இன்ஸ்டாகிராம் செயலியில் ஆடியோ மெசேஜ் அனுப்புவது எப்படி?
ஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தள சேவையில் சமீபத்தில் ஆடியோ மெசேஜ் செய்யும் வசதி அதன் டைரக்ட் மெசஜஸ் ஆப்ஷனில் சேர்க்கப்பட்டது.
ஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தள சேவையில் சமீபத்தில் ஆடியோ மெசேஜ் செய்யும் வசதி அதன் டைரக்ட் மெசஜஸ் ஆப்ஷனில் சேர்க்கப்பட்டது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் ஆடியோ மெசேஜ் வசதி வழங்கப்பட்டுள்ளது.
புதிய ஆடியோ அம்சம் பயனர்களை தங்களது குரலை பதிவு செய்து மறறவர்களுக்கு வாய்ஸ் நோட் வடிவில் அனுப்ப வழி செய்கிறது. இதனை பயனர்கள் தனி நபருக்கோ அல்லது க்ரூப் சாட் உள்ளிட்டவற்றில் அனுப்ப முடியும்.

செயல்முறை:
ஏற்கனவே பல்வேறு சேவைகளில் இதுபோன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இன்ஸ்டாகிராம் செயலியில் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

தேவையானவை
- சீராக இயங்கும் இணைய வசதி
- இன்ஸ்டாகிராம் ஆண்ட்ராய்டு வெர்ஷன் 72.0.0.22 அல்லது அதற்கும் அதிக வெர்ஷன்
- இன்ஸ்டாகிராம் ஐ.ஓ.எஸ். வெர்ஷன் 74.0 அல்லது அதற்கும் அதிக வெர்ஷன்
- இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்

ஐ.ஓ.எஸ். இயங்குதளம்
- ஆப் ஸ்டோர் செல்ல வேண்டும்
- இன்ஸ்டாகிராம் செயலியை தேட வேண்டும்
- அப்டேட் பட்டனை கிளிக் செய்து செயலி அப்டேட் ஆகும் வரை காத்திருக்கவும்

வாய்ஸ் நோட் அனுப்பும் வழிமுறை:
- ஸ்மார்ட்போனில் இன்ஸ்டாகிராம் செயலியை திறக்க வேண்டும்
- டைரக்ட் மெசேஜ் ஐகானை கிளிக் செய்ய வேண்டும். இதனை செயலியின் மேல் பக்கம் வலது புறத்தில் காணலாம்
- நீங்கள் வாய்ஸ் மெசேஜ் அனுப்ப விரும்பும் கான்டாக்ட் அல்லது க்ரூப்பை தேர்வு செய்ய வேண்டும்
- இனி டெக்ஸ்ட் பாக்ஸ் பகுதியில் உள்ள மைக் ஐகானை கிளிக் செய்ய வேண்டும்
- மைக் ஐகானை அழுத்திப்பிடித்துக் கொண்டு, நீங்கள் அனுப்ப விரும்பும் விவரத்தை பேசலாம்
- பேசி முடித்தப் பின் மைக் ஐகானை விடுவிக்க வேண்டும். இவ்வாறு செய்ததும் வாய்ஸ் மெசேஜ் சென்று விடும்.
- பயனர்கள் ரெக்கார்டிங் பட்டனை அழுத்தி மேல்பக்கமாக ஸ்வைப் மூலம் லாக் செய்யலாம்.

குறிப்பு:
நீங்கள் பேச விரும்பும் தகவலில் தப்பு செய்திருப்பின், மைக் ஐகானை இடது புறமாக ஸ்வைப் செய்யலாம். இவ்வாறு செய்தால் நீங்கள் பேசிய தகவல் அழிக்கப்பட்டு விடும். இனி மீண்டும் ரீடேக் முறையில் பேச துவங்கலாம். ஒருவேளை ஏற்கனவே வாய்ஸ் மெசேஜ் சென்று இருப்பின், அதனை அழுத்திப் பிடித்து அன்சென்ட் செய்யலாம்.


Click it and Unblock the Notifications