டிராய் புதிய விதிகளின்படி டிஷ் டிவியில் சேனல்களை தேர்வு செய்வது எப்படி?

|

டிராய் சமீபத்தில் அறிவித்த புதிய விதிகளின்படி கேபிள் கனெக்சன் உள்ளவர்கள் தங்களுக்கு விருப்பமான சேனல்களை தேர்வு செய்வது எப்படி? என்பது குறித்து தற்போது பார்ப்போம். ஏற்கனவே டாடா ஸ்கை, ஏர்டெல் டிஜிட்டல் டிவி, போன்ற டிஷ்களில் பிடித்தமான சேனல்களை தேர்வு செய்வது எப்படி? என்பது குறித்து பார்த்தோம்.

டிராய் புதிய விதிபடி டிஷ் டிவியில் சேனல்களை தேர்வு செய்வது எப்படி?

தற்போது டிஷ் டிவியில் நமக்கு தேவையான சேனல் அல்லது ஒரு குறிப்பிட்ட சேனலின் பேக்கேஜ் ஆகியவற்றை எப்படி தேர்வு செய்வது என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

அடிப்படை கட்டணம் ரூ.130

அடிப்படை கட்டணம் ரூ.130

மேலும் இதனை தெரிந்து கொள்வதற்கு முன்னர் டிராய் அறிவித்த இந்த புதிய விதியை வரும் 31ஆம் தேதி வரை தேர்வு செய்து கொள்ளலாம் என்பதையும் ஞாபகப்படுத்த விரும்புகிறோம். மேலும் அடிப்படை கட்டணம் ரூ.130 மற்றும் அதற்குரிய ஜிஎஸ்டி கட்டணத்தை செலுத்தியே ஆகவேண்டும் என்பதும் அதற்கு மேல் தான் விருப்பப்படும் கட்டண சேனல்களை தேர்வு செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறைந்தபட்சம் அக்கவுண்டில் ரூ.100 இருக்க வேண்டும்

குறைந்தபட்சம் அக்கவுண்டில் ரூ.100 இருக்க வேண்டும்

மேலும் டிஷ் டிவியில் நமது கனெக்சன் எப்போதும் ஆக்டிவேட்டில் இருக்க வேண்டும் என்றால் நமது அக்கவுண்டில் குறைந்தபட்சம் ரூ.100 இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதை ஞாபகப்படுத்தி கொண்டு தற்போது டிஷ் டிவியில் விருப்பமான சேனல்களை தேர்வு செய்வது எப்படி? என்பதை பார்ப்போம்.

செயல்முறை:

செயல்முறை:

1. முதலில் டிஷ் டிவின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்

2. உங்கள் கம்ப்யூட்டர் அல்லது மொபைல் போனில் https://www.dishtv.in/ என்ற இணையதளத்தை ஓப்பன் செய்ய வேண்டும்

3. அந்த இணையதளத்தில் உள்ள 'மேரா ஆப்னா பேக்' என்ற பேனரை க்ளிக் செய்ய வேண்டும்

சேனல் மற்றும் பேக்கேஜ் சேனலின் விபரங்கள்

சேனல் மற்றும் பேக்கேஜ் சேனலின் விபரங்கள்

4. அந்த பேனரை க்ளிக் செய்தால், அது உங்களை லாகின் பக்கத்திற்கு அழைத்து செல்லும்

5. உங்களுடைய கணக்கை அதில் லாகின் செய்தவுடன் உங்கள் அக்கவுண்ட் உங்கள் கண்முன்னே தோன்றும். ஒருவேளை லாகின் பக்கம் வேலை செய்யவில்லை என்றால் பேக் மற்றும் சேனல் என்ற ஆப்சனை தேர்வு செய்யலாம்

6. அதன்பின்னர் அந்த பக்கத்தில் உள்ள ஜோன் அதாவது உங்கள் பகுதியை தேர்வு செய்ய வேண்டும். ஜோன் தேர்வு செய்தவுடன் ஒவ்வொரு சேனல் மற்றும் பேக்கேஜ் சேனலின் விபரங்கள் தோன்றும்

மொத்த கட்டண விபரம்

மொத்த கட்டண விபரம்

7. அதில் உங்களுக்கு விருப்பமான சேனல்களை தேர்வு செய்ய வேண்டும்

8. பயனாளிகள் தனிப்பட்ட வகையில் ஒரு சேனலையோ அல்லது சேனல்களின் தொகுப்புகள் ஒரு ஒரு பேக்கேஜையோ தேர்வு செய்யலாம்.

9. இறுதியாக உங்களுக்கு தேவையான சேனல்களை தேர்வு செய்தவுடன் அனைத்தையும் சேவ் செய்துவிட்டால் நீங்கள் தேர்வு செய்த சேனல்களுக்கான மொத்த கட்டண விபரம் உங்களுக்கு தெரிய வரும்

Most Read Articles
Best Mobiles in India

English summary
How to select channels on DishTV under the new TRAI rules : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X