உங்கள் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு பை வசதியை பெறுவது எப்படி?
இந்த ஆண்ட்ராய்டு 9 பை வசதி தற்போது பிக்ஸல் ஸ்மார்ட்போன் பயனாளிகளுக்கு மட்டுமே கிடைத்துள்ளது
ஆண்ட்ராய்ட் அடுத்த வெர்ஷன் ஆண்ட்ராய்டு 9.0 பை என்பது தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் ஆபரேட்டிங் சிஸ்டமான ஆண்ட்ராய்டு, கடந்த சில ஆண்டுகளில் பல புதிய வசதிகள், நேவிகேஷன் மாற்றங்கள், புதிய லுக் என பலவித மாற்றங்கள் நடந்த நிலையில் தற்போது லேட்டஸ்ட் அப்டேட் குறித்த அறிவிப்பும் வெளிவந்துள்ளது.

இருப்பினும் இந்த ஆண்ட்ராய்டு 9 பை என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டாலும், தற்போது பிக்ஸல் ஸ்மார்ட்போன் பயனாளிகளுக்கு மட்டுமே இந்த வசதி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு பை
நீங்கள் ஒரு பிக்ஸ்ல் ஸ்மார்ட்போன் வைத்திருந்தாலு உங்களுக்கு ஆண்ட்ராய்டு பை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்த எங்கள் வழிகாட்டுதல்களை தெரிந்து கொள்ளுங்கள்

1. உங்கள் ஆண்ட்ராய்டு போனின் ஹோம் ஸ்க்ரீன் ஆண்ட்ராய்டு பை-க்கு மாற வேண்டும் என்றால் நீங்கள் செய்ய வேண்டியது:
-பிக்சல் லாஞ்சரின் ஏபிகே ஃபைலை முதலில் டவுன்லோடு செய்யவும்
-பின்னர் அதனை உன்க்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்யவும்
-அதில் காண்பிக்கும் அனைத்து பெர்மிஷனையும் அனுமதித்து அதன் பின்னர் டிஃபால்ட் லாஞ்சரை செட் செய்யவும்
-தற்போது ஆண்ட்ராய்டு P வால்பேப்பர்களை டவுன்லோடு செய்து பின்னர் சேவ் செய்யவும்
-அதில் உள்ள வால்பேப்பர்களின் இமேஜ்களை ஹோம் ஸ்க்ரீன் மற்றும் லாக் ஸ்க்ரீனுக்கு மாற்றவும்

2. ஆண்ட்ராய்டு பை என்பது ஒரே ஒரு பட்டனின் நேவிகேஷன் ஆகும்
-கூகுள் பிளே ஸ்டோர் சென்று நேவிகேஷன் கெஸ்டர் அல்லது எக்ஸ் ஹோம் பார் செயலிகளில் ஒன்றை டவுன்லோடு செய்யவும்
-பின்னர் அந்த செயலியை ஓப்பன் செய்து அதில் உள்ள அனைத்தையும் அனுமதிக்கவும்
-பின்னர் ஸ்மார்ட்போனில் உள்ள மூன்று பட்டன் நேவிகேஷன் பார் என்பது ஆண்ட்ராய்ட் பை போன்று மாறிவிடும்

3. டிஜிட்டல் வசதிகளை பெறுவது
இந்த ஆண்ட்ராய்டு பை வடிவத்தில் ஒருசில டிஜிட்டல் வசதிகளையும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இது ஸ்மார்ட்போனில் அடிமையாகாமல் பார்த்து கொள்ளும். இந்த வசதியில் டாஷ்போர்டு மற்றும் செயலி நேரம் காட்டும் டைமர் இருக்கும். இதனால் நீங்கள் ஸ்மார்ட்போனை எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் நீங்கள் அதிக நேரம் ஸ்மார்ட்போனில் முழ்குவதில் இருந்து தப்பிக்கலாம்
மேலும் இந்த வசதி வேண்டாம் என்று நீங்கள் முடிவு செய்தால் டிஸேபிள் செய்யவும், உங்களுடைய புரபைலை உருவாக்கவும், நோட்டிபிகேசனை நிறுத்தவும் இதில் வசதிகள் உண்டு.
மேலும் கூகுள் பிளே ஸ்டோரில் டைமர் செயலிகள் ஏகப்பட்டது உள்ளது. குறிப்பக ஆப் பிளாக், ஆப் ஆஃப் டைமர் போன்று அதிக செயலிகள் நமக்கு கிடைக்கும்


Click it and Unblock the Notifications