ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் கிடைக்கும் தலைச்சிறந்த ரேசிங் கேம்கள்

  ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் இயங்குதளமாக ஆண்ட்ராய்டு இருக்கிறது. அனைவருக்கும் ஏற்ற பட்ஜெட்களில் கிடைக்கும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகிறது.

  ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் கிடைக்கும் தலைச்சிறந்த ரேசிங் கேம்கள்

  அந்த வகையில் அனைவரும் விரும்பக்கூடிய அம்சமாக கேமிங் இருக்கிறது. ஒவ்வொருத்தர் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனிற்கு ஏற்ப பல்வேறு கேம்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் கிடைக்கிறது. அவ்வாறு கேமிங் விளையாடுவோருக்கு ஏற்ற தொகுப்பு இது.

  ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் கிடைக்கும் தலைச்சிறந்த ரேசிங் கேம்களின் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  நீட் ஃபார் ஸ்பீடு (Need For Speed No Limits)

  கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் தலைச்சிறந்த கேமாக நீட் ஃபார் ஸ்பீடு இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக இதன் கிராஃபிக்ஸ் இருக்கிறது. அதிவேகமாக இயங்கும் இந்த கேம் சீரான அனுபவத்தை வழங்குவதோடு விளையாட பல்வேறு ஆப்ஷன்களையும் வழங்குகிறது.

  ஆஸ்ஃபால்ட் 8 ஏர்போர்ன் (Asphalt 8 airborne)

  ஆஸ்ஃபால்ட் சீரிஸ் கேம்களில் இந்த கேம் மிகவும் பிரபலமான ஒன்றாக இருக்கிறது. சீரான கிராஃபிக்ஸ் மற்றும் கேம்பிளே கொண்டுள்ளதால் இந்த கேம் அதிக டவுன்லோடுகளை பெற காரணமாக இருக்கிறது. எந்நேரமும் ரேசிங் கேம் விளையாடுவோருக்கு ஏற்ற டிஸ்ப்ளே கொண்டிருப்தோடு கேம்பிளே சீராகவும் வேகமாகவும் இருக்கிறது.

  காலின் மெக்ரே ரேல்லி (Colin McRae Rally)

  தலைச்சிறந்த ஆஃப்ரோடு ரேசிங் கேம் என்றால் முதலிடம் பிடிப்பது இந்த கேம் தான் எனலாம். முதலில் கணினிகளில் மட்டும் வெளியிடப்பட்ட காலின் மெக்ரே ரேல்லி அதன் பின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் வெளியிடப்பட்டது. சீரான ஹேன்ட்லிங் மற்றும் வேகத்தை கட்டுப்படுத்தும் வசதிகள் இந்த கேம் விளையாடுவோரை கவரும் முக்கிய அம்சங்களாக இருக்கிறது.

  ஜிடி ரேசிங் 2 (GT Racing 2)

  பிரபல கேம் தயாரிப்பு நிறுவனமான கேம்லாஃப்ட் தயாரித்து வெளியிட்ட இந்த கேம் ஒவ்வொரு லெவல் முடித்து ஒவ்வொரு காரினை அன்லாக் செய்யும் படி தயாரிக்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்த கேமினை ஆன்லைனில் விளையாடும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

  ரேஜிங் தன்டர் ஃப்ரீ ( Raging Thunder free)

  ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் விளையாட தலைச்சிறந்த கேமாக இது இருக்கிறது. துல்லியமான முப்பறிமான வசதிகள் மற்றும் சீரான கிராஃபிக்ஸ் உள்ளிட்டவை விளையாடும் போது சிறப்பான அனுபவத்தை வழங்குகிறது.

  டிராக் ரேசிங் (Drag Racing)

  விளையாடுவோரை அடிமைப்படுத்தும் அளவு சிறப்பான ஆண்ட்ராய்டு கேமாக இது இருக்கிறது. கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும் டிராக் ரேசிங் கேமில் 50க்கும் அதிகமான சான்றளிக்கப்பட்ட கார்கள் உள்ளன.

  தோழிக்கு நேர்ந்த பதற்றமான சம்பவம்; வெறும் ரூ.499/-க்கு பைக் சார்ஜர் உருவாக்கிய அருண்.!

  ரியல் ரேசிங் 3 (Real Racing 3)

  பிரபல கேம் தயாரிப்பு நிறுவனமான எலெக்ட்ரானிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த கேம் சிறப்பான கிராஃபிக்ஸ் மற்றும் அதிசிறந்த ரேசிங் அனுபவம் வழங்குகிறது. இதில் கார்கள் நிஜ தோற்றம் கொண்டிருப்பது விளையாடுவோருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகவும் இருக்கும்.

