இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை டவுன்லோடு செய்வது எப்படி தெரியுமா?
இன்ஸாகிராமில் பதிவு செய்யப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள், மீம்ஸ்கள் ஆகியவற்றை உங்கள் அக்கவுண்டில் இருந்து நண்பர்கள் மற்றும் பிறருக்கு பகிர தற்போது ஒரு வழி கிடைத்துள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் செயலி, கடந்த சில ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்று புகைப்படங்களை பகிரும் செயலிகளின் முதுகெலும்பாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மாதம் 800 மில்லியன் பயனாளிகளும், தினமும் 500 மில்லியன் பயனாளிகளும் பயன்படுத்தும் உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளங்களில் ஒன்றாக கொடிகட்டி பறந்தது.

இருப்பினும் இந்த செயலியில் பயனாளிகளுக்கு ஒருசில குறிப்பிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தது. குறிப்பாக இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை டவுன்லோடு செய்ய ஆப்சன் இல்லாமல் இருந்தது பயனாளிகளுக்கு அதிருப்தையை அளித்தது.
இன்ஸாகிராமில் பதிவு செய்யப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள், மீம்ஸ்கள் ஆகியவற்றை உங்கள் அக்கவுண்டில் இருந்து நண்பர்கள் மற்றும் பிறருக்கு பகிர தற்போது ஒரு வழி கிடைத்துள்ளது. இந்த வழியை நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் தொடர்ந்து படியுங்கள்


இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள், வீடியோக்களை டவுன்லோடு செய்வது எப்படி?
இன்ஸ்டாகிராம் செயலியில் இருந்து அதிகாரபூர்வமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை டவுன்லோடு செய்ய இன்னும் வசதி செய்து தரப்படவில்லை என்பதும் வேறு நிறுவனத்தின் செயலி மூலம் தான் இந்த டவுண்லோடை நாம் செய்ய போகிறோம் என்பதையும் முதலில் மனதில் நிறுத்தி கொள்ள வேண்டும்
ஸ்டெப் 1: முதலில் கூகுள் பிளே ஸ்டோர் சென்றூம் 'ஃபாஸ்ட் சேஃப்' என்ற செயலியை உங்களது ஸ்மார்ட்போனில் டவுன்லோடு செய்து பின்னர் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். இந்த செயலி டவுன்லோடு செய்யப்படும்போது புகைப்படங்கள் உள்பட மற்றவைகளை டவுன்லோடு செய்து கொள்ளும் அனுமதியை உங்களிடம் கேட்கும்
ஸ்டெப் 2: டவுன்லோடு செய்து முடித்தவுடன் இந்த செயலியை ஹோம் ஸ்க்ரீனில் வைத்து கொள்ளுங்கள். இந்த ஃபாஸ்ட்சேவ் செயலியை ஒரு சுவிட்ச் மூலம் பின்னர் டர்ன் ஆன் செய்து கொள்ள வேண்டும். சுவிட்ச் ஆன செய்தவுடன் இன்ஸ்டாகிராம் செயலியில் உள்ள புகைப்படங்களை டவுண்ட்லோடு செய்ய ஒருசில குறிப்புகளை இந்த செயலி உங்களுக்கு தரும்
ஸ்டெப் 3: இந்த ஸ்டெப் முடிந்தவுடன் இன்ஸ்டாகிராமில் உள்ள எந்த போஸ்ட்டிலும் உள்ள புகைப்படம் மற்றும் வீடியோக்களை நீங்கள் டவுன்லோடு செய்ய முடியும். மேலும் இதில் வலது ஓரத்தில் உள்ள ஐகானை க்ளிக் செய்து அதில் வரும் 'காப்பி லிங்க்' என்பதை க்ளிக் செய்தால் டவுன்லோடு செய்ய தேவையான லிங்க் கிடைக்கும். அதன் மூலம் அந்த போஸ்ட்டுக்கலை ஃபாஸ்ட்சேவ் டவுன்லோடு செய்ய தொடங்கிவிடும்.

ஸ்டெப் 4: பின்னர் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள 'இன்ஸ்டாசேவ்' என்ற ஃபோல்டரில் சென்று பார்த்தால் நீங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து டவுன்லோடு செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்க்கலாம்.
மீண்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்தும் விஷயம் என்னவெனில் இந்த டவுன்லோடு முறை இன்ஸ்டாகிராம் அனுமதித்த அதிகாரபூர்வ முறை அல்ல. இதுவொரு வேறொரு செயலி மூலம் டவுண்லோடு செய்யபப்டுவதால், இண்டர்நெட் ஸ்டோரேஜ் உள்பட ஒருசில விஷயங்களை கவனமாக பார்த்து கொள்ளவும்


Click it and Unblock the Notifications








