கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள இலவச சலுகைகளைப் பெறும் வழிமுறைகள்.!

கூகுள் ப்ளே கிரிடிட் கணக்கில் எவ்வளவு பாக்கி உள்ளது என்பதை அறிய, கணக்கு பக்கத்தில் உள்ள பணம் செலுத்தும் முறைகளுக்கான இணைப்பு மீது கிளிக் செய்தால் போனது.

|

கூகுள் நிறுவனத்தின் தயாரிப்புகளை வாங்கும் போது, அதனுடன் பல இலவச பொருட்களும் அளிக்கப்படுகின்றன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கூகுள் தயாரிப்புகளான பிக்சல் ஃபோன், கூகுள் ஹோம் டிவைஸ் அல்லது கிரோம்கேஸ்ட் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை வாங்கும் போது, அதனுடன் சில இலவச சலுகைகளும் கிடைக்கின்றன.

கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள இலவச சலுகைகளைப் பெறும் வழிமுறைகள்.!

ப்ளே ஸ்டோர் முழுவதும் சிறப்பான அப்ளிகேஷன்களும் கேம்களும் காணப்படுவதோடு, ஒவ்வொருவருக்கும் ஏதாவது சில காரியங்களும் கிடைக்கின்றன. ஏனெனில் ப்ளே ஸ்டோரில் அப்ளிகேஷன்களும் கேம்களும் உங்களுக்கு போதுமானதாக இல்லாத பட்சத்தில், திரைபடங்களின் ஒரு மிகப்பெரிய நூலகம் காணப்படுகிறது. நீங்கள் ப்ரவுஸிங் செய்து வாங்க அல்லது வாடகைக்கு பெறும் வகையிலான ஒரு பெரிய அளவிலான திரைபடங்களின் நூலகம் காணப்படுகிறது. உங்கள் விருப்பத்தை பொறுத்து திரைபடங்களை வாங்கவோ அல்லது வாடகைக்கு பெறவோ செய்யலாம். கூகுள் ப்ளே மியூஸிக் கூட ஆராய்ந்து பார்க்க, மதிப்பு மிகுந்ததாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

 பிரிமியம் கேம்:

பிரிமியம் கேம்:

சுருக்கமாக கூற வேண்டுமானால், உங்கள் மனதை மகிழ்விக்க கூடிய எண்ணற்ற உள்ளடக்கங்கள் ப்ளே ஸ்டோரில் காணப்படுகின்றன. ஆனால் எல்லாவற்றையும் இலவசமாக அல்லது குறைந்த விலையில் பெற முடியாது. ஒரு பிரிமியம் கேம் அல்லது ஒரு சந்தாதாரராக இணைவதற்கு பணத்தை செலவிட நீங்கள் யோசிக்காத நபராக இருக்கும் பட்சத்தில், அதிகளவில் வெளியே தெரியாத ப்ளே ஸ்டோரில் உள்ள மேற்கூறியது போன்ற பல ரகசியங்களைக் குறித்து அதிகளவில் நீங்கள் அறிந்து கொண்டு, பயன் பெறக் கூடும்.

 கூகுள் ஹோம் டிவைஸ்

கூகுள் ஹோம் டிவைஸ்

கூகுள் நிறுவனத்தின் தயாரிப்புகளை வாங்கும் போது, அதனுடன் பல இலவச பொருட்களும் அளிக்கப்படுகின்றன என்பது நம்மில் அநேகருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கூகுள் தயாரிப்புகளான பிக்சல் ஃபோன், கூகுள் ஹோம் டிவைஸ் அல்லது கிரோம்கேஸ்ட் ஆகியவை அல்லது அதற்கு நிகரான ஏதாவது ஒரு தயாரிப்பை ஒருவர் வாங்கும் போது, அதனுடன் சில இலவசங்களும் அளிக்கப்படுகின்றன. கீழ்க்காணும் படிகளின் மூலம் இலவசமாக கிடைக்கக் கூடிய சலுகைகளைக் குறித்து அறிந்து கொள்ளலாம்.

உங்களுக்காக கூகுள் ப்ளேயில் அளிக்கப்படுவது என்ன என்பதை காண்பது எப்படி?

உங்களுக்காக கூகுள் ப்ளேயில் அளிக்கப்படுவது என்ன என்பதை காண்பது எப்படி?

ஒரு புதிய கூகுள் தயாரிப்பை வாங்கும் போது, அதனுடன் ஒரு இலவச புத்தகம், வாடகைக்கு ஒரு திரைபடம் அல்லது கூகுள் ப்ளே மியூஸிக்கின் மூன்று மாத சந்தா உள்ளிட்டவை கூகுள் நிறுவனத்திடம் இருந்து அளிக்கப்படுகின்றன. எனவே ஒரு புதிய கூகுள் தயாரிப்பை நீங்கள் சமீபத்தில் வாங்கி இருந்தால், கண்டிப்பாக இதை குறித்து சோதித்து பார்க்க வேண்டும். மேலும் தற்போது வழங்கப்படும் பொதுவான திட்டங்களைக் குறித்து அறிந்து வைத்திருப்பது ஒரு சிறந்த பழக்கம் ஆகும்.

1) கூகுள் ப்ளே ஸ்டோரை திறக்கவும்.

2) இடதுபுறமாக சென்று கணக்கை தேர்ந்தெடுக்கவும்.

3) வெகுமதிகள் பொத்தானை கிளிக் செய்யவும்.

4) உங்களிடம் மீட்பு குறியீடுகள் ஏதாவது இருந்தாலோ அல்லது ஏதாவது சலுகைகள் மீட்க இருந்தாலோ, அங்கே அவை காட்டப்படும்.

5) ஒரு சலுகையை மீட்க வேண்டுமானால், 'மீட்கவும்' அல்லது 'பெறவும்' என்பதை கிளிக் செய்யவும்.

6) வெகுமதிகளை நீங்கள் இழந்துவிடாத வண்ணம், அதன் மீதுள்ள காலாவதியாகும் தேதியை பார்த்து கொள்ளவும்.

ஒப்பீனியன் ரிவார்டு அப்ளிகேஷன்

ஒப்பீனியன் ரிவார்டு அப்ளிகேஷன்

உங்கள் கணக்கில் உள்ள கூகுள் ப்ளே கிரிடிட் மூலம் சலுகையை, பரிசு பொருட்களாக மாற்றி கொள்ள நீங்கள் அனுமதிக்கப்படுவீர்கள். கூகுள் ப்ளே வரவு வைப்பை நீங்கள் பெறும் வகையில், கூகுள் ஒப்பீனியன் ரிவார்டு அப்ளிகேஷனில் கேட்கப்படும் சில மதிப்பாய்வு கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். கூகுள் ஒப்பீனியன் ரிவார்டு அப்ளிகேஷன் மற்றும் பரிசு அட்டைகள் ஆகியவை இரண்டும் சேர்ந்து, கூகுள் ப்ளே கிரிடிட்டை பெறுவதற்கு உதவுகின்றன.

How To Increase the Speed of your Laptop (TAMIL)
கூகுள் ப்ளே கிரிடிட் :

கூகுள் ப்ளே கிரிடிட் :

கூகுள் ப்ளே கிரிடிட் கணக்கில் எவ்வளவு பாக்கி உள்ளது என்பதை அறிய, கணக்கு பக்கத்தில் உள்ள பணம் செலுத்தும் முறைகளுக்கான இணைப்பு மீது கிளிக் செய்தால் போனது. ஒரு சில இலவச சலுகைகளைப் பெறுவதற்காக, ஒரு புதிய தயாரிப்பை வாங்குவது என்பது ஒரு புத்திசாலித்தனமான செயல் என்று கூற முடியாது. ஆனால் ஒரு புதிய தயாரிப்பை வாங்கி உள்ள நிலையில், ஒரு புத்தகத்தையோ அல்லது ஒரு திரைபடத்தையோ வாங்குவதற்கு செலவு செய்ய வேண்டிய தேவையில்லாதத போது, அதை பயன்படுத்தி கொள்வது கூடுதல் வெகுமதி எனலாம். மேலும் இதன்மூலம் ப்ளே மியூஸிக்கை இலவசமாக பெறுவதற்கான வாசலை நீங்கள் எட்டி விட்ட நிலையில், அதை உபயோகிப்பதற்கான வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
How to check and get freebies on Google Play ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X