வாட்ஸ் அப் மூலம் ஐஆர்சிடிசி ரயில் விபரங்களை தெரிந்து கொள்வது எப்படி?

அந்த வகையில் தற்போது வாட்ஸ் அப் நிறுவனம் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய சலுகையை வழங்கியுள்ளது.

|

உலகம் முழுவதும் சுமார் 1.5 பில்லியன் வாடிக்கையாளர்களை கொண்ட வாட்ஸ் அப் நிறுவனம், அவ்வப்போது தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு புதுப்புது சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ் அப் நிறுவனம் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய சலுகையை வழங்கியுள்ளது.

வாட்ஸ் அப் மூலம் ஐஆர்சிடிசி ரயில் விபரங்களை தெரிந்து கொள்வது எப்படி?

இதன்படி ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு தாங்கள் பயணம் செய்யும் ரயில் எந்த இடத்தில் உள்ளது என்பதை ஒரு சேட் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்தவர்கள் தங்கள் டிக்கெட்டின் நிலையையும் இந்த புதிய வசதி மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாட்ஸ் அப் நிறுவனம், ஆன்லைன் டிராவல் சர்வீஸ் சேவை செய்து வரும் 'மேக் மை ட்ரிப் என்ற நிறுவனத்துடன் இணைந்து தருகிறது

ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம்

ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம்

ஒரு எளிதான மேசேஜ் மூலம் தாங்கள் ஆன்லைனில் புக் செய்த டிக்கெட்டின் பி.என்.ஆர் நிலை மற்றும் நாம் பயணம் செய்ய வேண்டிய ரயில் எந்த இடத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றது, எப்போது நம் ஸ்டேஷனுக்கு வரும் என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த புதிய வசதியின் மூலம் நாம் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் சென்று அறிய வேண்டிய தகவல்களை ஒரே ஒரு வாட்ஸ் அப் மெசேஜ் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதனால் ரயில்வே பயணிகளின் நேரம், வேலை மிச்சமாகிறது.

7349389104

7349389104

இந்த புதிய வசதியை ஒரு வாட்ஸ் அப் பயனாளி அறிந்து கொள்ள வேண்டும் என்றால் முதலில் அவர்கள் தங்கள் மொபைல் போனில் மேக் மை ட்ரிப் நிறுவனத்தின் அதிகாரபூர்வமான மொபைல் எண்ணான 7349389104 என்ற எண்ணை சேர்த்து கொள்ள வேண்டும். இந்த எண்ணை உங்கள் காண்டாக்டில் சேர்த்தவுடன் அதனை உறுதி செய்ய உங்களுக்கு ஒருசில டெக்ஸ்ட் மெசேஜ்கள் வரும். அதன் பின்னர் உங்களுக்கு தேவையான விபரங்களை டெக்ஸ்ட் மெசேஜ் மூலம் கேட்டு பெறலாம்

மேக் மை ட்ரிப்

மேக் மை ட்ரிப்

அதன் பின்னர் உங்கள் போனில் இருந்து நீங்கள் ஏற்கனவே பதிவு செய்த மேக் மை ட்ரிப் வாட்ஸ் அப் எண்ணுக்கு பி.என்.ஆர் ஸ்டேட்டஸ் என்று டைப் அடித்து மெசேஜ் அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பினால் உங்கள் ரயிலின் நம்பர், ரயிலின் பெயர், கிளம்பிய இடம், சென்றடையும் இடம் ஆகிய நிலையை தெரிந்து கொள்ளலாம். மேலும் நீங்கள் ஆன்லைனில் பதிவு செய்த டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருந்தால் அது கன்பர்ம் ஆகிவிட்டதா? என்பதையும் தெரிந்து கொள்ளலாஅம். ஒருவேளை உங்கள் டிக்கெட் கன்பர்ம் ஆகவில்லை என்றாலும் வெயிட்டிங் லிஸ்ட்டில் உங்கள் டிக்கெட் எந்த இடத்தில் உள்ளது என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

ரயில் எந்த இடத்தில் உள்ளது?

ரயில் எந்த இடத்தில் உள்ளது?

மேலும் வாட்ஸ் அப் பயனாளிகள் 'மேக் மை டிரிப்' எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி இந்த நிமிடம் நாம் பயணம் செய்ய வேண்டிய ரயில் எந்த இடத்தில் உள்ளது என்பது உள்பட அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்

 ரயில் சரியான நேரத்தில் வந்து கொண்டிருக்கின்றதா?

ரயில் சரியான நேரத்தில் வந்து கொண்டிருக்கின்றதா?

நீங்கள் பயணம் செய்ய வேண்டிய ரயில் சரியான நேரத்தில் வந்து கொண்டிருக்கின்றதா? அல்லது தாமதமாகின்றதா? தாமதம் என்றால் எவ்வளவு நேரம் தாமதம் ஆகிய விபரங்களையும் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். இப்போது நாம் பயணம் செய்யும் ரயில் எந்த ஸ்டேஷனில் உள்ளது, அங்கிருந்து நம்முடைய ஸ்டேஷனுக்கு வருவதற்கு எவ்வளவு ஆகும் என்ற விபரமும் தெரிந்து கொள்ளலாம். இன்னும் நாம் பயணம் செய்ய வேண்டிய ரயில் கிளம்பவில்லை என்றாலும் அது எப்போது கிளம்பு என்ற செய்தியையும் தெரிந்து கொள்ளலாம்.

மெசேஜ் உரையாடல்

மெசேஜ் உரையாடல்

இதுகுறித்து 'மேக் மை ட்ரிப்' நிறுவனம் கூறியபோது, ஆன்லைன் ரிசர்வ் செய்த பயணிகளின் நிலையை மட்டும் தெரிந்து கொள்வதோடு, இந்த மெசேஜ் உரையாடல் மூலம் தங்களுடைய கேன்சல் டிக்கெட் குறித்த விபரங்களையும் பணம் திரும்ப கிடைக்கும் விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம். அதேபோல் விமானம் குறித்த செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்

Best Mobiles in India

English summary
How to check IRCTC Train status on WhatsApp: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X