்டாவை பகிர்வதில் இருந்து வாட்ஸ் அப்-ஐ தடுக்கிறது. இந்த சேவையின் புதுப்பிப்பு விதிமுறைகளைக் காணவில்லை அல்லது மேலே குறிப்பிட்டுள்ள அமைப்பு பயன்பாட்டில் காட்டப்படவில்லை என்றால், இந்த மாற்றங்கள் இதுவரை உங்கள் சாதனத்தில் இல்லை என்று அர்த்தம். அவ்வாறானவர்கள் சில காலம் காத்திருந்து பின்னர் மேற்கண்ட முறையை பின்பற்றுங்கள். அதுவரை இவற்றை ஞாபகம் வைத்து கொள்வதும் அவசியம்.

Best Mobiles in India

English summary
How to Stop WhatsApp From Sharing Your Details With Facebook ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X