Home
Apps

ஸ்மார்ட்போன் கொண்டு போட்டோ லொகேஷனை அறிந்து கொள்வது எப்படி?

அவ்வாறு நமக்கு அதிகம் பயன்படும் மிகமுக்கிய அம்சங்களில் ஒன்றாக கேமரா இருக்கிறது.

By Meganathan S

உலகில் தகவல் பரிமாற்றம் செய்ய போன் வசதி பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. கடந்த கால வயர் வைத்து போன்களில் இருந்து தற்போது நாம் பயன்படுத்தும் போன் அதிகளவு வளர்ந்துவிட்டது. முதல் போன் எப்படி இருந்தது என்பதும் இன்றைய ஸ்மார்ட்போன்களை நினைப்பதே கடினமான விஷயம் ஆகும். இன்று நாம் பயன்படுத்தும் மொபைலில் உள்ள பல்வேறு வசதிகள் நமக்கு பயன்தரும் வகையில் அமைந்துள்ளது.

ஸ்மார்ட்போன் கொண்டு போட்டோ லொகேஷனை அறிந்து கொள்வது எப்படி?

அவ்வாறு நமக்கு அதிகம் பயன்படும் மிகமுக்கிய அம்சங்களில் ஒன்றாக கேமரா இருக்கிறது. மொபைல் போன் பயன்பாட்டை வேறு பரிணாமத்துக்கு அழைத்துச் சென்றதில் கேமராவுக்கு அதிக பங்குள்ளது. கேமராக்கள் மொபைலில் பொருத்தப்பட்ட பின் அவற்றில் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டன.

இன்று நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களில் போட்டோ மோட், ஷட்டர் ஸ்பீட், ஐ.எஸ்.ஓ., அப்ரேச்சர் மற்றும் லொகேஷன் போன்ற விவரங்களை இயக்கும் வசதி வழங்கப்படுகிறது. ஜி.பி.எஸ். தொழிலநுட்பத்தின் உதவியோடு ஸ்மார்ட்போன் கேமரா புகைப்படத்தில் லொகேஷனை தானாக சேர்த்து விடுகிறது. பெரும்பாலும் நீங்கள் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களின் லொகேஷன் நிச்சயம் உங்களுக்கு தெரிந்திருக்கும். இதனை கண்டறிவது கடினமான விஷயம் கிடையாது தான்.


புகைப்படங்களில் லொகேஷனை தெரிந்து கொள்ள கீழே வரும் வழிமுறைகளை பயன்படுத்தலாம்.

இதனை தொடரும் முன் லொகேஷன் டேக் அல்லது ஜிபிஎஸ் டேக் ஆப்ஷன் உங்களது கேமராவில் ஆன் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து, கேமரா செயலியில் ஜிபிஎஸ் பயன்படுத்த முறையான அனுமதி வழங்கப்பட்டு இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

ஸ்மார்ட்போன் கொண்டு போட்டோ லொகேஷனை அறிந்து கொள்வது எப்படி?

நீங்கள் எடுக்கும் படங்களில் லொகேஷன் டேக் சேர்க்க பின்வரும் வழிமுறைகளை பார்க்கலாம்.

ஆன்ட்ராய்டு சாதனங்களில்:
1. கேமரா செயலியை இயக்கவும்.

2. கேமராவில் செட்டிங்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

3. இங்கு லொகேஷன் டேக் அல்லது சேவ் லொகேஷன் ஆப்ஷனை பார்க்க முடியும், இதைத் தொடர்ந்து 'Save location data in your pictures and videos’ ஆப்ஷன் இருக்கும். இதை செயல்படுத்த வேண்டும்.

ஐ.ஓ.எஸ். சாதனங்களில்:

1. செட்டிங்ஸ் ஆப்ஷனில் பிரைவசி ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

2. லொகேஷன் சர்வீசஸ் ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும்.

3. இனி கேமரா ஆப்ஷன் சென்று 'While Using the App’ ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும்.

ஸ்மார்ட்போன் கொண்டு போட்டோ லொகேஷனை அறிந்து கொள்வது எப்படி?

புகைப்படம் எடுக்கப்படும் சரியான லொகேஷனை அறிந்து கொள்ள, பின்வரும் வழிமுறைகளை பயன்படுத்தவும்.

ஆன்ட்ராய்டு சாதனங்களில்:

1. கேலரி ஆப் சென்று புகைப்படத்தை தேர்வு செய்யவும்.

2. வலதுபுறம் மேல்பக்கம் காணப்படும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்யவும்.

3. நீங்கள் பயன்படுத்தும் கேலரி செயலிக்கு ஏற்ப 'Info’ அல்லது 'details’ ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

4. இனி புகைப்படம் எடுக்கப்பட்ட லொகேஷனை நீங்கள் பார்க்க முடியும், இதனுடன் அளவு, ஷட்டர் ஸ்பீடு, ஐ.எஸ்.ஓ. போன்ற விவரங்களையும் பார்க்க முடியும்.

ஸ்மார்ட்போன் கொண்டு போட்டோ லொகேஷனை அறிந்து கொள்வது எப்படி?

ஐஓஸ் சாதனங்களில்:

1. போட்டோஸ் ஆப் சென்று ஆல்ப்ம்ஸ் டேபை க்ளிக் செய்யவும்.

2. மேப்ஸ் படத்தில் உள்ள 'Places’ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

3. இனி அங்கிருக்கும் புகைப்படத்தை க்ளிக் செய்து சரியான லொகேஷனை அறிந்து கொள்ள முடியும்.

Best Mobiles in India

English summary
How to know the location of the photo taken using from our smartphone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X