அவசரப்பட்டு கொரோனா தடுப்பூசிக்காக இந்த தப்ப மட்டும் செஞ்சுடாதீங்க.. எச்சரிக்கும் சுகாதார நல அமைச்சகம்..
சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தற்பொழுது இந்திய மக்களை புதிய அறிவிப்பு மூலம் எச்சரித்துள்ளது. குறிப்பாக, கோவிட் -19 தடுப்பூசி பெறுவதற்கு மக்கள் அவசர-அவசரமாக அங்கீகரிக்கப்படாத மொபைல் பயன்பாடுகளைப் பதிவிறக்கம் செய்து முன்பதிவு செய்ய வேண்டாம் என்று அமைச்சகம் எச்சரித்துள்ளது. சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இப்படி நம்மை எச்சரிப்பதற்கான காரணம் என்ன தெரியுமா?

புதிய எச்சரிக்கை அறிவிப்பு
CoWIN - COVID Intelligence Network பயன்பாட்டிற்கு எதிராக ஜனவரி 6-ம் தேதி சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் புதிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கூகிள் மற்றும் ஆப்பிள் ஆப்ஸ் ஸ்டோர்களில் போலி கோவின் ஆப்ஸ்களின் எண்ணிக்கை தற்சமயம் அதிகமாக இருப்பதினால், மக்கள் அவசரப்பட்டு போலி பயன்பாடுகளைப் பதிவிறக்கம் செய்து, மோசடி கும்பலிடம் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் கோவிட்-19 தடுப்பூசி பெற
காரணம், அரசாங்கத்தின் கோவிட்-19 தடுப்பூசி பெறப் பதிவு செய்ய வேண்டிய கோவின் பயன்பாடு தயாரிப்புக்கு முன் நிலையில் இருப்பதால், இன்னும் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வமான பயன்பாடு மக்களின் பயன்பாட்டிற்காக நேரலைக்கு வரவில்லை என்று சுகாதார நல அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

போலி ஆப்ஸ்கள் மூலம் மோசடி
தடுப்பூசி தயாராகி வரும் இந்நேரத்தை ஹேக்கர்களும், மோசக்காரர்களும் போலி ஆப்ஸ்கள் மூலம் மோசடி செய்யத் தயாராகிவிட்டனர் என்று தகவல் தெரிவிக்கிறது.தடுப்பூசிக்காக மக்கள் அதிகம் காத்திருப்பதை உணர்ந்து, அரசாங்கம் வெளியிடும் பயன்பாட்டின் ஒத்த பெயர்களைக் கொண்ட போலி பயன்பாடுகளை ஹேக்கர்கள் உருவாக்கி மோசடி செய்யலாம் என்று கூறப்படுகிறது.

மக்கள் யாரும் அவசரப்பட்டு தடுப்பூசிக்காக இதை செய்ய வேண்டாம்
இந்த போலி ஆப்ஸ்கள் மூலம் மோசடி கும்பல் பணம், மக்களின் தனிநபர் அடையாளம் மற்றும் பிற ஆன்லைன் மோசடிகளை செய்ய வாய்ப்புள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைவரும் பொறுமையாக பாதுகாப்புடன் இருக்கும்படி வழியுறுத்தப்பட்டுள்ளது.
இதனால், மக்கள் யாரும் அவசரப்பட்டு தடுப்பூசிக்காகப் போலி பயன்பாடுகளைப் பதிவிறக்கம் செய்து சிக்கலில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட தகவல்களைப் பதிவிட வேண்டாம்
குறிப்பாக, அரசங்கத்தின் பயன்பாடு பற்றி அறிமுகத்திற்கு முன்னதாக விளம்பரம் செய்யப்படும் என்று சுகாதார நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. போலி பயன்பாடுகளைப் பதிவிறக்கம் செய்து உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பதிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இவர்களுக்கு தடுப்பூசி இலவசம்
அதேபோல், இந்தியாவின் முதல் இரண்டு தடுப்பூசி விநியோக கட்டங்களில், முன்னணி தொழிலாளர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி தொழிலாளர்களுக்கு தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications