Home
Apps

Hotstar இந்தியாவில் வந்தது 'அந்த' புதிய சேவை! இனி லைவ்வா எல்லாம் பார்க்கலாம்!

இந்திய ஸ்ட்ரீமிங் சேவை நிறுவனங்களில் முன்னிலை வகிக்கும் ஹாட்ஸ்டார் நிறுவனம் தனது பயனர்களுக்காக புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. ஹாட்ஸ்டார் தளத்தில் வழங்கப்படும் ஏராளமான சேவைகளுடன் தற்பொழுது, இந்த புதிய சேவையையும் ஹாட்ஸ்டார் வழங்கத் தயாராகிவிட்டது. அப்படி என்ன கூடுதல் சேவையை ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது என்று தெரிய வேண்டுமா? வாங்கச் சொல்கிறோம்.

இந்தியாவில் ஹாட்ஸ்டார் ராஜியம்

இந்தியாவில் ஹாட்ஸ்டார் ராஜியம்

நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ போன்ற பிரபலமான ஸ்ட்ரீமிங் தளங்கள் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கலாம், ஆனால், இந்தியாவில் எப்பொழுதும் ​​ஹாட்ஸ்டார் ராஜியம் தான். இதற்கான முக்கிய காரணம் மலிவு விலையில், பல்வேறு இந்திய மொழிகளின் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், லைவ் ஸ்போர்ட்ஸ் மற்றும் பிரபலமான குளோபல் டிவி நிகழ்ச்சிகள், சீரிஸ்கள் என அனைத்தையும் வழங்குகிறது.

ஸ்டார் நெட்வொர்க் சேனல்களின் லைவ் டிவி

ஸ்டார் நெட்வொர்க் சேனல்களின் லைவ் டிவி

இப்படியான ஒரு பெரிய பட்டியலுடன் ஹாட்ஸ்டார் இந்தியாவில் தனது சேவையை இன்னும் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதன் முயற்சியாக ஹாட்ஸ்டார் தற்பொழுது, ஸ்டார் நெட்வொர்க்கின் பல்வேறு தொலைக்காட்சி சேனல்களின் லைவ் டெலிகாஸ்ட் அம்சத்தைச் தனது பயன்பாட்டில் சேர்த்துள்ளது. இந்த அம்சம் இப்போது ஹாட்ஸ்டாரின் Android மற்றும் iOS பயன்பாடுகளில் கிடைக்கிறது.

ஸ்டார் பிளஸ் முதல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வரை

ஸ்டார் பிளஸ் முதல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வரை

ஸ்டார் பிளஸ், ஸ்டார் ஜல்சா, ஸ்டார் விஜய், ஏசியானெட், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 இந்தி போன்ற சேனல்களை இனிமேல் ஹாட்ஸ்டார் பயனர்களுக்கு லைவ் ஆகப் பார்க்கமுடியும். ஹாட்ஸ்டார் பயன்பாட்டில் உள்ள டிவி பிரிவில் இந்த புதிய லைவ் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.

லைவ் டிவி அம்சத்தின் கீழ் கிடைக்கப்பெறும் சேனல்கள்

லைவ் டிவி அம்சத்தின் கீழ் கிடைக்கப்பெறும் சேனல்கள்

டிவியில் இந்த சேனல்களில் என்ன நிகழ்ச்சிகள் ஒளிபரப்படுகிறதோ அவற்றை, இனிமேல் லைவ்வாக ஹாட்ஸ்டார் மூலம் நீங்கள் பார்த்துக்கொள்ளலாம்.இந்த புதிய லைவ் டிவி அம்சத்தின் கீழ் கிடைக்கப்பெறும் சேனல்களின் பட்டியல்

  • ஸ்டார் பிளஸ்
  • ஸ்டார் ஜல்சா
  • ஸ்டார் விஜய்
  • ஏசியானெட்
  • ஸ்டார் பாரத்
  • ஸ்டார் மா
  • ஸ்டார் பிரவா
  • ஸ்டார் சுவர்ணா
  • ஸ்டார் ஸ்பாட்ஸ் எச்டி சேனலும் லைவ்

    ஸ்டார் ஸ்பாட்ஸ் எச்டி சேனலும் லைவ்

    • மா கோல்ட்
    • ஸ்டார் உட்சவ்
    • ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1
    • ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2
    • ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் 1 எச்டி
    • ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தி 1
    • ஸ்டார் ஸ்பாட்ஸ் 2 எச்டி
    • மலிவு விலையில் வருடாந்திர சந்தா வழங்கும் ஹாட்ஸ்டார்

      மலிவு விலையில் வருடாந்திர சந்தா வழங்கும் ஹாட்ஸ்டார்

      இந்த லைவ் டிவி சேவைக்கான அணுகல் ஹாட்ஸ்டார் பிரீமியம் மற்றும் ஹாட்ஸ்டார் விஐபி சந்தா கட்டண பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். உங்களுக்கு இந்த சேவை வேண்டுமென்றால் ஹாட்ஸ்டார் பிரீமியம் திட்டத்தின் மாத சந்தா விலை ரூ.299 ஆகும். ஆனால் அதன் ஒரு ஆண்டு சந்தா ரூ.999 என்ற விலையில் சலுகையுடன் கிடைக்கிறது. ஹாட்ஸ்டார் விஐபி திட்டத்தின் வருடாந்திர சந்தா ரூ.365 மட்டுமே.

      ஹாட்ஸ்டாருடன் இந்தியாவில் கால்பதிக்கும் டிஸ்னி +

      ஹாட்ஸ்டாருடன் இந்தியாவில் கால்பதிக்கும் டிஸ்னி +

      இத்துடன் ஹாட்ஸ்டாரில் இந்தியா டுடே, ரிபப்ளிக் டிவி, ஸ்கை நியூஸ், ஃபாக்ஸ் நியூஸ், ஃபாக்ஸ் பிசினஸ், ஆஜ் தக், ஏபிபி போன்ற செய்தி சேனல்களும் கூடுதல் சேவையாக வழங்கப்பட்டுவருகிறது. இத்துடன், மார்ச் 29ம் தேதி முதல் டிஸ்னி +, அதன் சேவையை ஹாட்ஸ்டாருடன் கொண்டுவரத் தயாராகிவிட்டது.

      டிஸ்னி + ஹாட்ஸ்டார் சேவை விரைவில் துவக்கம்

      டிஸ்னி + ஹாட்ஸ்டார் சேவை விரைவில் துவக்கம்

      இருப்பினும் இது ஹாட்ஸ்டார் விலையைப் பாதிக்குமா என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த சேவை டிஸ்னி + ஹாட்ஸ்டார் என்ற பெயரில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மக்கள் டிஸ்னி + சேவையை நிச்சயம் விரும்புவார்கள் என்று நிறுவனம் நம்பிக்கையாக தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Hotstar Now Give Access To Live Star Network Channels For Both Android And iOS Mobile App Users : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X