கூகுள் டிரைவ் கொள்ளளவை சேமிப்பது எப்படி?

உங்கள் கூகுள் டிரைவில் உள்ள அனைத்தும் கணக்கில் வராது. எனவே அவசரப்பட்டு அனைத்து ஃபைல்களையும் டெலிட் செய்துவிட வேண்டாம்.

|

கூகுள் டிரைவ் ஒவ்வொருவருக்கும் 15 ஜிபி இலவசமாக இடம் தருகிறது என்பது தெரிந்ததே. இது மற்ற நிறுவனங்களான டிராப் பாக்ஸ் 2ஜிபி, பாக்ஸ் 10ஜிபி ஆகியவற்றோடு ஒப்பிடும்போது மிக அதிகம். ஆனால அதே நேரத்தில் இந்த 15ஜிபி உங்களுடைய கூகுள் டிரைவுக்கு மட்டுமின்றி, ஜிமெயிலுக்கும் சேர்த்து என்பதை ஞாபகம் வைத்து கொள்ள வேண்டும்

கூகுள் டிரைவ் கொள்ளளவை சேமிப்பது எப்படி?


உங்களுக்கு ஜிமெயில் தான் முக்கிய மெயில் முகவரி என்றால் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் 15 ஜிபி என்பது போதுமானதுதான். இருப்பினும் உங்கள் ஜிமெயிலில் உள்ள ஃபைல்கள், அட்டாச்மெண்ட்டுக்கள் மற்றும் ஒருசிலவற்றை குறைப்பதன் மூலம் இடவசதியை அதிகரித்து கொள்ளலாம். இதற்கான வழிமுறைகளை பார்ப்போம்

ஸ்டெப் 1: பிரச்சனையை முதலில் கண்டறிய வேண்டும்:

முதலில் உங்கள் கூகுள் டிரைவில் எந்த அம்சம் அதிக இடத்தை ஆக்கிரமித்து கொண்டுள்ளது என்பதை கண்டுபிடிக்க வேண்டும் இந்த படத்தில் உள்ள சார்ட் மூலம் நீங்கள் எவற்றை எவ்வளவு பயன்படுத்தி உள்ளீர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். பெரும்பாலானோர்களுக்கு ஜிமெயில் உள்ள மெசேஜ்கள், அட்டாச்மெண்ட்டுக்கள் தான் அதிக இடத்தை பிடித்து கொண்டிருக்கும். அதேபோல் கூகுள் போட்டோவும் அதிக இடத்தை ஆக்கிரமித்திருக்கும்

மேலும் உங்களுக்கு இலவச ஜிபிக்களை விட அதிக ஜிபி தேவை என்றால் கட்டணம் செலுத்தி பெற்று கொள்ளலாம். 100 ஜிபி அதிகம் பயன்படுத்த மாதம் $2ம், அல்லது வருடத்திற்கு $20 செலுத்தியும் பெற்று கொள்ளலாம். $300 செலுத்தி மாதம் ஒன்றுக்கு 30டிபி பயன்படுத்தி கொள்ளும் வாய்ப்பும் உண்டு

ஸ்டெப் 2: உங்கள் லிமிட்டை கணக்கிடுவது எது?
உங்கள் கூகுள் டிரைவில் உள்ள அனைத்தும் கணக்கில் வராது. எனவே அவசரப்பட்டு அனைத்து ஃபைல்களையும் டெலிட் செய்துவிட வேண்டாம். உதாரணமாக கூகுள் டாக்குமெண்ட்டுக்கள், கூகுள் ஷீட்டுக்கள், ஸ்லைடுகள் ஆகியவை கணக்கில் வராது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 2048x2048 பிக்சலுக்கு மேல் உள்ள புகைப்படங்களும், 15 நிமிடங்களுக்கு மேல் உள்ள வீடியோக்கள் மட்டுமே கூகுள் லிமிட்டுக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படும்

கூகுள் டிரைவ் கொள்ளளவை சேமிப்பது எப்படி?


ஸ்டெப் 3: டிரைவ்வை சுத்தம் செய்யுங்கள்
இதற்கு கூகுள் டிரைவ்வை ஓப்பன் செய்து அதில் மை டிரைவர் என்ற ஆப்சனை தேர்வு செய்யுங்கள். ஸ்க்ரீனில் வலது ஓரத்தில் உள்ல லிஸ்ட் வியூ என்பதை கிளிக் செய்யுங்கள். தற்பொது நீங்கள் கூகுள் டிரைவில் உள்ள பைல்களின் லிஸ்ட்டுகளை பார்க்கலாம். இந்த பைல்களை சைஸ் வாரியாகவும், சார்ட் என்பதை கிளிக் செய்வதன் மூலம் பெயர் வாரியாகவும், தெரிந்து கொள்ளலாம்

இந்த சார்ட் லிங்கில் நீங்கள் இதுவரை எவ்வள ஜிபி பயன்படுத்தி உள்ளீர்கள் என்பதையும் மீதமுள்ள ஜிபிக்களையும் தெரிந்து கொள்ளலாம். டிரைவ் போல்டரில் உள்ள கோட்டா யூஸ்ட் என்ற ஆப்சனை க்ளிக் செய்வதன் மூலம் பெரிய பைல்களை டெலிட் செய்து இடத்தை அதிகரித்து கொள்ளலாம்

உங்களுக்கு தேவையான பிடிஎஃப் பைல்கள் இருந்தால் அதனை கூகுள் டாக்குமெண்ட்டுகளாக மாற்றி இடத்தை சேமிக்கலாம். பைலின் தன்மையை பொருத்து அதனை கூகுள் ஷீட்டாகவும், ஸ்லைடாகவும் மாற்றி கொள்ளலாம். இதற்கு பிடிஎஃபை பைலை வலதுபுறம் கிளிக் செய்து ஓப்பன் வித் கூகுள் டாக்குமெண்ட் என்ற ஆப்சனை பயன்படுத்துங்கள். தற்போது கூகுள் டாக்குமெண்ட் வடிவில் உங்கள் பிடிஎஃப் சேமிக்கப்படும். இதன்பின்னர் பிடிஎஃபை பைலை டெலிட் செய்துவிடலாம். டெலிட் செய்தாலும் அந்த பைல் டிராஷில் இருக்கும். எனவே டிராஷில் சென்று நிரந்தரமாக டெலிட் செய்துவிட்டால் உங்களது இடம் சேமிக்கப்படும்

கூகுள் டிரைவ் கொள்ளளவை சேமிப்பது எப்படி?


ஸ்டெப் 4: கூகுள் புகைப்படங்களை தவிர்க்கவும்

நீங்கள் எப்போதாவதுதான் கூகுள் போட்டோவை பயன்படுத்துவீர்கள், ஆனால் கூகுள் போட்டோவில் வெகு சீக்கிரம் 4 ஜிபி சேர்ந்துவிடும். எதனால் தெரியுமா? ஏனெனில் உங்களது போனில் ஆண்ட்ராட்ய் ஆட்டோமெட்டிக் போட்டோ பேக்கப் இருந்தால் அவை ஆண்ட்ராய்டு போனில் எடுக்கப்படும் அனைத்து புகைப்படங்களையும் கூகுள் போட்டோவுக்கு அனுப்பிவிடும்

அதேபோல் நீங்கள் கூகுள் போட்டோவில் சைஸ் வாரியாக தேர்வு செய்யவில்லை என்றாலும் கூடுதல் இடத்தை அடைத்துவிடும். எனவே முதலில் நீங்கள் கூகுள் போட்டோ பக்கத்திற்கு சென்று போட்டோ என்ற ஆப்சனை க்ளிக் செய்து அனைத்து புகைப்படங்களையும் ஒருமுறை பாருங்கள்

பின்னர் செக் பாக்ஸ் சென்று, அதில் உங்களுக்கு தேவையில்லாத புகைப்படங்களை தேர்வு செய்து அதனை மொத்தமாக டெலிட் செய்யுங்கள். அதேபோல் ஆட்டோமெட்டிக் ஆண்ட்ராய்டு பேக்கப்பை நிறுத்த நீங்கள் செய்ய வேண்டியது என்னவெனில் மெனு ஐகானை க்ளிக் செய்து பின்னர் செட்டிங்ஸ்> ஹை குவாலிட்டி ஆகியவற்றில் செல்லவும். இதன் பின்னர் ஹை குவாலிட்டி புகைப்படங்ளை அதே தன்மையில் குறைந்த குவாலிட்டியில் படமாகும் என்பதால் உங்களுக்கு தேவையான கூடுதல் இடம் கிடைக்கும்

ஸ்டெப் 5: ஜிமெயிலை எளிமையாக்குங்கள்
மேற்கண்ட வழிகளை பின்பற்றி உங்களுக்கு தேவையான இடங்களை பெற்று கூகுள் டிரைவ்வை அதிகமாக பயன்படுத்துங்கள். பெரிய அட்டாச்மெண்ட், தேவையில்லாத மெசேஜ்களை நீக்குவதன்மூலமே மிக எளிதில் உங்கள் ஜிமெயில் சுத்தப்படுத்தப்படும்,.

Best Mobiles in India

English summary
How to free up Google Drive space ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X