ஃபேஸ்புக் அக்கவுன்ட்டை டூ-ஃபேக்டர் ஆத்தென்டிகேஷன் மூலம் பாதுகாப்பது எப்படி?
ஃபேஸ்புக் அக்கவுன்ட்டை பாதுகாக்க டூ-ஃபேக்டர் ஆத்தென்டிகேஷன் அம்சத்தை எனேபிள் செய்தாலே போதுமானது.
ஃபேஸ்புக் பயன்படுத்துவோரில் சுமார் ஐந்து கோடி அக்கவுன்ட்கள் சமீபத்தில் ஹேக் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து அவரவர் தங்களது ஃபேஸ்புக் அக்கவுன்ட்டை பாதுகாப்பது அவசியமானதாகும்.

ஃபேஸ்புக் அக்கவுன்ட்டை பாதுகாக்க டூ-ஃபேக்டர் ஆத்தென்டிகேஷன் அம்சத்தை எனேபிள் செய்தாலே போதுமானது. டூ-ஃபேக்டர் ஆத்தென்டிகேஷன் உங்களது கணக்கில் கூடுதல் பாதுகாப்பை சேர்க்கும் என்பதால், ஹேக்கிங் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் குறையும்.
1. உங்களது ஃபேஸ்புக் அக்கவுன்ட்டில் லாக்-இன் செய்ய வேண்டும்
2. ஃபேஸ்புக்கின் வலதுபுறத்தில் உள்ள இன்வெர்ட்டெட் டிரையாங்கில் ஆப்ஷனை கிளிக் செய்து, செட்டிங்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்
3. இனி செக்யூரிட்டி மற்றும் லாக்-இன் ஆப்ஷன் செல்ல வேண்டும்
4. செக்யூரிட்டி மற்றும் லாக்-இன் ஆப்ஷனின் கீழ் பாஸ்வேர்டை மாற்றக்கோரும் ஆப்ஷன் மற்றும் லாக்-இன் வித் ப்ரோஃபைல் பிக்சர் என இரண்டு ஆப்ஷன்கள் காணப்படும். இதன் கீழ் டூ-ஃபேக்டர் ஆத்தென்டிகேஷன் ஆப்ஷன் இருக்கும்
5. யூஸ் டூ-ஃபேக்டர் ஆத்தென்டிகேஷன் ஆப்ஷனை கிளிக் செய்யவும்
இனி டூ-ஃபேக்டர் ஆத்தென்டிகேஷனை இரண்டு விதங்களில் செட்டப் செய்யலாம். அந்த வகையில் டெக்ஸ்ட் மெசேஜ் மற்றும் கூகுள் ஆத்தென்டிகேட்டர் அல்லது டுயோ மொபைல் போன்ற சேவைகளை பயன்படுத்தலாம்.

டெக்ஸ்ட் மெசேஜ் ஆப்ஷனை பயன்படுத்த
1. டெக்ஸ்ட் மெசேஜ் ஆப்ஷனை தேர்வு செய்ததும், ஆறு-டிஜிட் குறியீடு உங்களது மொபைல் நம்பருக்கு அனுப்பப்படும், பின் இந்த குறியீடு கொண்டு உறுதி செய்ய வேண்டும்
2. மொபைலில் உங்களுக்கு வந்த குறியீட்டை பதிவு செய்ய வேண்டும்
3. இனி டூ-ஃபேக்டர் ஆத்தென்டிகேஷன் ஆன் செய்யப்பட்டதை உறுதிப்படுத்தும் குறுந்தகவல் உங்களுக்கு வரும்

ஆத்தென்டிகேஷன் ஆப் பயன்படுத்த
1. ஒருவேளை மொபைல் நம்பரை பதிவு செய்யவில்லை எனில், இரண்டாவது வழிமுறையை பயன்படுத்தலாம். முதலில் மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் செயலிகளில் ஒன்றை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
2. இனி கியூ.ஆர். கோடை ஸ்கேன் செய்து ஆத்தென்டிகேஷன் செயலியில் உள்ள குறியீடை பதிவு செய்ய வேண்டும்.
3. உங்களது செயலிக்கு ஒரு குறியீடு வரும். அதனை கேட்கப்படும் போது பதிவு செய்ய வேண்டும். இனி உங்களது கணக்கில் டூ-ஃபேக்டர் ஆத்தென்டிகேஷன் ஆக்டிவேட் ஆகியிருக்கும்.


Click it and Unblock the Notifications