டிராய்-ன் டிவி சேனல்களை தேர்வு செய்யும் அப்ளிகேசனை பயன்படுத்துவது எப்படி?

பின்பு உங்களின் பெயர், மொபைல் நம்பர், சர்வீஸ் ப்ரொவைடர் ஆகியவற்றை உள்ளீடாக அளிக்கவும்.

|

நாடு முழுவதும் டிஜிட்டல் டி.வி வாடிக்கையாளர்கள் விரும்பிய சேனல்களை மட்டும் கட்டணம் அளித்து பார்க்கும் புதிய கட்டணமுறை நடைமுறைக்கு வந்துள்ளது. இப்போது கொண்டுவரப்பட்ட புதிய நடைமுறையால் 17கோடிக்கும் அதிகமான
வாடிக்கையாளர்கள் எந்தவிதமான இடையூறையும் சந்திக்கமாட்டார்கள் என டிராய் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

டிராய் டிவி சேனல்களை தேர்வு செய்யும் அப்ளிகேசனை பயன்படுத்துவது எப்படி?

மேலும் வாடிக்கையாளர்களின் சந்தேகங்களுக்கும விளக்கம் தரும் வகையிலும், பின்ப சேனல்கள் அதற்கான கட்டணங்களை வாடிக்கையாளர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் செயிலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது, கண்டிப்பாக இந்த
செயலி அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பயன்படும் வகையில் இருக்கும் என்று தான் கூறவேண்டும்.

அப்ளிகேசன்

அப்ளிகேசன்

Trai Channel Selector App User Guideline என்ற இந்த அப்ளிகேசன் டிராய் இணையதளத்தில் கிடைக்கிறது, பின்பு இதன் மூலம் தங்களுக்கு பிடித்த சேனல்களுக்கான முறையான கட்டணம் என்ன என்பதை மிக தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

பயன்படுத்துவது எப்படி?

பயன்படுத்துவது எப்படி?

வழிமுறை-1
இந்த புதிய அப்ளிகேசனில் கெட் ஸ்டார்ட்டெட் என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்

வழிமுறை-2

வழிமுறை-2

பின்பு உங்களின் பெயர், மொபைல் நம்பர், சர்வீஸ் ப்ரொவைடர் ஆகியவற்றை உள்ளீடாக அளிக்கவும்.

வழிமுறை-3

வழிமுறை-3

அடுத்து உங்கள் மாநிலம் என்ன என்பதை கேட்கும், இந்த அடிப்படையில் உங்கள் மொழி மற்றும்
உங்களுக்கு விருப்பமான சேனல்களை டிராய் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

வழிமுறை-5

வழிமுறை-5

மொத்தம் 550 இலவச சேனல்கள் இருக்கின்றன, இலவச சேனல்களை தேர்வு செய்தபின்பு தான் பே-சேனல்கள் தேர்வு செய்ய முடியும்.

வழிமுறை-6:

வழிமுறை-6:

கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் எச்.டி மற்றும் எஸ்.டி சேனல்களை வழங்கி வருகின்றனர், இதில் இருக்கும் அத்தனை சேனல்களையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு பின்பு தங்களுக்கு தேவையான சேனல்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

வழிமுறை-7

வழிமுறை-7

அடுத்து சேனல் பொக்கே லிஸ்ட் சென்று, அதில் இருக்கும் சேனல் பேக் குறித்த விபரங்களை அறிந்து கொள்ளவும், அதில் மை செலக்சன் என்ற பகுதியை தேர்வு செய்து உங்களின் தேர்வை ஓவர் வியூ செய்து கொள்ளலாம்.

வழிமுறை-8

வழிமுறை-8

மேலும் கட்டண சேனல்கள் எத்தனை, இலவச சேனல்கள் எத்தனை, கட்டாய சேனல்கள் எத்தனை என்பதை நீங்கள் அந்த ஓவர் வியூ பகுதியில் கண்டு கொள்ள இயலும். இந்த முறையின் மூலம் நீங்கள் மாதம் கட்டும் கேபிள் டிவிக்கான கட்டணங்களை பெருவாரியாக குறைத்துக் கொள்ளலாம்.

வழிமுறை-9

வழிமுறை-9

பின்பு இவை அனைத்தும் முடிவு செய்த பின்பு, அதனை பிரிண்ட் செய்து உங்களின் கேபிள் டிவி ப்ரொவைடர்களிடம் கொடுத்துவிட்டால் உங்கள் பங்கு வேலை முடிவுற்றது.

இதனை நீங்கள் கொடுத்துவிட்டால் சில மணி நேரங்களில் உங்களுக்கு தேவையான சேனல்களை உங்கள் கேபிள் டிவி ஆப்பரெட்டர்கள் ஆக்டிவேட் செய்துவிடுவார்கள்.

Best Mobiles in India

English summary
Guide to Get Lowest Pricing for Your DTH Subscription With Trai Channel Selector App: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X