ஆன்லைனில் கிஃப்ட் கார்டுகளை விற்பனை செய்வது எப்படி?
பொதுவவாக கிஃப்ட் கார்டுகளை கொண்டு நாம் விரும்பும் பொருட்களை வாங்க முடியாது.
கிஃப்ட் கார்டுகளை வைத்திருப்பதில் நக்கலான விஷயமே, அவற்றை விரும்பிய படி பயன்படுத்த முடியாமல் போவது தான். பொதுவவாக கிஃப்ட் கார்டுகளை கொண்டு நாம் விரும்பும் பொருட்களை வாங்க முடியாது. இறுதியில் கிஃப்ட் கார்டு பயனற்று போகக்கூடாது என்ற காரணத்தால், அதை கொண்டு வேண்டா வெறுப்பாக கிடைக்கும் பொருளை வாங்குவோம்.

ஆனால் கிஃப்டு கார்டுகளை கொடுத்து அதற்கு சமமமான பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என அறிவீர்களா? ஆனால் இவ்வாறு செய்ய சில விதிமுறைகளும் இருக்கின்றன. அவை என்ன என்பதை கீழே பார்ப்போம்:
அ) ஆன்லைன் பரிமாற்றங்களின் போது, எந்நேரத்திலும் நீங்கள் ஏமாற்றப்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
ஆ) பணத்தை பெறும் முன் கார்டினை அனுப்ப வேண்டாம். கிஃப்ட் கார்டு ஒரு குறிப்பிட்ட கடையை சேர்ந்தது எனில், நேரடியாக கடைக்கு சென்று சம்பந்தப்பட்ட நபரை நேரில் பார்த்து பரிமாற்றத்தை செய்வது சிறந்தது.
இ) இதே வழிமுறைகள் இ-வவுச்சர்களுக்கும் பொருந்தும்.
ஈ) மூன்றாம் தரப்பு வலைதளம் மூலம் பரிமாற்றம் செய்யும் போது, அவற்றின் அனைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தணைகளை படித்துக் கொள்ள வேண்டும்.
கிஃப்ட் கார்டுகளை ஆன்லைனில் விற்பனை செய்வதற்கென பல்வேறு வலைதளங்கள் இருக்கிறது என்றாலும், இவற்றை பயன்படுத்தும் போது சிலசமயங்களில் நீங்கள் எதிர்பார்க்கும் வாடிக்கையாளர் கிடைக்காமல் போகலாம். ஒரு வலைதளம் கிஃப்ட் கார்டுகளை நேரடியாக பெற்றுக் கொள்ளும் என்றாலும், இவை உங்களுக்கு 35 சதவிகத்திற்கான தொகையை மட்டுமே வழங்கும்.
ஆன்லைனில் கிஃப்ட் கார்டுகளை விற்பனை செய்வதற்கான வலைதளங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

செல்லபிரேட் (Sellebrate)
மற்ற வலைதளங்களை போன்று இல்லாமல், இந்த வலைதளத்தில் கிஃப்ட் கார்டுகளை கொடுத்து பணம் பெற்றுக் கொள்ளலாம். மற்ற வலைதளங்களில் கிஃப்ட் கார்டுகளை பதிவேற்றம் செய்து, அதனை வாங்குவோருக்காக காத்திருப்பதை விட செல்லபிரேட் தளத்தில் நேரடியாக பணம் பெற்றுக் கொள்ளலாம்.

CanSell (கேன்செல்)
கிஃப்ட் கார்டுகளை சந்தைப்படுத்தும் வலைதளமாக கேன்செல் இருக்கிறது. இந்த தளத்தில் இலவசம் மற்றும் பாதுகாப்பு என இருவிதங்களில் பரிமாற்றம் செய்ய முடியும். இலவசமாக தொடர்வது சற்று ஆபத்தானதாகும். பாதுகாப்பான பரிமாற்றங்களை தேர்வு செய்வது நல்லது. இரண்டாவது ஆப்ஷனை பயன்படுத்தும் போது கிஃப்ட் கார்டின் மொத்த கட்டணத்தில் ஐந்து சதவிதகிதம் கேன்செல் எடுத்துக் கொள்ளும்.

நஃபா (Nafa)
நஃபா வலைதளமும் கிஃப்ட் கார்டுகளை சந்தைப்படுத்துவதற்கென இயங்குகிறது. இந்த வலைதளத்தில் உங்களது கிஃப்ட் கார்டுகளை பட்டியலிட்டு, அவை நஃபா பயனர்களே வாங்கிக் கொள்வர். இதற்கான கட்டணமாக நஃபா ஐந்து சதவிகித்ததை எடுத்துக் கொள்ளும்.

சிங்கோய் (Zingoy)
சிங்கோய் வலைதளம் மூலம் கிஃப்ட் கார்டுகளை விற்பனை செய்ய சிறிதிளவு பிராசசிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் ஒவ்வொரு பிராண்டிற்கும் ஏற்ப வேறுபடும்.

இதர வலைதளங்கள்
மேலே கொடுக்கப்பட்டுள்ள வலைதளங்கள் மட்டுமின்றி, க்விக்கர் அல்லது ஓ.எல்.எக்ஸ். போன்ற வலைதளங்களை பயன்படுத்தலாம். இதுதவிர இந்தியன்வீடியோகேமர் (IndianVideoGamer) எனும் வலைதளம் இயங்குகிறது. இதில் கேமிங் சார்ந்த கிஃப்ட் கார்டுகளை விற்பனை செய்ய முடியும்.

சமூக வலைதளங்கள்
கிஃப்ட் கார்டுகளை விற்பனை செய்ய சமூக வலைதளங்களை பயன்படுத்துவது சிறப்பானதாக இருக்கும். ரெடிட் வலைதளத்தில் GiftCardExchange எனும் குழு இயங்குகிறது. இதை கொண்டு பயனர்கள் கிஃப்ட் கார்டுகளை ரொக்கம் அல்லது இதர கிஃப்ட் கார்டுகளுடன் மாற்றிக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications