ஸ்மார்ட்போனில் போலி செயலிகளை டவுன்லோடு செய்யாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

செயலிகளின் முன்னுரையயில் அதிக வாக்கியப்பிழை மற்றும் இலக்கியப் பிழைகள் இருந்தால், அது போலி செயலி தான் என்பதை அறிந்து கொள்ளலாம்.

|

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலரும், பிரபல செயலிகளின் போலி வெர்ஷன்களை தெரியாத் தனமாக டவுன்லோடு செய்திடுவர். போலி செயலிகளை டவுன்லோடு செய்வதன் மூலம் - உங்களது மொபைலில் உள்ள தனிப்பட்ட தகவல்கள் தீங்கு விளைவிப்போர் கைகளில் செல்லும் வாய்ப்புகள் அதிகம் - இதனால் எப்போதும் உண்மையான செயலிகளை மட்டும் டவுன்லோடு செய்வது அவசியமாகும்.

எனினும், போலி செயலிகள் அதிகம் பரவிக்கிடப்பதால் இவற்றை டவுன்லோடு செய்யாமல் தவிர்ப்பது எப்படி என்றும் தீங்கு விளைவிக்கும் மால்வேர்கள் உங்களது ஸ்மார்ட்போனினை பாதிக்காமல் தடுப்பது எப்படி என்றும் தொடர்ந்து பார்ப்போம்.

அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோர்கள்

அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோர்கள்

எப்போதும் செயலிகளை அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோரில் இருந்தே டவுன்லோடு செய்யுங்கள். செயலிகளை பல்வேறு இதர இடங்களில் இருந்தும் டவுன்லோடு செய்ய முடியும், ஆனால் இவற்றை தவிர்ப்பது நல்லதுய சில சமயங்களில் ஆப் ஸ்டோர்களிலும் மால்வேர் கண்டறியப்படலாம், எனினும் இவை அடிக்கடி நீக்கப்பட்டு விடும். அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோரினை பயன்படுத்தி, போலி செயலிகளை டவுன்லோடு செய்யாமல் இருக்க முடியும்.

செயலியின் முன்னுரை

செயலியின் முன்னுரை

செயலிகளின் முன்னுரையயில் அதிக வாக்கியப்பிழை மற்றும் இலக்கியப் பிழைகள் இருந்தால், அது போலி செயலி தான் என்பதை அறிந்து கொள்ளலாம். நம்பக்கூடிய டெவலப்பர் எனில், இதுபோன்ற தவறுகளை எவரும் செய்ய மாட்டார்கள்.

விமர்சனங்கள் மிகமுக்கியம்

விமர்சனங்கள் மிகமுக்கியம்

சில செயலிகளின் விமர்சனங்களை டவுன்லோடு செய்யும் முன் படிப்பது நல்லது. போலி செயலிகளுக்கு எப்போதும் மிக மோசமான விமர்சனங்கள் நிறைந்திருக்கும். இதனால் செயலியை டவுன்லோடு செய்யும் முன் விமர்சனங்களை படித்தே போலி செயலிகளை கண்டறிந்து விடலாம்.

டெவலப்பர் பின்னணி

டெவலப்பர் பின்னணி

ஆப் டெவலப்பரின் வலைதளம் சென்றோ அல்லது ஆப் ஸ்டோர் டிஸ்க்ரிப்ஷன் பகுதிக்கு சென்றோ டெவலப்பர் விவரங்களை பார்க்கலாம். செயலிகளை டவுன்லோடு செய்யும் முன் டெவலப்பர் பற்றி அறிந்து கொள்வது நல்லது. நீங்கள் சந்தேகிக்கும் படி ஏதும் தகவல்களோ அல்லது ஒருவேளை டெவலப்பர் வலைதளம் அல்லது சமூக வலைதளங்களில் இல்லாத பட்சத்தில் அந்த செயலியை டவுன்லோடு செய்யாமல் இருப்பதே நல்லது.

டவுன்லோடு எண்ணிக்கை

டவுன்லோடு எண்ணிக்கை

செயலி உண்மையானதா அல்லது போலியானதா என்பதை அறிந்து கொள்ள இது சிறப்பான வழிமுறை எனலாம். அதிகளவு டவுன்லோடு செய்யப்பட்டு இருந்தால், குறிப்பிட்ட செயலியை நம்புவதற்கான காரணிகள் அதிகம்.

மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் வழிமுறைகள் முழுமையாக உங்களை காப்பாற்றும் என்ற அவசியம் எப்போதும் இருக்காது. எனினும், செயலிகளை டவுன்லோடு செய்யும் முன் ஒருமுறை இவற்றை பயன்படுத்துவதலாம்

Best Mobiles in India

English summary
How to avoid downloading fake apps on your smartphone: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X