மக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு!

மத்திய அரசு பொதுமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜ்களை கண்காணிக்க வேண்டுமா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது குறித்து 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

|

இணைய தரவுகளை கண்காணிக்கும் வகையில் 'சமூகவலைதள மையம்' என்னும் அமைப்பை உருவாக்கும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் முடிவு குறித்து கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம், அரசு மக்களை வேவு பார்க்க விரும்புகிறதா எனவும் சந்தேகப்படுகிறது.

மக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு!

மத்திய அரசு பொதுமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜ்களை கண்காணிக்க வேண்டுமா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது குறித்து 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம் கான்வில்கர் மற்றும் டி.ஒய். சந்திரசத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மகுவா மெய்ட்ரா தொடர்ந்த இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அட்டர்னி ஜெனரல் கே.கே வேணுகோபாலின் உதவியை நாடிய பின் விளக்கம் கேட்டு மத்திய அரசிற்கு நோட்டஸ் அனுப்பியுள்ளது இந்த அமர்வு.

ஆகஸ்ட் 20

ஆகஸ்ட் 20

" அரசு பொதுமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜ்களை பதிவு செய்ய விரும்புகிறது. இது கண்காணிப்பு நிலை உருவாக்குவது போன்று இருக்கும்" என நீதிபதிகள் கூறினர்.


மொய்ட்ரா சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.எம் சிங்வி கூறுகையில், சமூகவலைதளங்களை கண்காணிப்பதற்கான மென்பொருளை தயாரிக்க மத்திய அரசு ஒப்பந்தபுள்ளிகள் கோரிய நிலையில், அவற்றை ஆகஸ்ட் 20ம் தேதி திறக்கவுள்ளது. அந்த சமூகவலைதள மையத்தின் உதவியுடன் அரசு சமூக வலைதள தரவுகளை கண்காணிக்க விரும்புகிறது" என விளக்கினார்.

சட்ட அலுவலர் உதவ வேண்டும்

சட்ட அலுவலர் உதவ வேண்டும்

ஆகஸ்ட் 20ம் தேதி ஒப்பந்த புள்ளிகளை திறக்கவுள்ள நிலையில் அதற்கு முன்பாகவே, ஆகஸ்ட் 3 வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்சநீதிமன்ற அமர்வு கூறியுள்ளது. இந்த விசயத்தில் நீதிமன்றத்திற்கு அட்டர்னி ஜெனரல் அல்லது ஏதாவது ஒரு சட்ட அலுவலர் உதவ வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.

டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம்

டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம்

முன்னதாக ஜூன்18 அன்று, சமூக வலைதள மற்றும் டிஜிட்டல் தரவுகளை சேகரித்து ஆராயும் 'சமூக வலைதள தொடர்பு மையம்' அமைக்கும் மத்திய அரசின் முடிவிற்கு தடைவிதிக்கக்கோரும் மனுவை அவசர வழக்காக விசாரிக்க விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.


மொய்ட்ராவின் சட்ட ஆலோசர்கள் கூறுகையில், தனிநபர்களின் டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் இமெயில் போன்ற சமூகவலைதள கணக்குகளை கண்காணித்து, அவர்களின் சமூகவலைதள தரவுகளை வேவு பார்க்க மத்திய அரசு முயல்வதாக தெரிவித்தனர்.

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டென்ட்ஸ் இந்தியா லிமிடேட்

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டென்ட்ஸ் இந்தியா லிமிடேட்

சமீபத்தில், இந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான 'பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டென்ட்ஸ் இந்தியா லிமிடேட்' என்ற நிறுவனம், இத்திட்டத்திற்கான மென்பொருளை தயாரிப்பதற்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Government wants to tap citizens WhatsApp messages : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X