ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் மொபைலில் காட்டுவது எப்படி? வாங்க பார்ப்போம்.!
மேலும் ஒரு வாகனத்தை பற்றி எளிமையாக இந்த ஆப் வசதி மூலம் தெரிந்துகொள்ள முடியும், பின்பு வாகனத்தின் உரிமையாளர் பெயர் கூட இந்த ஆப் வசதியில் தெரிந்து கொள்ள முடியும்.
பொதுவாக அலுவலகம் செல்லும் வாகன ஓட்டிகள், கூலி வேலைகளுக்கும், கட்டிடி வேலைகளுக்கும் இருசக்கர வாகனத்தில் செல்லும் சாதாரண சாமானிய மக்கள் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் மொபைலில் காட்டுவதற்கு ஒரு வழி உள்ளது,குறிப்பாக இந்த பயன்பாடு பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி மத்திய அரசு ஒரு ஆப் வசதியை வெளியிட்டுள்ளது, மேலும் ஒரு வாகனத்தை பற்றி எளிமையாக இந்த ஆப் வசதி மூலம் தெரிந்துகொள்ள முடியும், பின்பு வாகனத்தின் உரிமையாளர் பெயர் கூட இந்த ஆப் வசதியில் தெரிந்து கொள்ள முடியும். குறிப்பாக இதன் மூலம் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் மொபைலில் காண்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வழிமுறை-1:
முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் இந்த செயலியை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டுமென்றால்,
கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து mParivahan எனும் செயலியை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யவும்.

வழிமுறை-2:
அடுத்து இந்த mParivahan செயலியின் முன்புறம் உங்களது மொபைல் நம்பரை டைப் செய்ய வேண்டும், பின்பு உங்களின் மொபைல் நம்பருக்கு ஒடிபி அனுப்பிவைக்கப்படும், பின்னர் அந்த ஒடிபி-நம்பரை அந்த செயலியில் பதிவு செய்ய வேண்டும்.

வழிமுறை-3:
அதன்பின்பு இந்தmParivahanசெயலியில் உங்களுடை பெயர், மாநிலம், பின்கோடு போன்ற தகவல்களை பதிவிட வேண்டும். பின்பு அந்த செயலியில் இருக்கும் REGISTER என்பதை கிளிக் செய்தல் வேண்டும்.

வழிமுறை-4:
பின்னர் அந்த செயலியில் rc அதாவது நீங்கள் தேட நினைக்கும் வண்டியின் எண் பதிவிட வேண்டும். பின்பு வண்டி சாரந்த பல்வேறு தகவல்கள் அந்த செயலியில் காண்பிக்கப்படும்.

வழிமுறை-5:
பின்பு இந்த செயலியில் my rc எனும் விருப்பம் இருக்கும், இதில் உங்களுடைய rc-யை சேமிக்க முடியும்.

வழிமுறை-6:
அடுத்து இந்த செயலியில் dl-எனும் விருப்பம் இருக்கும், இதில் உங்களின் டிரைவிங் லைசென்ஸ் நம்பரை டைப் செய்தால் போதும், உங்கள் டிரைவிங் லைசென்ஸ் சார்ந்த அனைத்து தகவலும் காண்பிக்கப்படும்.


Click it and Unblock the Notifications