500 கல்லூரிகளின் புதிய ஸ்டிக்கர்களை அறிமுகம் செய்துள்ள ஹைக் மெசஞ்சர்

By Siva
|

இந்தியாவின் முதல் மெசஞ்சர் செயலியான ஹைக் மெசஞ்சர் தற்போது 500 கல்லூரிகளின் ஸ்டிக்கர்களை அறிமுகம் செய்துள்ளது. இந்தியவின் முன்னணி கல்லூரிகளின் ஸ்டிக்கர்கள் இந்த செயலியில் கிடைப்பதால் இந்த ஸ்டிக்கரை டவுன்லோடு செய்ய அந்தந்த கல்லூரி மாணவர்கள் முனவந்துள்ள்னர்.

500 கல்லூரிகளின் புதிய ஸ்டிக்கர்களை அறிமுகம் செய்துள்ள ஹைக் மெசஞ்சர்

இந்த ஸ்டிக்கர்கள் செப்டம்பர் 12 முதல் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் போன்கள் மூலம் டவுண்லோடு செய்யலாம்

முதலில் ஹைக் மெசஞ்சர் நிறுவனம் சோதனை முயற்சியாக டெல்லி, பெங்களூர், புனே, மற்றும் அகமதாபாத் நகரங்களில் உள்ள 18 முன்னணி கல்லூரிகளின் ஸ்டிக்கர்களை வெளியிட்டது. இந்த ஸ்டிக்கர்கள் அந்தந்த கல்லூரி மாணவர்களை பெருமளவு கவர்ந்ததை அடுத்து தற்போது 500 கல்லூரிகளின் ஸ்டிக்கர்கள் இந்த செயலியில் கிடைக்கின்றது.

500 கல்லூரிகளின் புதிய ஸ்டிக்கர்களை அறிமுகம் செய்துள்ள ஹைக் மெசஞ்சர்

இதுகுறித்து ஹைக் மெசஞ்சர் அதிகாரி ஒருவர் கூறியபோது, 'இந்த ஸ்டிக்கர் ரிலீஸ் காரணமாக அந்தந்த கல்லூரி மாணவர்கள் பலர் ஹைக்கில் அக்கவுண்ட் ஆரம்பித்து ஒருவருக்கொருவர் தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.

இதன் மூலம் பல்வேறு நகரங்களில் இருந்து 40% வரை கல்லூரி மாணவர்கள் வாடிக்கையாளர்களாக கிடைத்துள்ளனர். எனவே இந்த முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை அடுத்து 2018ஆம் ஆண்டில் மேலும் 1000 கல்லூரிகளின் ஸ்டிக்கர்களை அறிமுகம் செய்ய ஹைக் திட்டமிட்டுள்ளது.

மேலும் இந்நிறுவனத்தில் வாடிக்கையாளர்களாக இருக்கும் பெரும்பாலானோர் 18 முதல் 21 வயது வரை கல்லூரி மாணவர்கள் தான் என்றும், அவர்களுக்கு இடையேயேன கருத்து பரிமாற்றங்கள் ஆரோக்கியமானதாகவும் பாதுகாப்பானதாகவும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

500 கல்லூரிகளின் புதிய ஸ்டிக்கர்களை அறிமுகம் செய்துள்ள ஹைக் மெசஞ்சர்

மேலும் ஒவ்வொரு கல்லூரிகளில் உள்ள உணவு வகைகள், தனிப்பட்ட அம்சங்கள், கல்லூரி கட்டிடங்கள் மற்றும் மலரும் நினைவுகள் இந்த ஸ்டிக்கர்கள் மூலம் பகிர்ந்து கொள்ளப்படுவதாகவும், இந்த ஸ்டிக்கர்களின் டிசைன்கள் அந்த அளவுக்கு பார்த்து பார்த்து உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த ஹைக் மெசஞ்சரில் சேட்டிங் செய்பவர்கள் தங்களது உற்சாகமான எண்ணங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள இந்த ஸ்டிக்கர்களையும் பயன்படுத்துவதில் பெருமை அடைவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹைக் மெசஞ்ரின் செய்தி தொடர்பாளர் இதுகுறித்து கூறியபோது, 'கல்லூரி வாழ்க்கை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு இன்பமயமான நினைவுகள். பலதரப்பட்ட நண்பர்கள் கிடைக்கும் காலம் அது. எனவேதான் இந்த ஸ்டிக்கர்கள் கல்லூரி மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

அவர்களுடைய கல்லூரி நினைவுகளுடன் இந்த ஸ்டிக்கர்களும் நினைவில் கொள்ளும். எனவே தான் இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் பல கல்லூரிகளின் ஸ்டிக்கர்களை உருவாக்க முடிவு செய்திருப்பதாகவும், அதற்காக ஒரு மிகப்பெரிய குழு வேலை செய்து வருவதாகவும் கூறினார்

உங்கள் நண்பர்களை அசத்த இந்த 10 விண்டோஸ் தந்திரங்களை தெரிந்து கொள்ளுங்கள்உங்கள் நண்பர்களை அசத்த இந்த 10 விண்டோஸ் தந்திரங்களை தெரிந்து கொள்ளுங்கள்

இந்த செயலி இந்திய அளவில் அனைவரையும் கவர இந்த ஸ்டிக்கர்கள் மேலும் ஒரு காரணமாக இருந்துள்ளது. ஹைக் இதுவரை சுமார் 40 மொழிகளில் 15000க்கும் அதிகமான ஸ்டிக்கர்களை வெளியிட்டுள்ளது. இவற்றில் 550 ஸ்டிக்கர்கள் மிகவும் பிரபலமானவை. அவர் கலர்புல்லாகவும், இந்திய கலாச்சாரத்தை பறைசாற்றுவதாகவும், பாலிவுட், காமெடி, விழாக்கள், கிரிக்கெட் , கபடி மற்றும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையிலும் உள்ளன.

மேலும் 90 வகையான டெக்ஸ்ட் ஸ்டிக்கர்களும் உள்ளனர். முக்கியமான, அனைவரும் அதிகம் பயன்படுத்தும் இந்த டெக்ஸ்ட் ஸ்டிக்கர்களை வாடிக்கையாளர்கள் டைப் செய்வதற்கு பதிலாக பயன்படுத்தி கொள்ளலாம். காதல், சிரிப்பு, ஆகியவையும் இதில் அடங்கும். ஹைக் வாடிக்கையாளர்கள் நாள் ஒன்றுக்கு 300 மில்லியன் ஸ்டிக்கர்களை டவுன்லோடு செய்து மகிழ்கின்றனர்

மேலும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹைக்5.0 சில புதிய அம்சங்களை சேட்டிங் செய்வதற்காக உளதாகவும், தீம், நைட் மோட், மேஜிக் செல்பி மற்றும் ஹைக் வேலட் ஆகியவை இதன் சிறப்பம்சங்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த புதிய வசதிகள் நிச்சயம் ஹைக் வாடிக்கையாளர்களை மேலும் திருப்தி செய்யும் என்று நம்பப்படுகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
Hike Messenger, India's first messaging app, today announced the launch of its personalized stickers for over 500 colleges across India.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X