Home
Apps

டேட்டாவை சேமிக்க உதவும் 5 அற்புதமான ஆப்லைன் ஆப்ஸ்.!

மொபைல் டேட்டாவை சேமிப்பதில் கவனமாக இருக்கும் நபரா நீங்கள் அப்போது நிச்சயமாக நீங்கள் இந்த 5 ஆண்ட்ராய்டு ஆப்லைன் ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்வீர்கள்.

By Muthuraj

உங்கள் ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோரில் ஏகப்பட்ட ஆப்ஸ்கள் கிடைக்கிறது. ஒவ்வொரு பயன்பாடும் அதற்கே உரிய அம்சங்கள் கொண்டு உங்கள்வாழ்க்கை வழிமுறையை எளிதாக்குகின்றன. எனினும் எந்த பயன்பாடுகளை எடுத்துக் கொண்டாலும் அதுப்பற்றி மிக மோசமான பகுதியாக ஒன்றை கூறலாம் அது பதிவிறக்கத்தின் போது அவைகள் எடுத்துக்கொள்ளும் அதீத மொபைல் தரவு செலவு தான்.

பெரும்பாலும் இதுபோன்ற ஆப்ஸ்கள் பதிவிறக்கத்தின் போது பயனர்கள் தங்கள் மொபைல் தரவை காப்பாற்றும் பொருட்டு, வைஃபை இணைப்பின் போது, பயன்பாடுகளை பதிவிறக்கம் செய்யுமாறு நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள். ஒருவேளை உங்களிடம் வைஃபை இணைப்பு இல்லையெனில் என்ன செய்வது..? வருத்தப்பட வேண்டாம்.

இசை, திரைப்படம், விளையாட்டு போன்றவைகள் இன்றி கூகுள் ப்ளே ஆப்ஸ் ஆனது சில ஆப்லைன் ஆப்ஸ்களையும் தன்னுள் கொண்டுள்ளது. அதை பற்றிய விவரங்களும், அதை டவுன்லோட் செய்வதற்கான வழியும் உள்ளடக்கிய தொகுப்பே இது.

பாக்கெட் ஆப்

பாக்கெட் ஆப்

இந்த ஆப்லைன் ஆண்ட்ராய்டு ஆப் மூலம் நீங்கள் படங்கள், உரை, வீடியோக்கள் மற்றும் ஆஃப்லைனில் அணுக கஜோடும் பிற உள்ளடக்கத்தையம் சேமிக்கலாம். இந்த ஆப்பை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

ஹியர் வீ கோ

ஹியர் வீ கோ

இதுவொரு ஆஃப்லைன் மேப் மற்றும் நேவிகேஷன் ஆப் ஆகும் மற்றும் எளிதாக ஆஃப்லைன் மோடில் இதை பயன்படுத்த முடியும். ஹியர் வீகோ ஆப் ஆனது கூகிள் மேப் போன்ற ஒத்த அம்சத்தை இணைய இணைப்பின்றி அனுபவிக்க உதவும். இந்த ஆப்பை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ப்ளேயர்எப்எம் ஆப்

ப்ளேயர்எப்எம் ஆப்

பயனர் தனக்கு விருப்பமான பகுதியை தெரிவிக்க பல வகையான எஃப்எம் ரிசல்ட்தனை இந்த ஆப் காண்பிக்கும், நீங்கள் விரும்பும் பதிவை சப்ஸ்கிரைப் செய்து பின்னர் ஆஃப்லைன் மோடிலும் இந்த பயன்பாட்டை கட்டமைக்க முடியும். இந்த ஆப்பை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

கீவிக்ஸ் ஆப்

கீவிக்ஸ் ஆப்

இந்த ஆப் பயனரின் ஆண்ட்ராய்டு சாதனங்களில் முழு விக்கிபீடியா தரவுத்தளத்தையும் பதிவிறக்கி பின்னர் பயனர்கள் ஆஃப்லைன் மோடில் அணுக அனுமதிக்கிறது. இந்த ஆப்பை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

பினான்சியஸ் ஆப்

பினான்சியஸ் ஆப்

பயனர்கள் இந்த பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து இதில் உங்கள் செலவு மற்றும் வருமானம் ஆகியவைகளை பதிவு செய்து ஆஃப்லைனில் அதை நிர்வகிக்கத் தொடங்கலாம். இந்த ஆப் ஆனது மாத இறுதியில் பணத்தை மிச்சம் செய்யவும் உங்களுக்கு உதவும். இந்த ஆப்பை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

வாட்ஸ்ஆப்பில் ஹைக் ஸ்டிக்கர்கள் அனுப்புவது எப்படி.?

Best Mobiles in India

English summary
Here are 5 Android Apps that Works Offline and Saves Data. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X