  ஹில் கிளைம் ரேசிங் (Hill Climb Racing)

  பிளே ஸ்டோரில் கிடைக்கும் கேம்களில் சிறப்பான கேமாக இருப்பதோடு, விளையாடுவோரை மகிழ்விக்கும் அம்சங்களும் நிறைந்த கேமாக இருக்கிறது. விளையாடுவோரின் இயற்பியல் பொது அறிவை சோதிக்கும் வகையில் செல்லும் இந்த கேம் அதிக மகிழ்ச்சியளிக்கும் கேமாகவும் இருக்கும்.

  டிராஃபிக் ரேசர் (Traffic Racer)

  இந்த கேம் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள சாலைகளில் ரேசிங் செய்வதை போன்று அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கேம் நகரம், பாலைவனம், பனி மற்றும் நகரத்தில் இரவு நேரம் போன்ற இடங்களில் ரேசிங் செய்யும் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

  கார்ஸ் (Cars)

  இந்த கேமில் உள்ள கார்களில் நைட்ரோ சார்ஜ் செய்யப்பட்டிருப்பதால் அதிவேகமாக ரேசிங் செய்ய முடியும். இத்துடன் ஓட்டுநர் தனக்கு ஏற்ப 3D ரேடியேட்டரை உருவாக்கி கொள்ள முடியும். கேம்லாஃப்ட் தயாரித்த கேம்களில் மிகவும் பிரபலமான கேமாக இது இருக்கிறது.

  பீச் பகி பிளிட்ஸ் (Beach Buggy Blitz)

  பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள நகரத்தை கார் கொண்டு அழிப்பதே இந்த கேமின் நோக்கமாக உள்ளது. கடற்கரை, ரகசிய குகை என பல்வேறு சுவாரஸ்ய பகுதிகளில் பயணிப்பதோடு கார் அனுபவம் சேர்த்து கேமிங் அனுபவத்தை சிறப்பானதாக மாற்றுகிறது.

  ஆங்ரி பேர்ட்ஸ் கோ (Angry Birds Go)

  வழக்கமான ஆங்ரி பேர்டு கேம் என இதனை நினைக்காதீர்கள் இது நிஜமான ரேசிங் கேம் ஆகும். கரடுமுரடான சாலைகளில் வெற்றிக்காக எதையும் செய்யும் ஓட்டுநர்களுடன் மோதுவதை போன்று இந்த கேம் உருவாக்கப்பட்டுள்ளது.

  நீட் ஃபார் ஸ்பீடு மோஸ்ட் வான்ட்டெட் (Need for Speed™ Most Wanted)

  ஸ்ட்ரீட் ரேசர்களுடன் போட்டியிடும் போது போலீசார் வழிமறித்தால் அங்கிருந்து எவேட் செய்வதை போன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த கேமில் பல்வேறு விலை உயர்ந்த கார்கள் ஒவ்வொரு லெவலில் கிடைக்கும். மேலும் கார்கள் அனைத்தும் நிஜ அனுபவத்தை வழங்கும்

  டெத் ரேலி (Death Rally)

  மிகவும் திகிலான கேமாக இருக்கும் டெத் ரேலியில் கார்களை அப்கிரேடு செய்யும் வசதி, ஆயுதங்கள் கொண்டு எதிரிகளை வீழ்த்துவது போல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டில் கிடைக்கும் கேம்களில் மிகவும் சுவாரஸ்யமான கேமாகவும் இது இருக்கிறது.

  சிஎஸ்ஆர் ரேசிங் (CSR Racing)

  நகர சாலைகளில் டிராக் ரேஸ் செய்வதை போல் இந்த கேம் அமைக்கப்பட்டுள்ளது. 100க்கும் அதிகமான லைசன்ஸ் பெற்ற வாகனங்கள் மற்றும் தலைச்சிறந்த கிராஃபிக்ஸ், கேம்பிளே கொண்டுள்ள சிஎஸ்ஆர் ரேசிங் மிகவும் சுவாரஸ்ய கேம்களில் ஒன்றாக இருக்கிறது.

