குழந்தைகளை கட்டுப்படுத்த உதவும் அமேசான் ஃப்ரி டைம் செயலி

குழந்தைகளை கட்டுப்படுத்த உதவும் அமேசான் ஃப்ரி டைம் செயலி

By Siva
|

அமேசான் நிறுவனம் புதியதாக அறிமுகம் செய்துள்ள அமேசான் ஃப்ரி டைம் செயலி தற்போது கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கின்றது. இந்த செயலி ஆண்ட்ராய்டு போன் மற்றும் டேப்ளட் ஆகியவைகளுக்கு பொருந்தும் வகையில் உள்ளது. மேலும் இந்த செயலி பெற்றோர்களால் கட்டுப்படுத்தப்பட்டு குழந்தைகள் எதை எதை பார்க்க வேண்டும், பார்க்க கூடாது என்பதை வரையறுக்கும் வசதி உள்ளது

குழந்தைகளை கட்டுப்படுத்த உதவும் அமேசான் ஃப்ரி டைம் செயலி

இந்த ஃப்ரி டைம் செயலியில் 40,000க்கும் அதிகமான யூடியூப் வீடியோக்கள் பார்க்கும் வசதி உண்டு. குழந்தைகளின் நுண்ணறிவுகளை தூண்டும் வகையில் உள்ள வீடியோக்கள் மட்டுமே இதில் தெரியும் வகையில் பெற்றோர்கள் கட்டுப்படுத்தலாம் மேலும் அவர்களுடைய வயதிற்கு தகுந்தவாறு என்னென்ன புதுமையான விஷயங்களை கற்றுக் கொள்ளலாம் என்பது உள்பட இதில் வசதி உண்டு.

குழந்தைகளை கட்டுப்படுத்த உதவும் அமேசான் ஃப்ரி டைம் செயலி

மேலும் குழந்தைகள் இந்த செயலியை இரவு முழுவதும் பார்த்து தூக்கத்தை கெடுத்து கொள்வார்களோ என்ற பயமும் தேவையில்லை. ஏனெனில் இரவில் குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் இந்த செயலி செயல்படாத வகையில் பெற்றோர் அமைத்து கொள்ளும் வசதியும் இதில் உண்டு.

இந்த செயலியின் அப்கிரேட் வெர்ஷன், பிரிமியம் உறுப்பினர்களுக்கு மாதம் ரூ.192 என்ற கட்டணம் செலுத்தியும், பிரிமியம் உறுப்பினர்கள் இல்லாதவர்கள் ரூ.320 கட்டணம் செலுத்தியும் அளவில்லாத அளவிற்கு உபயோகப்படுத்தி கொள்ளலாம்

குழந்தைகளை கட்டுப்படுத்த உதவும் அமேசான் ஃப்ரி டைம் செயலி

அப்கிரேட் வெர்ஷனில் சுமார் 10,000க்குஇம் மேற்பட்ட அந்தந்த வயதிற்குரிய குழந்தைகளுக்கு தேவையான முன்னணி நிறுவனங்களான டிஸ்னி, நிக்கோலோடன், அமேசான் ஸ்டுடியோஸ் உள்பட பல நிறுவனங்கள் வெளியிட்ட புத்தகங்கள், வீடியோக்கள் ஆகியவை கிடைக்கும்

தற்போது வரை இந்த செயலியை சுமார் 10 மில்லியன் குழந்தைகள் பயன்படுத்தி வருவதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட செயலிகள், கேம்ஸ்கள், வீடியோக்கள், புத்தககங்கள் மட்டுமே அனுமதிக்கும் வகையில் பெற்றோர்கள் இந்த செயலியில் செட் செய்து வைப்பதுதான் இதன் தனிச்சிறப்பு ஆகும்

மேலும் இதில் பெற்றோர்களுக்கு என ஒரு டேஷ்போர்ட் இருக்கும். அதில் சென்று நம் குழந்தைகள் எந்தெந்த வீடியோக்களை எவ்வளவு நேரம் பயன்படுத்தியுள்ளனர், மொத்தத்தில் இந்த செயலியை எப்படி, எவ்வாறு, எவ்வளவு நேரம் பயன்படுத்தி உள்ளனர் என்பதை பார்க்கும் வசதி இருப்பதால் நம் குழந்தைகள் நம்முடைய கவனத்தில் இருந்து செல்ல முடியாத வகையில் பாதுகாப்பான செயலி என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
Amazon Free Time is now available as an app on Google Play store for both Smartphones and tablets.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X