யூடியூப் செயலிக்களில் ஆஃப்லைன் வீடியோக்களை அழிப்பது எப்படி?
2014-ம் ஆண்டு வாக்கில் யூடியூப் தளத்தில் வாடிக்கையாளர்கள் விரும்பும் வீடியோக்களை தங்களது மொபைல் சாதனங்களில் டவுன்லோடு செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டது.
உலகின் பிரபல வீடியோ வலைத்தளமாக யூடியூப் இருக்கிறது. உலகில் மற்ற நாடுகளை விட இந்தியாவில் யூடியூப் தளம் அதிக பிரபலமான ஒன்றாக இருக்கிறது.

2014-ம் ஆண்டு வாக்கில் யூடியூப் தளத்தில் வாடிக்கையாளர்கள் விரும்பும் வீடியோக்களை தங்களது மொபைல் சாதனங்களில் டவுன்லோடு செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டது. இதன் மூலம் சீரற்ற இன்டர்நெட் வசதி இருக்கும் இடங்களிலும் வீடியோக்களை பார்த்து ரசிக்க முடியும். தற்சமயம் யூடியூபில் கிடைக்கும் பெரும்பாலான வீடியோக்களை டவுன்லோடு செய்யக்கூடிய வசதி கொண்டுள்ளது.

யூடியூப் ஆன்ட்ராய்டு, ஐபோன் மற்றும் ஐபேட் உள்ளிட்ட தளங்களில் கிடைக்கும் செயலிகளில் வீடியோக்களை டவுன்லோடு செய்யக்கூடிய வசதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில், டெஸ்க்டாப்களில் வீடியோக்களை டவுன்லோடு செய்ய முடியாது. நீங்கள் டவுன்லோடு செய்யும் வீடியோக்கள் 30-நாட்களுக்கு நீங்கள் விரும்பும் நேரத்தில் பார்த்து ரசிக்க முடியும். அதன்பின் வீடியோக்கள் டவுன்லோடு பகுதியில் இருக்கும் எனினும், அவற்றை பார்க்கவோ அழிக்கவோ முடியாது.
யூடியூபில் டவுன்லோடு செய்யப்பட்ட வீடியோக்களை இன்டர்நெட் வசதி இல்லாத இடங்கள் மட்டுமின்றி, இன்டர்நெட் கிடைக்காத பயணங்களின் போதும் பார்த்து ரசிக்க முடியும். சமீப காலங்களில் மொபைல் டேட்டா விலை குறைக்கப்பட்டு வந்தாலும், அனைத்து பகுதிகளிலும் டேட்டா வேகம் அதிகமாக இருப்பதில்லை. அந்த வகையில் சீரான வேகம் கிடைக்கும் பகுதிகளில் வீடியோக்களை டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.

இவ்வாறு வீடியோக்களை டவுன்லோடு செய்யும் போது உயர் ரகத்தில் அதிகப்படியான வீடியோக்களை சேமிக்க மொபைலில் உள்ள ஸ்டோரேஜை பயன்படுத்தலாம். மேலும் நீங்கள் டவுன்லோடு செய்த வீடியோக்களை எந்நேரத்திலும் அழிக்கக்கூடிய வசதி வழங்கப்படுகிறது.
இவற்றை ஒரே சமயத்திலோ அல்லது தனித்தனியாகவோ அழிக்க முடியும். ஒவ்வொரு வீடியோக்களை அழிக்கும் வசதி அனைவரும் அறிந்தது தான் என்றாலும், ஒரே சமயத்தில் அனைத்து வீடியோக்களையும் அழிக்கும் வசதி செட்டிங்-களில் மறைக்கப்பட்டு இருக்கிறது. இதனை எவ்வாறு கண்டறிய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

யூடியூப் ஆஃப்லைனில் டவுன்லோடு செய்யப்பட்ட வீடியோக்களை ஒரே சமயத்தில் அழிப்பது எப்படி?
- யூடியூப் செயலியை ஓபன் செய்து, வலது புறத்தில் இருக்கும் ப்ரோஃபைல் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
- இனி செட்டிங்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். ஆன்ட்ராய்டு தளத்தில் டவுன்லோடு பகுதியிலும், ஐபோன் அல்லது ஐபேட்களில் ஆஃப்லைன் செக்ஷன் செல்ல வேண்டும்.
- இங்கு டெலீட் டவுன்லோட்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்து அனைத்து வீடியோக்களையும் ஒரே சமயத்தில் அழித்து விட முடியும்.
நீங்கள் டவுன்லோடு செய்த யூடியூப் வீடியோக்களை அழித்தாகி விட்டது. எனினனும் சில வீடியோக்களை மட்டும் அழித்துவிட்டு சில வீடியோக்களை அழிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

யூடியூபில் டவுன்லோடு செய்யப்பட்ட வீடியோக்களை தனித்தனியாக அழிப்பது எப்படி?
யூடியூப் செயலியின் கீழ் காணப்படும் லைப்ரரி (Library) ஆப்ஷனை க்ளிக் செய்து டவுன்லோட்ஸ் (Downloads) ஆப்ஷனில் அவைலபிள் ஆஃப்லைன் (Available Offline) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இங்கு நீங்கள் டவுன்லோடு செய்த அனைத்து வீடியோக்களையும் பார்க்க முடியும்.
இனி அழிக்க வேண்டிய வீடியோக்களின் அருகில் காணப்படும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்து டெலீட் ஃப்ரம் டவுன்லோட்ஸ் (Delete from Downloads) ஆப்ஷன் மூலம் ஒவ்வொரு வீடியோக்களையும் அழிக்க முடியும்.


Click it and Unblock the Notifications