Home
Apps

வாட்ஸ்ஆப்பிற்கு ஆப்பு; இன்டர்நெட் இல்லாமல் மெசேஜ் அனுப்பும் புதிய ஆப் அறிமுகம்!

இந்த ஹைக் டோட்டல் சேவையில் செய்திகள், மெசேஜிங், ரீசார்ஜ், கிரிக்கெட் நிலவரம், பண பரிமாற்றம் செய்வது, ரயில் சார்ந்த பல்வேறு தகவல்கள் போன்ற அனைத்தும் பயன்படுத்த முடியும்.

By Prakash

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டோட்டல் எனும் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது ஹைக் நிறுவனம், இவை மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையைப் பொறுத்தவரை செய்திகள், மெசேஜிங், ரீசார்ஜ் போன்றவற்றை இண்டர்நெட் இணைப்பின்றி பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஸ்மார்ட்போன்களில் இந்த ஹைக் டோட்டல் சேவையைப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சேவைப் பொறுத்தவரை வரும் மார்ச் 1-ஆம் தேதி முதல் தேர்வு செய்யப்பட்ட இன்டெக்ஸ் மற்றும் கார்பன் நிறுவன ஸ்மார்ட்போன்களிலும் ஏர்டெல், ஏர்செல் மற்றும் பிஎஸ்என்எல் போன்ற நெட்வொர்க்களில் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவற்றின் சிறப்பம்சம் என்னவென்றால் ஹைக் டோட்டல் வாடிக்கையாளர்களுக்கு டோட்டல் சேவையைப் பயன்படுத்த ரூ.200-வரை வழங்கப்படுகிறது.

ஹைக் டோட்டல்:

ஹைக் டோட்டல்:

ஹைக் டோட்டல் சேவை முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட இன்டெக்ஸ் அக்வா லயன்ஸ் என்1, அக்வா லயன்ஸ் டி1, அக்வா லயன்ஸ் டி 1-லைட் மற்றும் கார்பன் ஏ40 இந்தியா ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் வழங்கப்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது, அதன்பின்பு இதற்கான கட்டணம் ரூ.1 முதல் துவங்குகிறது. மேலும் யுஎஸ்எஸ்டி-சார்ந்த தொழில்நுட்பம் கொண்டு இது செயல்படுவதால் மெசேஜிங் போன்ற அனைத்து சேவைகளையும் இயக்க முடியும்.

கிரிக்கெட் நிலவரம்:

கிரிக்கெட் நிலவரம்:

இந்த ஹைக் டோட்டல் சேவையில் செய்திகள், மெசேஜிங், ரீசார்ஜ், கிரிக்கெட் நிலவரம், பண பரிமாற்றம் செய்வது, ரயில் சார்ந்த பல்வேறு
தகவல்கள் போன்ற அனைத்தும் பயன்படுத்த முடியும்.

100 கே.பி:

100 கே.பி:

இந்த ஹைக் டோட்டல் சேவையில் பல்வேறு பயன்படுகளை பயன்படுத்த 100 கே.பி முதல் 1.0எம்.பி வரையிலான டேட்டா மட்டும் தேவைப்படுகிறது.

How to download your e-Adhaar using UIDAI - Official Website in Tamil.?
பதிவு செய்ய வேண்டும்:

பதிவு செய்ய வேண்டும்:

ஹைக் டோட்டல் சேவையை பயன்படுத்த விருப்புவோர்கள் இப்போது ஹைக் டோட்டல் வலைதளத்திற்க்கு சென்று முன்கூட்டி பதிவு செய்ய வேண்டும்.

என்க்ரிப்ஷன்:

என்க்ரிப்ஷன்:

ஹைக் டோட்டல் சேவை பொதுவாக யுஎஸ்எஸ்டி ப்ரோட்டோகால் மூலம் இயங்குவதால் என்க்ரிப்ஷன், டேட்டா கம்ப்ரெஷன் மற்றும் டிரான்ஸ்மிஷன் போன்றவை பயன்படுத்தப்படுகிறது.

லாக்-இன்:

லாக்-இன்:

என்க்ரிப்ஷன் செய்யப்பட்ட இந்த ஹைக் டோட்டல் சேவையைப் பயன்படுத்த வாடிக்கையாளர்கள் தங்களது மொபைலட எண் கொண்டு ஒருமுறை லாக்-இன் செய்தாலே போதும்.

Best Mobiles in India

English summary
Hike Total Lets You Send Messages Read News Without an Internet Connection ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X