வாட்ஸ்ஆப் பாதுகாப்பு குறித்து தணிக்கை செய்ய மத்திய அரசு நடவடிக்கை.!

|

வாட்ஸ்ஆப் செயலியை உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக இந்தியாவில் அதிகளவு மக்கள் இந்த செயலியைப் பயன்படுத்துகின்றனர். அன்மையில் இந்த செயலியில் பல்வேறு பிரச்சனைகள் வந்த வண்ணம் உள்ளது
என்றுதான் கூறவேண்டும்.

வாட்ஸ்ஆப் பாதுகாப்பு அம்சங்கள்

வாட்ஸ்ஆப் பாதுகாப்பு அம்சங்கள்

இந்நிலையில் வாட்ஸ்ஆப் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தணிக்கை செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 121 இந்தியர்கள்

121 இந்தியர்கள்

குறிப்பாக 121 இந்தியர்கள் உள்பட உலகம் முழுவதும் சுமார் 1400 பேரின் வாட்ஸ்ஆப் கணக்குகள் ஹேக் செய்ப்பட்டதாக
புகார் எழுந்தது. அதிர் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று பிகாசஸ் என்ற SPY WARE மூலம் வாட்ஸ்ஆப் கணக்குகளை வேவு பார்த்ததாக கூறப்பட்டது. இதுகுறித்து மாநிலங்களவையில் காங்கிரஸ் உறிப்பினர் திக்விஜய் சிங் கேள்வி எழுப்பினார்.

விரைவில் களமிறங்கும் மோட்டோரோலா நிறுவனத்தின் முதல் பாப்-அப் செல்பீ கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்.!விரைவில் களமிறங்கும் மோட்டோரோலா நிறுவனத்தின் முதல் பாப்-அப் செல்பீ கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்.!

அரசு நடவடிக்கை

அரசு நடவடிக்கை

கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ரவிசங்கள் பிரசாத்,வாட்ஸ்ஆப்-ன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தணிக்கை செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார்.

தொழில்நுட்பத்துறை அமைச்சகம்

தொழில்நுட்பத்துறை அமைச்சகம்

மேலும் இதுதொடர்பாக வாட்ஸ்ஆப் நிறுவனத்திற்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளதாகவும், அதற்கு அவர்கள் பதில் அளித்திருப்பதாகவும் ரவிசங்கர் பிரசாத்; தெரிவித்தார். பின்பு கூடுதல் விவரங்களைத் தரும்படி வாட்ஸ்ஆப் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக கூறினார்.

 நடவடிக்கை எடுக்கப்படும்

நடவடிக்கை எடுக்கப்படும்

தகவல் பாதுகாப்பு சட்டமுன்வடிவை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும், சைபர் பாதுகாப்பை உறுதிசெய்யாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சமூக வலைதளங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும்மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

Best Mobiles in India

English summary
Govt plans security audit of WhatsApp after hacking attempt: Ravi Shankar Prasad : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X