லேண்ட்லைன் போன் மூலம் வாட்ஸ் அப் பயன்படுத்துவது எப்படி?

மெசேஜ் மூலம் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதில் பெரும்பங்கு வகிக்கும் இதற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி கொண்டே உள்ளது.

|

உலகில் உள்ள முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ் அப் தற்போது 1.5 பில்லியன் பயனாளிகளுடன் உள்ளது. மெசேஜ் மூலம் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதில் பெரும்பங்கு வகிக்கும் இதற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி கொண்டே உள்ளது. இந்த செயலி மூலம் இமேஜ்கள், வீடியோக்கள், டாக்குமெண்ட்டுக்கள், லோகேஷன் உள்பட பல விஷயங்களை பகிர்ந்து கொள்ள உதவுகிறது. அதேபோல் வாய்ஸ்கால், வீடியோகால் போன்றவற்றை இலவசமாகவும் தருகிறது

லேண்ட்லைன் போன் மூலம் வாட்ஸ் அப் பயன்படுத்துவது எப்படி?

ஸ்மார்ட்போன்களில் மட்டுமின்றி ஜியோ போன் மற்றும் நோக்கியா 8110 ஆகிய பேசிக் மாடல் போன்களிலும் தற்போது வாட்ஸ் அப் பயன்படுத்தும் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப் செயலி

வாட்ஸ் அப் செயலி

வாட்ஸ் அப் செயலி தற்போது பொழுதுபோக்குக்கு மட்டுமின்றி தொழில் செய்பவர்களுக்கு பெரும் உதவி செய்து வருகிறது. இதில் உள்ள பிசினஸ் செயலியில் பல்வேறு வசதிகள் உள்ளன. தொழில் செய்பவர்கள் தங்களது வாடிக்கையாளர்களை பாதுகாப்புடன் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் பேருதவி செய்கிறது. மேலும் தொழில் செய்பவர்கள் தங்கள் மொபைல் எண்ணை பகிராமல், அதே நேரத்தில் தங்களது வாடிக்கையாளர்களையும் தொடர்பு கொள்ள விரும்புவதற்காகவே தற்போது வாட்ஸ் அப் செயலி, லேண்ட்லைன் போனிலும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. லேண்ட்லைன் மூலம் வாட்ஸ் அப் செயலியை எப்படி பயன்படுத்த முடியும் என்று நீங்கள் ஆச்சரியப்பட்டால் அதற்கான விடை கீழே உள்ளது

லேண்ட்லைன்

லேண்ட்லைன்

லேண்ட்லைன் மூலம் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவது தொழிலதிபர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களுக்கும் உதவும் என்பதால் இந்த வழியை அனைவரும் தெரிந்து கொள்வது நல்லது. நம்முடைய எண் பிறருக்கு தெரியாமல் அதே நேரத்தில் வாட்ஸ் அப் பயனாளிகளுடனும் தொடர்பு கொள்ள இந்த முறை நமக்கு உதவுகிறது

ஸ்டெப் 1:

ஸ்டெப் 1:

முதலில் உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது டேப்ளட்டில் வாட்ஸ் அப் செயலியை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். மேலும் நீங்கள் டூயல் வாட்ஸ் அப் செட்டிங் பயன்படுத்தி இரண்டு வெவ்வேறு வாட்ஸ் அப் அக்கவுண்டை ஆரம்பித்து கொள்ளுங்கள்

ஸ்டெப் 2:

ஸ்டெப் 2:

வாட்ஸ் அப் முதலில் உங்கள் 10 இலக்க மொபைல் எண்ணை கேட்கும். அதற்கு பதிலாக உங்கள் எஸ்.டி.டி கோட் எண்ணுடன் உங்கள் லேண்ட்லைன் எண்ணை பதிவு செய்யுங்கள்.

ஸ்டெப் 3:

ஸ்டெப் 3:

வெரிபிகேசனுக்காக உங்களுக்கு இரண்டு ஆப்சன்கள் வரும். அதில் ஒன்று எஸ்.எம்.எஸ் மற்றொன்று கால் செய்வது ஆனால் எஸ்.எம்.எஸ் தானாகவே உங்கள் எண்ணுக்கு வந்துவிடும். ஆனால் நீங்கள் லேண்ட்லைன் போன் வைத்திருப்பதால் எஸ்.எம்.எஸ் உங்களால் பெற முடியாது. எனவே கால் செய்யும் ஆப்சன் வரும் வரை சிறிது நேரம் பொறுமை காக்கவும். தற்போது உங்களுக்கு 6 டிஜிட் வெரிபிகேஷன் கோட் எண் குறித்த கால் வரும். இந்த எண்ணை நீங்கள் பதிவு செய்தால் போதும் இனி வாட்ஸ் அப் செயலியை நீங்கள் பயன்படுத்த முடியும்

ஸ்டெப் 4:

ஸ்டெப் 4:

தற்போது நீங்கள் உங்கள் பெயர், புரொபைல் புகைப்படம் மற்றும் மற்ற விபரங்களை பதிவு செய்து வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தலாம்.

தற்போது நீங்களும் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி அதன் அனைத்து வசதிகளையும் நீங்களும் அனுபவிக்கலாம்

Best Mobiles in India

English summary
Here’s how to use WhatsApp with landline number: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X