வாட்ஸ்அப் வெப் வெர்ஷனின் வால்பேப்பரை மாற்றுவது எப்படி?

வாட்ஸ்அப் வெப் மற்றும் ஸ்மார்ட்போன் செயலிகளில் சில கஸ்டமைசேஷன் வசதிகளும் கிடைக்கிறது.

|

உலகம் முழுக்க சுமார் 120 கோடி பேர் பயன்படுத்தும் இன்ஸ்டன்ட் மெசேஜிங் செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. இந்த செயலியை கொண்டு டெக்ஸ்ட், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் தரவுகளை நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் பகிர்ந்து கொள்ள முடிகிறது.

வாட்ஸ்அப் வெப் வெர்ஷனின் வால்பேப்பரை மாற்றுவது எப்படி?

முன்னதாக வாட்ஸ்அப் வெப் ஆப் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியை கொண்டு கம்ப்யூட்டர்களிலும் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியும். ஸ்மார்ட்போன் செயலியில் வழங்கப்படும் பெரும்பாலான அம்சங்கள் வெப் வெர்ஷனிலும் வழங்கப்படுகிறது. எனினும் சில அம்சங்கள் மட்டும் இதுவரை வழங்கப்படவில்லை.

வாட்ஸ்அப் வெப்

வாட்ஸ்அப் வெப்

வாட்ஸ்அப் வெப் மற்றும் ஸ்மார்ட்போன் செயலிகளில் சில கஸ்டமைசேஷன் வசதிகளும் கிடைக்கிறது. அந்த வகையில் வாட்ஸ்அப் வெப் வெர்ஷனில் வால்பேப்பரை மாற்றுவது எப்படி என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்:

முதலில் செய்யய வேண்டியவை:

முதலில் செய்யய வேண்டியவை:

- ஸ்மார்ட்போன் மற்றும் கம்ப்யூட்டரில் சீரான இன்டர்நெட் இணைப்பு

- சமீபத்திய வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த வேண்டும்

- கம்ப்யூட்டரில் வாட்ஸ்அப் வெப் லாக்-இன் செய்யப்பட்டிருக்க வேண்டும்

 ஒருவேளை வாட்ஸ்அப் வெப் லாக்-இன் செய்ய தெரியாது எனில், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்:

ஒருவேளை வாட்ஸ்அப் வெப் லாக்-இன் செய்ய தெரியாது எனில், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்:

- கூகுள் க்ரோம் அல்லது வேறு ஏதேனும் பிரவுசர் சென்று ‘web.whatsapp.com' டைப் செய்ய வேண்டும்

- இனி, ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் செயலியை திறந்து, வலதுபுறம் மேல்பக்கமாக காணப்படும் மூன்று செங்குத்தான புள்ளிகளை க்ளிக் செய்ய வேண்டும்

- அடுத்து வாட்ஸ்அப் வெப் ‘WhatsApp web' ஆப்ஷனை க்ளிக் செய்து, பிரவுசரில் தெரியும் கியூ.ஆர். கோடினை ஸ்கேன் செய்ய வேண்டும்

வாட்ஸ்அப் வெப் வெர்ஷனில் வால்பேப்பர் மாற்ற செய்ய வேண்டியவை:

வாட்ஸ்அப் வெப் வெர்ஷனில் வால்பேப்பர் மாற்ற செய்ய வேண்டியவை:

1. கம்ப்யூட்டரில் வாட்ஸ்அப் வெப் சென்று கியூ.ஆர். கோடு ஸ்கேன் செய்து லாக்-இன் செய்ய வேண்டும்

2. ப்ரோஃபைல் படத்தின் அருகில் வலதுபுறம் மேல்பக்கமாக காணப்படும் மூன்று செங்குத்தான புள்ளிகளை க்ளிக் செய்ய வேண்டும்

3. செட்டிங்ஸ் 'Settings' ஆப்ஷன் சென்று வால்பேப்பர் 'Wallpaper' ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்

4. இனி, உங்களுக்கு பிடித்தமான வால்பேப்பரை தேர்வு செய்து அதனை உறுதி செய்து கொள்ள வேண்டும்

5. இனி 'Ok' பட்டனை க்ளிக் செய்து பேக்கிரவுன்டை மாற்றலாம்.

Best Mobiles in India

English summary
Must Finger Print to buy in Tamilnadu Ration shop things: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X