அன்லாக் செய்யாமல் கூகுள் மேப்பை பார்ப்பது எப்படி?
கூகுள் மேப்பில் காட்டும் திசையை கண்டறிவதில் ஒருசிலருக்கு சங்கடங்கள் நேர்ந்திருக்க வாய்ப்பு உண்டு.
நமது ஒவ்வொருவரின் வாழ்விலும் கூகுள் மேப் என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது என்பது அனைவரும் ஒப்புக்கொள்ளும் ஒரு உண்மை ஆகும். நாம் எந்த இடத்தில் இருந்தாலும் கூகுளின் இந்த மேப் செயலி நமக்கு ஒரு வழிகாட்டியாக இருந்து உதவுகிறது. இருப்பினும் கூகுள் மேப்பில் காட்டும் திசையை கண்டறிவதில் ஒருசிலருக்கு சங்கடங்கள் நேர்ந்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் ஐபோன் பயனாளிகளுக்கு இந்த பிரச்சனை இல்லாத வகையில் ஒரு எளிய தீர்வு உள்ளது. ஆம் தற்போது ஐபோன் பயனாளிகள் அன்லாக் செய்யாமலேயே கூகுள் மேப் செயலியை ஓப்பன் செய்யும் வசதி கிடைத்துள்ளது.

கூகுள் மேப் லாக்ஸ்க்ரீன் விட்ஜெட், அன்லாக் செய்யாமலேயே ஐபோனில் எனேபிள் ஆகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது ஐபோன் பயனாளிகளுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் ஆகும். இதனால் இந்த விட்ஜெட், அன்லாக் செய்யாமலேயே கூகுள் மேப் ஓப்பன் ஆவது மட்டுமின்றி ஓப்பன் ஆனவுடனே அதன் திசையும் காட்டும் வகையில் இந்த செயலி செயல்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த வசதியை ஐபோன் வாடிக்கையாளர்கள் பெற ஒருசில ஸ்டெப்ஸ்களை பின்பற்ற வேண்டும்

ஸ்டெப் 1:
முதலில் ஐபோனில் உள்ள ஸ்க்ரீனை இடது பக்கமாக ஸ்வைப் செய்ய வேண்டும். ஐபோன் பயனாளிகள் ஏற்கனவே இன்ஸ்டால் செய்த அனைத்து விட்ஜெட்டுக்களை தற்போது பார்க்கலாம்

ஸ்டெப் 2:
அதன்பின்னர் இன்ஸ்டால் விட்ஜெட்டுக்களுக்கு கீழே சென்று எடிட் பட்டனை தேர்வு செய்து அதில் கூகுள் மேப்ஸ் விட்ஜெட்டை சேர்க்க வேண்டும்.

ஸ்டெப் 3:
எடிட் பட்டனை கிளிக் செய்தவுடன் ஏற்கனவே உள்ள விட்ஜெட்டுக்கள் குறித்த ஒரு நோட்டீஸ் தோன்றும். இப்போது நீங்கள் ஸ்குரோல் டவுன் செய்து கூகுள் திசை வரும் வரை செய்ய வேண்டும்

ஸ்டெப் 4:
இப்போது பச்சை நிற பட்டன் ஒன்றை டேப் செய்வதன் முலம் நீங்கள் உங்கள் ஐபோனில் கூகுள் திசையை சேர்க்கலாம். அதன் பின்னர் டன் என்ற பட்டனை கிளிக் செய்தால் வலது மேல்பகுதியில் கூகுள் திசை இடம்பெற்றிருப்பதை காணலாம்.

அன்லாக்
இப்போது கூகுள் மேப் விட்ஜெட் உங்கள் விட்ஜெட் ஸ்க்ரீனில் இடம்பெற்றிருப்பதை உறுதி செய்ய முடியும். இப்போது நீங்கள் திசை மற்றும் நேரத்தை அன்லாக் செய்யாமலேயே உறுதி செய்து கொள்ள முடியும். மேலும் அன்லாக் செய்யாமலேயே எந்த இடத்தையும் நீங்கள் சியர்ச் செய்யலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. கூகுள் திசை விட்ஜெட்டில் உள்ள ஸ்குரோல் அம்புக்குரியை தேர்வு செய்து நீங்கள் உங்களுக்கு தேவையான எந்த இடத்தையும் சியர்ச் செய்து அறிந்து கொள்ளலாம்.

விட்ஜெட்
ஒருவேளை இந்த வசதியை வேண்டாம் என்று நீங்கள் முடிவு செய்தால் அதற்கு அதே ஸ்க்ரீனில் உள்ள எடிட் பட்டனை டேப் செய்து அதில் உள்ள சிகப்பு நிற மைனஸ் ஐகானை கிளிக் செய்து அதில் உள்ள விட்ஜெட்டுக்களில் கூகுள் மேப் விட்ஜெட்டை க்ளிக் செய்துவிட்டால் போதும். அதன் பின்னர் டன் என்பதை க்ளிக் செய்துவிட்டால் இந்த வசதி உங்களுக்கு இருக்காது


Click it and Unblock the Notifications