உங்களுக்கு தொல்லைதரும் அழைப்புகளை தடுக்க உதவும் கூகுள் ஆப்.!

மேலும் இந்த கூகுள் போன் ஆப் வசதியில் கான்டாக்ட் இல்லாத வியாபார மையங்கள் மற்றும் ஸ்பேம் அழைப்புகள் குறித்து எச்சரிக்கை செய்யும் என கூகுள் சப்போர்ட் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

|

கூகுள் நிறுவனம் சமீபத்தில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்தவண்ணம் உள்ளது, குறிப்பாக இந்நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் மக்களுக்க மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். அதன்படி கூகுள்நிறுவனம் இப்போது புதிய ஆப் வசதியை வெளியிட்டுள்ளது, அது தேவையற்ற மற்றம் தொல்லைதரும் அழைப்புகளை தடுக்க உதவும் என்று கூறப்படுகிறது.

உங்களுக்கு தொல்லைதரும் அழைப்புகளை தடுக்க உதவும் கூகுள் ஆப்.!

குறிப்பாக சில மாதங்களுக்கு தொலைபேசிக்கு வரும் தேவையற்ற மற்றம் தொல்லை தரும் அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றுதான் கூறவேண்டும். பின்பு இதனை கட்டுப்படுத்த ஏராளமான மொபைல் ஆப் வசதிகள் ஆன்லைனில் உள்ளன, இருந்தபோதிலும் இந்த பிரச்சனை முற்றிலும் ஓய்ந்தபாடில்லை என்று தான் கூறவேண்டும். எனவே இந்த பிரச்சனையை தடுக்கும்
வகையில் கூகுள் நிறுவனம் புதிய ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

கூகுள் நிறுவனம்:

கூகுள் நிறுவனம்:

கூகுள் நிறுவனம் முன்னதாக போன்ஆப் பிட்டா பதிப்பில் ஸ்பேம் அழைப்புகளை கண்டறியும் அம்சத்தை சோதனை செய்தது என்பது
குறிப்பிடத்தக்கது. தற்சமயம் ஸ்பேம் கால்களை பில்டர் செய்யும் புதிய அப்டேட்டை கொண்டு வந்;துள்ளது, இதற்கு காலர் ஐடி மற்றம் ஸ்பேம் பாதுகாப்பு (Caller ID and Spam Protection) என்று பெயரிட்டுள்ளது. இதன் மூலம் தேவையற்ற
கால்அழைப்புகளை தானாகவே பிரித்து தடுத்துவிடலாம் என்று கூறப்படுகிறது.

வாய்ஸ்மெயிலுக்கு அனுப்பிவிடும்

வாய்ஸ்மெயிலுக்கு அனுப்பிவிடும்

குறிப்பாக இந்த ஆப் வசதி தானாகவே ஸ்பேம் கால் அழைப்புகளை வாய்ஸ்மெயிலுக்கு அனுப்பிவிடும் என்று கூறப்படுகிறது.இந்த கூகுள் போன் செயலியில் காலர் ஐடி மற்றும் ஸ்பேம் ப்ரோடக்ஷன் ஆன் செய்யப்பட்டு இருந்தால் உங்களுக்கு அழைப்பு விடுப்பவர்களின் விவரங்களை கூட பார்க்கமுடியும் என்று கூறப்படுகிறது.

செட்டிங்ஸ்

செட்டிங்ஸ்

மேலும் இந்த கூகுள் போன் ஆப் வசதியில் கான்டாக்ட் இல்லாத வியாபார மையங்கள் மற்றும் ஸ்பேம் அழைப்புகள் குறித்து எச்சரிக்கை செய்யும் என கூகுள் சப்போர்ட் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அம்சத்தை ஆன் செய்ய இந்த பகுதியில் இருக்கும் செட்டிங்ஸ்-ல் Caller ID and Spam விருப்பத்தை ஆன் செய்ய வேண்டும்.

போன் ரிங் ஆக வேண்டாம் எனில்

போன் ரிங் ஆக வேண்டாம் எனில்

பின்பு ஸ்பேம் அழைப்புகளால் உங்களது போன் ரிங் ஆக வேண்டாம் எனில் filter suspected spam calls விருப்பத்தை தேர்வு செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு நிற ஸ்கிரீன்

சிவப்பு நிற ஸ்கிரீன்

தற்சமயம் மொபைலுக்கு வரும் ஸ்பேம் அழைப்புகளை கூகுளின் போன் ஆப் சிவப்பு நிற ஸ்கிரீன் மூலம் எச்சரிக்கை செய்கிறது,மேலும் இந்த அம்சம் பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Google’s Phone app can now prevent some spam calls from interrupting you: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X