  ஹாரிசன் சேஸ் வொர்ல்டு டூர் (Horizon Chase – World Tour)

  ரெட்ரோ கேமிங் பிரியர்களுக்கு ஏற்ற கேமாக இது இருக்கும். அதிவேகமாகவும், சிறப்பான கேம் பிளே கொண்ட ரேசிங் கேம் என்பதை தான்டி 80 மற்றும் 90களில் பிரபலமாக இருந்த பல்வேறு ரேசிங் கேம்களை தழுவி இது உருவாகியுள்ளது.

  ரேசிங் ஃபீவர் (Racing Fever)

  இந்த கேமில் உங்களுக்கு பிடித்த காரினை தேர்வு செய்து ரேசிங் செய்யலாம். ஒவ்வொரு ரேசிலும் பல்வேறு பரிசுகள் வழங்கப்படுவதோடு, நண்பர்கள் மற்றும் கேமில் உள்ள மற்றவர்களுடன் போட்டி போட்டு விளையாட முடியும்.

  ஆஸ்ஃபால்ட் எக்ஸ்ட்ரீம் :ரேல்லி ரேசிங் (Asphalt Xtreme: Rally Racing)

  ஆஸ்ஃபால்ட் சீரிஸ் கேம்களில் புதுவரவு கேமாக இருக்கும் இந்த கேம் பல்வேறு நிலைகளை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் டிரிஃப்ட் மற்றும் போட்டியாளர்களை காற்றில் பறந்து கடக்கும் படி அமைக்கப்பட்டுள்ளது.

  நைட்ரோ நேஷன் ஆன்லைன் (Nitro Nation Online)

  மிகவும் அழகிய டிராக் ரேசிங் கேம்களில் இதுவும் ஒன்று எனலாம். ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் சீராக வேலை செய்யும் இந்த கேமில் 100க்கும் அதிகமான கார்களை தேர்வு செய்யும் வசதியும், இவற்றில் பெரும்பாலான கார்கள் விலை உயர்ந்த மாடல்களாக இருக்கிறது.

  ரியல் ரேசிங் 2 (Real Racing 2)

  ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் கிடைக்கும் மிகவும் பிரபலமான கேம்களில் இதுவும் ஒன்று. எலெக்ட்ரானிக் ஆர்ட்ஸ் தயாரித்த இந்த கேம் 15 அழகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் இதன் கிராஃபிக்ஸ் கேமிற்கு சிறப்பான அனுபவத்தை வழங்குகிறது.

  மினி மோட்டார் ரேசிங் (Mini Motor Racing)

  அனைவருக்கும் பிடித்த ரிமோட் கண்ட்ரோல் கார் ஷோடவுன் போன்ற இந்த கேமில் நைட்ரோ பூஸ்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் நண்பர்களுக்கு எதிராக மல்டி பிளேயர் மோட் இடம்பெற்றுள்ளது. இந்த அம்சம் கொண்டு வைபை, ப்ளூடூத் அல்லது ஆன்லைனில் நண்பர்களுடன் விளையாட முடியும்.

  டேபிள் டாப் ரேசிங் (Table Top Racing)

  பல்வேறு விருதுகளை வென்றுள்ள டேபிள் டாப் ரேசிங் விப்அவுட் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. கன்சோல் அளவு கிராஃபிக்ஸ் வழங்கும் இந்த கேம் தலைச்சிறந்த கேம்பிளே மற்றும் ஒட்டுமொத்தமாக சிறப்பான அனுபவத்தை வழங்குகிறது.

  ரீவோல்ட் கிளாசிக் (RE-VOLT Classic)

  ஆண்ட்ராய்டில் அதிவேகமான கேம்பிளே மற்றும் தலைச்சிறந்த கிராஃபிக்ஸ் கொண்டுள்ளது. பல்வேறு டிராக் மற்றும் 40க்கும் அதிகமான கார்களை இந்த கேம் கொண்டுள்ளது.

  கிரேசி டாக்சி (Crazy Taxi)

  நகரங்களில் ரேசிங் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கேம் விளையாடுவோருக்கு தலைச்சிறந்த அனுபவத்தை வழங்கும். இத்துடன் போக்குவரத்து நெரிசலில் ரேசிங் செய்யும் படி கேம் செல்வதோடு தலைச்சிறந்த கிராஃபிக்ஸ் மற்றும் கேம்பிளே உள்ளிட்டவை கொண்டுள்ளது.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  Read more about:
  English summary
  All of us loves playing games, our taste must be differrent but purpose is always to have fun. Here are these best car racing games for android. Enjoy your time.
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more