கான்டாக்ட் சேவ் செய்யாமல் வாட்ஸ்அப் சாட் செய்ய அற்புத டிப்ஸ்.!

வாட்ஸ்அப் சாட் செய்ய அவசியம் குறிப்பிட்ட கான்டாக்ட்-ஐ சேமிக்க வேண்டிய அவசியம் கிடையாது. இவ்வாறு செய்வதற்கென பல்வேறு மூன்றாம் தரப்பு செயலிகள் கிடைக்கின்றன.

|

குறுந்தகவல்களை மற்றவர்களுடன் பரிமாறிக் கொள்ள மிகவும் பிரபலமான செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. இந்த செயலியை கொண்டு சரியான மொபைல் நம்பரை சேர்த்து விட்டு உலகின் எந்த பகுதியில் உள்ளவரிடமும் தொடர்பு கொள்ள முடியும்.

கான்டாக்ட் சேமிக்காமலும் வாட்ஸ்அப் சாட் செய்யலாம்.!

எனினும் வாட்ஸ்அப் சாட் செய்ய முதலில் நீங்கள் குறுந்தகவல் அனுப்புவோரின் கான்டாக்ட்-ஐ சேமிக்க வேண்டியவது அவசியமாகும். இவ்வாறு செய்வதில் அதிக சிக்கல் இல்லை என்றாலும் சில சூழ்நிலைகளில் சிலருக்கு சில மெசேஜ்களை மட்டுமே அனுப்ப வேண்டும் என்ற போது இது நமக்கு அசாதாரன சூழலை ஏற்படுத்தும்.

வாட்ஸ்அப் சாட்

வாட்ஸ்அப் சாட்

வாட்ஸ்அப் சாட் செய்ய அவசியம் குறிப்பிட்ட கான்டாக்ட்-ஐ சேமிக்க வேண்டிய அவசியம் கிடையாது. இவ்வாறு செய்வதற்கென பல்வேறு மூன்றாம் தரப்பு செயலிகள் கிடைக்கின்றன. இவ்வாறு கிடைக்கும் செயலிகள் உங்களது பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி, ஸ்மார்ட்போனில் உள்ள தகவல்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடலாம். சில செயலிகள் உங்களது இயங்குதளத்தில் வேலை செய்யாமலும் போகலாம்.

மூன்றாம் தரப்பு செயலி

மூன்றாம் தரப்பு செயலி

இந்த பிரச்சனையில் இருந்து விடுபட, கான்டாக்ட்-ஐ சேமிக்காமல் சாட் செய்யும் வழிமுறையை இந்த தொகுப்பில் பார்ப்போம். மேலும் இதை செய்ய மூன்றாம் தரப்பு செயலிகளை இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. இத்துடன் இந்த வழிமுறை ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களிலும் வேலை செய்யும்.

கான்டாக்ட்-ஐ சேமிக்காமல் வாட்ஸ்அப் சாட் செய்வது எப்படி?

கான்டாக்ட்-ஐ சேமிக்காமல் வாட்ஸ்அப் சாட் செய்வது எப்படி?

இந்த வழிமுறை அதிகளவு ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதோருக்கு முதலில் குழப்பமானதாக தெரியலாம். எனினும் ஒருமுறை இதை வெற்றிகரமாக செய்து முடித்தால் அதன் பின் மற்றமுறை மிக சுலபமாக சாட் செய்யலாம்.

- முதலில் உங்களின் ஸ்மார்ட்போனில் உள்ள பிரவுசரை திறக்க வேண்டும்.

- இனி சர்ச் பாரில் https://api.whatsapp.com/send?phone=XXXXXXXXXXX லின்க்-ஐ டைப் செய்ய வேண்டும். (X என்ற இடங்களுக்கு மாற்றாக நீங்கள் சாட் செய்ய வேண்டியவரின் நம்பரை, குறிப்பிட்ட தேசிய குறியீட்டையும் எவ்வித இடைவெளியும் இல்லாமல் பதிவிட வேண்டும்)

- அந்த வகையில் நீங்கள் சாட் செய்ய வேண்டியது இந்திய எண் என்றால் +91 என துவங்க வேண்டும், அதாவது உங்களது லின்க் https://api.whatsapp.com/send?phone=919175550123 என இருக்க வேண்டும்.

கான்டாக்ட் சேவ் செய்யாமல்

கான்டாக்ட் சேவ் செய்யாமல்

- இவ்வறு செய்ததும் ஸ்மார்ட்போனில் என்டர் பட்டனை கிளிக் செய்யவும்.

- இனி ஸ்மார்ட்போன் பிரவுசர் திரையில் வாட்ஸ்அப் திரை ஓபன் ஆகி, நீங்கள் பதிவிட்ட எண்ணிற்கு சாட் செய்ய வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பும். இங்கு சென்ட் மெசேஜ் (send message) எனக் கோரும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

- அடுத்து நேரடியாக வாட்ஸ்அப் செயலி திறக்கும், இனி நீங்கள் பதிவிட்ட நபருடன் சாட் செய்ய துவங்கலாம்.

இனி வாட்ஸ்அப் செயலியில் கான்டாக்ட் சேவ் செய்யாமல் சாட் செய்ய வேண்டிய சூழ்நிலைகளின் போது இதே வழிமுறையை பின்பற்றலாம்.

Best Mobiles in India

English summary
How to send a WhatsApp chat without saving the contact; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X