வீடியோ ஃபைல்களில் இருந்து ஆடியோவினை மட்டும் எடுப்பது எப்படி?

|

வீடியோ எடிட்டிங் செய்யும் துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமே ஆடியோ மூலம் ஏற்படக்கூடிய பொதுவான பிரச்சனைகள் பற்றி புரியும். எனினும், ஆடியோ சார்ந்த குழப்பம் இனியும் ஏற்படாது. வீடியோவில் இருந்து ஆடியோ மட்டும் எடுப்பதால் பல்வேறு பலன்கள் இருக்கின்றன.

வீடியோ ஃபைல்களில் இருந்து ஆடியோவினை மட்டும் எடுப்பது எப்படி?


இவ்வாறு செய்யும் போது வீடியோவில் புதிய ஆடியோவினை சேர்க்கவோ, வீடியோக்களை பல்வேறு இதர பணிகளுக்கு உருவாக்குவது, எடிட் செய்வது உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த தொகுப்பில் ஒவ்வொரு பிளாட்ஃபார்மிலும் வீடியோ ஃபைலில் இருக்கும் ஆடியோவினை மட்டும் எடுப்பது எப்படி என்பதை பார்ப்போம்.

மேக் ஓ.எஸ்.:

மேக் ஓ.எஸ்.:

மேக் கம்ப்யூட்டரில் வீடியோக்களில் இருந்து ஆடியோ மட்டும் தனியாக எடுக்க ஐமூவி எனும் செயலியை பயன்படுத்த வேண்டும். இது அனைவராலும் பயன்படுத்தக்கூடிய மிக எளிய இன்டர்ஃபேஸ் கொண்ட மென்பொருள் ஆகும். வீடியோவில் இருந்து ஆடியோவை எடுக்க வீடியோவினை மென்பொருளில் இம்போர்ட் செய்து, வீடியோவை டைம்லைனில் வைத்து ரைட் க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் பல்வேறு ஆப்ஷன்கள் தெரியும். இதில் Detach Video ஆப்ஷனை க்ளிக் செய்தால் ஆடியோ தனியே எடுக்கப்பட்டுவிடும். இனி வீடியோவினை சேவ் செய்து கொள்ளலாம்.

விண்டோஸ்:

விண்டோஸ்:

விண்டோஸ் இயங்குதளங்களில் மிகவும் பிரபலமான மென்பொருளான வி.எல்.சி. மீடியா பிளேர். மென்பொருளில் மெனு ஆப்ஷனில் மீடியா பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் பட்டியல் திறக்கும் இதில் கன்வெர்ட் / சேவ் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் பேனல் ஒன்று திறக்கும். இனி நீங்கள் விரும்பும் வீடியோவை தேர்வு செய்து டூல்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இனி ஆடியோ கோடெக் பகுதியில் ஆடியோ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இறுதியில் வீடியோ சேவ் ஆக வேண்டிய இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.

ஆண்ட்ராய்டு:

ஆண்ட்ராய்டு:

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் டிம்பர் (Timbre) செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும். இனி செயலியை திறந்து மியூட் ஆப்ஷனை மியூட் க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் கேலரி ஆப்ஷன் திறக்கும். இங்கு நீங்கள் எடிட் செய்ய வேண்டிய வீடியோவினை தேர்வு செய்ய வேண்டும். வீடியோ லோட் ஆனதும் மியூட் ஆப்ஷனை மீண்டும் க்ளிக் செய்து அதற்கு தேவையான பெர்மிஷன்களை வழங்கினால் உங்களது ஃபைல் ஆடியோ வடிவில் சேமிக்கப்பட்டு விடும்.

ஐ.ஓ.எஸ்.:

ஐ.ஓ.எஸ்.:

ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் வீடியோ மியூட் எனும் செயலி கிடைக்கிறது. இதனை ஐடியூன்ஸ் இல் இருந்து டவுன்லோடு செய்ததும், செயலியில் வீடியோவை லோட் செய்ய வேண்டும். இங்கு வால்யூம் ஸ்லைடர் காணப்படும். அதனை சீரோவிற்கு கொண்டு வந்து பின் எக்ஸ்போர்ட் செய்யக்கோரும் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். உங்களது வீடியோ ஆடியோ இல்லாமல் சேமிக்கப்பட்டு விடும்.

வொண்டர்ஷேர் ஃபில்மோரா:

வொண்டர்ஷேர் ஃபில்மோரா:

இது அதிக பிரபலமான டெஸ்க்டாப் வீடியோ எடிட்டர் ஆகும். இதை கொண்டு வீடியோவில் இருக்கும் ஆடியோவை தடயமின்றி எடுத்துவிட முடியும். இதனை இன்ஸ்டால் செய்து கம்ப்யூட்டரில் திறந்து வீடியோவை லோட் செய்ய வேண்டும். இனி ரைட் க்ளிக் செய்து டிடாச் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இனி அதனை தேர்வு செய்து டைம்லைனில் டபுள் க்ளிக் செய்து கிரியேட் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இனி நீங்கள் விரும்பும் ஃபார்மேட்டில் அதனை சேவ் செய்ய வேண்டும்.

வலைதளங்கள்:

வலைதளங்கள்:

பல்வேறு வலைதளங்கள் வீடியோவில் இருந்து ஆடியோவை எடுக்கும் பணியினை சிறப்பாக செய்கின்றன. இவற்றில் பிரபலமானவைகளாக ஆடியோ ரிமூவர் மற்றும் ஏபவர்சாஃப்ட் இருக்கின்றன. இவற்றை பயன்படுத்துவது மிகவும் எளிமையாகவே இருக்கும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
How to extract audio from any video file: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X